Thursday, June 28, 2018

= சர்கார் ஜோக்ஸ் VS சர்தார் ஜோக்ஸ்

சார்.காலா படத்துலதான் முதல் முறையா மாநிற நாயகிகளை உபயோகப்படுத்தி இருக்காங்கனு சொல்றாங்களே?நிஜமா?


அப்டி சொன்ன அறிவாளிகிட்ட பாலுமகேந்திரா ,பாரதிராஜா படங்களை போட்டுக்காட்டவும்



=============


2 குருவே!ஆண்கள் சோகத்தை போக்க சரக்கு அடிக்கறாங்க

பெண்கள் சோகத்தை போக்க ஷாப்பிங் போவாங்க என்பது உண்மையா?
தெரில,அது உண்மையா இருந்தா அது ஆணுக்கு இன்னும் சோகம்.ஏன்னா செலவு பண்றது அவன் காசுலதானே?



=============


3 தலைவரே! ஆளுங்கட்சியின் அத்தனை அமைச்சர்கள் சொத்து விவரங்களை கைப்பற்றி உள்ளது நம்ம IT wing னு செய்தி வருதே?


ஆமா,ஒண்ணு நாம திருடனும்,அல்லது திருடுனவனை மிரட்டி பங்கு போட்டுக்கனும்,இதுதான் அரசியல்



============



4 சார்,நம்ம படத்தோட செகண்ட் லுக் போஸ்டர் ல நீங்க சரக்கு அடிக்கற மாதிரி ஸ்டில்தானே?


அட,எப்டி தெரியும்?
பர்ஸ்ட் லுக் போஸ்டர்ல தம் அடிச்சீங்க,அடுத்து அதானே



==============



5 சார்,உங்க புதுப்பட டைட்டில் என்ன?


சர்கார்
அப்டின்னா?
தமிழ்ல அரசாங்கம் னு அர்த்தம்
ஓஹோ,இது தமிழ்ப்படம் தானே?
அப்ப தமிழ்ல அரசாங்கம்னே வைக்கலாமே?
ஆமா



=============


6 சார்.அன்புமணி கிட்ட என்ன வாக்கு குடுத்தீங்க?


இனி தம் அடிக்கற சீன்ல நடிக்க மாட்டேன்னேன்.ஏன்னா இளைஞர்கள் அதைப்பாத்து கெட்டுடறாங்க
ஓஹோ,இப்ப ரிலீஸ் பண்ணி இருக்கற FL போஸ்டர்ல தம் அடிக்கற மாதிரி இருக்கே?
கொக்கோ கோலா குடிக்காதீங்கனு கூடத்தான் சொன்னேன்,ஆனா கோலா AD ல நடிக்கல?



==============


7 சரத் குமார் நடிச்ச அரசு பட டிவிடி ,,விஜயகாந்த் நடிச்ச அரசாங்கம் பட டிவிடி ,ஹிந்தி ல வந்த சர்கார் பட டிவிடி இந்த 3ம் குடுங்க


எதுக்கு?
சர்கார் னு ஒரு புதுப்படம் வருதாம்.எந்தெந்த சீன ்எங்கங்க இருந்து சுட்டாங்க னு பாத்து வைப்போம்



==============


8 ஏம்மா,பொட்டி படுக்கையோட அம்மா வீட்டுக்கு வந்துட்டே?


ஒரு ஆம்பளை இன்னொரு ஆம்பளையை ரசிச்சுப்பாத்துட்டிருந்தா வேற என்ன பண்ண?



==============


9 வருசத்துக்கு எத்தனையோ படங்கள் சிகரெட் குடிப்பது தண்ணி அடிப்பது போன்ற காட்சிகளுடன் வருது..அதையெல்லாம் விட்டுட்டு விஜய்யை மட்டும் டார்கெட் வைப்பது ஏன்?


தப்பை யார் செஞ்சாலும் தப்பு தப்புதான்.ரசிகர்களை தவறான பாதைக்கு தூண்டுவதும் தார்மீகப்படி தவறுதான்



==============


10 சார்.நம்ம படத்தோட செகண்ட் லுக் போஸ்டரை நடுராத்திரி 12 மணிக்கு விடப்போறோம்


சார்,இது யு படம்தானே?
ஆமா
ஆமாய்யா
,தமிழ்ப்படம் தானே?
இல்ல.பகல்லயே விடலாமே?ஏன் SS music சேனல் ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட் மாதிரி மிட்நைட்ல விடனும் ?



