1 பரத் எனும் நான் (பரத்"ஆனே,நேனு ) தெலுங்குப்படத்தை அட்லீ"வேலை"செஞ்சு ARM சர்கார்"எடுத்துட்டார்"போல,வெரிகுட்
=========
2 அறிவோம்"மலையாளம் , நெய் அப்பம் = கச்சாயம்/தேன்குழல்/அதிரசம்
========
3 பசுமை சாலை என்பது பச்சைப்பசேல் வயல்வெளி நடைபாதை.
பசுமை வழி சாலை என்பது மரங்களுக்கு மரண தண்டனை கொடுத்து துக்க அனுசரிப்பாய்"கறுப்பு தார் சாலை போடுவது
============
4 இன்று ஆடிப்பெருக்கு,இன்று ஒரு நாளாவது ஆள் வைக்காமல் பெண்கள் தங்கள் வீட்டு வாசலை கூட்டி ,பெருக்கி ,வகுத்து"கோலம் போடவும்.
=========
5 ஆடிப்பெருக்கு−டாப் 10
1 திருச்சி கல்லணை
2 திருச்சி முக்கொம்பு
3 ஈரோடு −சத்தியமங்கலம் −கொடிவேரி
4 ஈரோடு−பவானி
5 ஈரோடு−கொடுமுடி
7 கோவை குற்றாலம்
6 ஈரோடு −பள்ளிபாளையம்
8 தென்காசி குற்றாலம்
10 பொள்ளாச்சி டாப்ஸ்லிப்ஸ்''
9 ஒகேனக்கல்
11 மேட்டூர் அணை
12 ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்
13 கும்பகோணம்
14 திருவையாறு
15 திருக்காட்டுப்பள்ளி
16 மயிலாடுதுறை
17 மோகனூர்
18 bhavani saagar
======
6
ஆடிப்பெருக்கு டாப் 10 ல் மேட்டூர் அணை விடுபட்டுவிட்டது.அது"தான் டாப்க்கு எல்லாம் டாப்.காதலர்களின் ஜங்ஷன்
=====
7 2000,500 ரூபாய் நோட்டுகளை முறிக்க (சேஞ்ச்) பலர் பேக்கரிகளில்,பொட்டிக்கடைகளில் கேட்டு ஏமாற்றம்.
சிறந்த இடங்கள்
1 டாஸ்மாக்
2 பெட்ரோல் பங்க்
3 பஸ் டிப்போ (எல்லா"கண்டக்டர்களும் பணம் இங்கதான் கட்டியாகனும்)
4 வங்கிகள் (SBI ,IOB தவிர)
5 தனியார் பைனான்ஸ்
6 தபால் நிலையங்கள்
========
8 காக்கா க்கு படையல் வைக்கறவங்க வெச்சதும் அந்த இடத்தை விட்டுபப்போய்ட்டா அதுவா வரும்,கா கா கா னு கத்திட்டு இருந்தா பயந்துக்காது?
=======
9 முன்பின் அறிமுகம் இல்லாத (இருப்பிடம் அல்லாத புதிய இடம்) நீர்நிலைகளில் கத்தி அடித்தல் ,பல்டி அடித்தல் ,ஜம்ப் செய்தல் தவிர்க்கவும் ,பாறைகள் ,சுழல்கள் ஜாக்கிரதை.அரைகுறை நீச்சலாளர்கள் நீர்நிலைகளில் இறங்காதீர்கள்
============
10 பக் வீட் ,எதிர் வீட்டு பிகருங்க/ஆண்ட்டி கள் கிட்ட கடலை போட்டு முடிச்சு அவங்க தூங்கப்போனபின் Fb/ ட்விட்டர் வந்து "என் கிட்ட பேச யார் இருக்கா?" னு புலம்பறாங்க நெட் தமிழர்கள்
===========
11 சிவகார்த்திகேயன் ன் சீமராஜா டீசர் பார்த்தேன்,தன்னை அடுத்த ரஜினியாகவோ,விஜய் ஆகவோ நிலை நிறுத்தும் முயற்சியில் அவரது ஒரிஜினலை இழந்து வருகிறார்னு தோணுது.இந்தப்படம் பிளாப் ஆனால் நல்லது
=============
12 ரெகுலரா டைனிங் டேபிளிலேயே அமர்ந்து சாப்பிட்டுப்பழகியவர்கள் தரையில் சப்பணங்கால் (சம்மனம்)இட்டு அமர்வது கடினம்.அது அவர்கள் எதிர்கால ஆரோக்யக்கேட்டிற்கான அறிகுறி
============
13 காளி யோட மகனை காளிப்பய னு சொல்வாங்களோ?
============
14 சில சினிமா விமர்சகர்கள் பெரிய பட்ஜெட் படங்களின் விமர்சனத்தில் ஆஹா அபாரம் பரிமளா ரீதியில் விமர்சிக்கிறார்கள்.படம் பார்த்தா மொக்கையா இருக்கு.நம்பகத்தன்மை போய்டும்.பப்சுக்கு ஆசைப்பட்டு பேரைக்கெடுத்துக்காதீங்கய்யா என் சிப்சு
=============
15 படிச்ச புத்திசாலிங்க பெரும்பாலும் ஏதோ ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சொம்பு தூக்குபவர்களாகவே இருக்காங்க.அந்தக்கட்சி என்ன தப்பு செஞ்சாலும் அதுக்கு ஒரு நியாயம் கற்பிப்பது,முட்டுக்குடுப்பது.படிப்பறிவில்லாத பாமரனைப்பாருங்க,யார் என்ன தப்பு செஞ்சாலும் தைரியமா விமர்சிக்கிறான்
==============
16 ஸ்டேட் பேங்க் ஆப்
இந்தியா (SBI) வில் அக்கவுண்ட் வைத்திருப்பது வீட்டுக்கு,நாட்டுக்கு,உங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு கேடு தரும்.அந்த பேங்க்ல ஒரு டம்ளர் தண்ணீர் குடிச்சாக்கூட அதுக்கு சர்வீஸ் சார்ஜ் 49 ரூபா போடுவாங்க போல.தபால் நிலையத்தில் அக்கவுண்ட் வைப்பதே சிறந்தது
==============
17 குருவே!பொய் கலக்காத புகழ்ச்சி
மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும்...என்பது உண்மையா?
நம்ம மனசுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் ஒரு புகழ்ச்சி பொய் கலந்திருந்தாலும் அது உண்மையான புகழ்ச்சி னு நாம நம்பிக்குவோம்
=============
18 உழவர் சந்தைல 5 ரூபாக்கு வாங்குன சோழக்கருதை வீட்ல வேக வெச்சு தியேட்டர்ல கொண்டு வந்து சாப்ட்டா கேவலமாப்பார்க்கறாங்க.அதே 5 ரூபா கருதை சின்ன சின்ன கப்ல போட்டு 50 ரூபா னு மூணு பாக்கெட்டா விற்கறதை வாங்கி பெருமையா சாப்பிடறான்
============
19 சோளக்கருது என்பதே சரி,அது என்ன சோழக்கருது?னு கேட்கறாங்க,சோழர்கள் தான் முதன்முதலா பயிரிட்டாங்கனு சொல்லி சமாளிப்போம்
===========
20 சோனி டிவி screenல வெள்ளையா கோடு கோடா தெரியுது - வந்து பார்த்துட்டு estimate -25000- என்ன பண்ணலாம்?
அவன் ரெடி பண்ணினாலும் கலர் கலரா வா கோடு வரப்போகுது? செகண்ட்ஸ்ல வித்துட்டு புதுசு வாங்கவும்
============