1 மேடம் ,நீங்க ராஜ துரோகம் பண்ணிட்டதா சொல்றாங்களே?
அவங்க கொள்ளை அடிச்சதை நான் கொள்ளை அடிச்சேன்,இது தப்பா?
============
2 எல்லா பாடத்துலயும் பாஸ் ஆன உங்க பையன் ஒரு பாடத்துல மட்டும் பெயில் ஆகிட்டானாமே?ஏன்?
அவன் விஜய்"ரசிகன்."வரலாறு" புக்கை தொடக்கூட மாட்டானாம்
==============
3 யாமம் என்றால் கருப்பு. யாமினி என்றால் கருப்பழகி என்று சொல்லலாம்.
அதெப்டி டீச்சர்? கருப்பினி னு தானே அர்த்தம் வருது?
============
4 மேடம் ,எவனோ ஒருத்தன் உங்க முதுகுல ,நெஞ்சுல ,தொடை ல கோலம் போட்டுட்டு போய் இருக்கான்,நீங்க தூங்கீட்டீங்களா?
யோவ்,அது டாட்டு ,நானா போய் போட்டுக்கிட்டது
============
5 டாக்டர் ,தினமும் "கோலம்" போடும் பெண்களுக்கு..
"சுகபிரசவம்" அமையுமாமே?நிஜமா?
வீட்டு வேலைகள் குனிஞ்சு நிமிர்ந்து செஞ்சாலே சுகப்பிரசவம் அமையும்.அதுக்கு வேலைக்காரி வெச்சுக்கறாங்க.வேலைக்காரிங்களுக்கு சுகப்பிரசவம் ஆகுது,இவங்களுக்கு ஆபரேஷன் தான்
===========
6 திரும்புற பக்கம் எல்லாம் எவனாச்சும் எதாச்சும் பொண்ணு கிட்ட பேசிட்டு தான் இருக்கான் நம்ம தான் வேடிக்கை மட்டும் பாத்துட்டு இருக்கோம்
நீங்க வேடிக்கை பாக்கறதாலதான் அவங்க வெறும் பேச்சோட நிறுத்திட்டாங்க
=
7 ஆணோ, பெண்ணோ ரகசிய தகவல் இருந்தால் மட்டும் டிஎம் பயன்படுத்தலாம் என்பதுதான் எனது எண்ணம்
சொல்லீட்டீங்க இல்ல?இனி டெய்லி 10 பேரு "என் கிட்ட ஒரு ரகசியத்தகவல் இருக்கு"னு வரப்போறாங்க
============
8 நானும் வழுக்கைத்தலைல டோப்பா வெச்சுக்கிட்டேன் ,இனி நயன்தாரா க்கு என்னை பிடிக்குமில்ல?
என்ன உளர்றே?
"விக்"னேஷ்"வரன்களை"த்தான் அவரு விரும்பறாராமே?
=================
9 வித விதமா என்ன சாப்டாலும் கொஞ்சம் சாம்பார் சாதம் ,கொஞ்சம் ரசம் சாதம்,கொஞ்சம் தயிர் சாதம் சாப்டா தான் நல்லாருக்கு
ஓஹோ,இந்த மூணு சாப்ட்டாலே எங்களுக்கு வயிறு நிரம்பிடுமே மேடம்,இவை போக என்ன சாப்பிடுவீங்க?
புளிசாதம்,லெமன் சாதம் ,தக்காளி சாதம்.டயட்ல இருக்கறதால இதோட போதும்
================
10 சார் ,தியேட்டர்"ல கூட்டமே இல்ல
வசனம் எழுதுனவர்தான் காரணம்
எப்டி?
வேங்கை மகன் ஒத்தைல நிக்கேன் னு பஞ்ச் எழுதுனாரு,செண்ட்டிமண்ட்டா ஒத்தைல நிக்க வேண்டியதா போய்டுச்சு
===========
11 டைரக்டர் சார்,துருவ நட்சத்திரம் மாதிரி ஒரு படம் நீங்க எடுக்கனும்,அதை நாங்க பாக்கனும்
அட்லி = மாதிரி என்ன மாதிரி.படம் ரிலீஸ் ஆகட்டும்,தக்காளி,அதே கதையை படமா எடுத்துடறேன்
============
12 குருவே!பேசாத வார்த்தைக்கு நீ எஜமான்
பேசிய வார்த்தை உனக்கு எஜமான். என்ற தத்துவம் உண்மையா?