==============


11 இனி விஜய் ரசிகர்கள் எல்லாரும் மாருதி கார் ,ஆடி கார் மாதிரி சர் கார் வாங்கிடுவாங்களோ?


============


12 சார்.நீங்க விட்டிருக்கற செகண்ட்லுக் போஸ்டரும் இளைய தலைமுறையினரை தவறான வழிக்குதான் கொண்டு போகும்


எப்டி?
லேப்டாப் பை நேரடியா மடில வெச்சு ஒர்க் பண்ணா அந்த ஹீட் கீழே இறங்கி ஆண்மை பாதிக்கப்படுமாம்.டவுட்னா டாக்டர்ட்ட கேட்டுப்பாருங்க



=============


13 சார்,ஏன் தம் அடிக்கற சீன்ல நடிக்கமாட்டேன்கற வாக்கை மீறுனீங்க?


ஒரு தடவை நான் ஒரு வாக்கு குடுத்தா நானே அதை காப்பாத்த மாட்டேன்



==============


14 யார் கிட்டயும் இல்லாத கெட்ட பழக்கம் என் கிட்ட இருக்கு,அது சொன்ன பேச்சை காப்பாத்தறது


அன்புமணி கிட்ட என்ன சொன்னீங்க?
தம் அடிக்கற சீன் ல இனி நடிக்க மாட்டேன் னேன்
ஏன் சர்கார் ல நடிச்சீங்க?
அதான் கெட்ட பழக்கம்னு உணர்ந்து சொல்வாக்கை காப்பாத்தறதை விட்டுட்டன்



==================


15 தலைவரே!சர்காரால் 8 வழி சாலை திட்டம் கிடப்பில் போடப்பட்டது னு நியூஸ் வந்துதே,நிஜமா?


யோவ்.சர்கார்ஙகறது ஒரு பட டைட்டில்.நம்ம ஆன் லைன் போராளிங்க ஒரு சினிமா பட அறிவிப்பு வந்ததும் புரட்சியை ஒத்தி வெச்ட்டாங்கனு நக்கல் பண்றாங்க



===============


16
தலைவரே!சர்கார் பட அறிவிப்பு வந்ததுல இருந்து ஏன் பேய் அறைஞ்ச மாதிரி இருக்கீங்க?
சர்க்காரியா கமிஷன் பத்தின கதைக்கருவோனு திகிலா இருக்கு



=============


17கமல் ரசிகர்கள் ஏன் கடுப்புல இருக்காங்க?


பாரதிராஜா டைரக்சன்ல வந்த சிகப்பு ரோஜாக்கள் ஸ்டில்ல காபி அடிச்சு சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விட்டுட்டாங்களாம்


==============


18 சார்

சர்தார் ஜோக்ஸ் புக் இருக்கு
வேணுமா?
என்னய்யா?அப்டேட் ஆகாம இருக்கீங்க?சர்கார் ஜோக்ஸ் தான் இப்ப ட்ரெண்டிங்க்




=============


19 ஆண்களுக்கு அதிக அளவிலான டென்ஷன், ப்ரஷர் கொடுக்குறது எது?


திருமணம் ஆகாத ஆணுக்கு பணம் தான் பிரச்னை.திருமணம் ஆன ஆணுக்கு யார் அதிக டென்ஷன்/பிரஷர் தருவாங்கனு ஊருக்கே தெரியும்




==========


20 சார்,வருமான வரியை வருடா வருடம் ஒழுங்கா கட்றீங்களா?


இல்ல
அரசாங்கம் வெளியிடற "புகை உடலுக்கு பகை"விளம்பரம் பாக்கறீங்களா?
பாக்கறேன்,பாலோ பண்றதில்ல குட்,நம்ம பட டைட்டில் என்ன?
சபாஷ்.அரசாங்கத்துக்கு எதிரா நடந்துட்டு அரசாங்கம் னு டைட்டில் மட்டும் வெச்சா போதுமா?
சர்கார்




=============