ஆமா,ஆனா பேசுனாலும் ,பேசலைன்னாலும் ,கருத்து சொன்னாலும் ,சொல்லலைன்னாலும் அடி வாங்கறதும் "எஜமான்" தான்
==============
13 சார்,காலா படம் ஓட முடியாம பண்ணிட்டோம்
அடேங்கப்பா ,எப்டி?
தமிழனா இருந்தா காலா பாக்காதே,காலா பாக்காதவங்க RT பண்ணு ன்னோம் 384 Rt ,எப்பூடி?
அட அறிவுக்கொழுந்தே,தமிழ் நாட்டோட மக்கள் தொகை தோராயமா 7 கோடி + ,அதுல ரஜினி ரசிகர்கள் குறைந்தபட்சம் 70 லட்சம் பேரு.384 எங்கே?70L எங்கே?
===========
14 அவ நம்பர் கேட்டா அவங்க அப்பா நம்பர் தந்து இருக்கா இப்ப என்ன பண்ண?
அவங்க அம்மா நெம்பர் கேளுங்க.அப்பா ,தங்கைனு பேமிலி மெம்பர் நெம்பர் எல்லாம் கேளுங்க.
=============
15 மாப்ளை,கல்யாணம் ஆகி 10,நாள் ஆகியும் ஏன் முதலிரவு நடத்தல?
டெய்லி எதுனா சாக்கு சொல்லி உங்க பொண்ணு வெளிநடப்பு பண்ணிடறாப்டி
==============
16 சார்,மீடியாவுக்கோ ,மத்தவங்களுக்கோ தகவல் தெரிவிக்காம மக்களுக்கு உதவி செஞ்சதுக்கு நன்றி,மகிழ்ச்சி
ம்ம்
சார்,அந்த க்ளிப்பிங்க்ஸ் எப்படி வெளியாச்சு?
யாருக்குமே தெரியாம போய்டக்கூடாதுனு ஒரு ஏற்பாடு
==============
17 ரைட்டர் சார்,கதையை தபால்ல அனுப்பாம ஏன வேற ஒருத்தரோட ் வாய்ஸ் மெசேஜா அனுப்பறீங்க?
எடிட்டர் சார்,எழுத்துக்களே பேசவேண்டும்.. எழுத்தாளனல்ல..னு நீங்கதானே சொன்னீங்க?
================
18 மேனேஜர்,சார் நீளமாக நகம் வளர்க்கும் பழக்கம் இல்லாத பெண் டைப்பிஸ்ட்கள் தேவைனு விளம்பரம்"பண்ணி இருக்கீங்களே?ஏன்?
1 கீ போர்டு அடிக்கடி மாத்த வேண்டியதா போய்டுது
2 நகக்கீறல் பட்டா விஷம் னு டாக்டர் சொன்னாரு
3.சம்சாரம் வேற சந்தேகப்பிராணி
=================
19 விஜய் ரசிகர்கள் = இந்த ஸ்மார்ட்போன் காலத்துல, வீட்ல, பக்கத்துக்கு வீடுகள்ல ஒருத்தர் கிட்ட கூட ஸ்மார்ட்போன் இல்லாம இருக்குமா ?
இருக்கும்.ஆனா பைக்ல கிளம்புனது,மெயின் ரோடு ,டீக்கடை,வீடு ,இப்படி வரிசையா கரெக்ட்டா போட்டோ வருதே அது அப்படி?
===========
20 சார்.ஆறுதல் சொன்ன சம்பவம் எத்தனை மணிக்கு நடந்தது?
இன்று அதிகாலை 1.30 am
பொதுவா பேப்பர் எத்தனை மணிக்கு லாஸ்ட் நியூஸ் கவரேஜ்?
மிட் நைட் 12 − 12.30.ஏன்னா 3 மணிக்கு பேப்பர் பஸ் ஏறிடனும்
அப்போ இன்னைக்கு பேப்பர்ல இந்த நியூஸ் எப்டி வந்தது?
நாங்கதான் முன் கூட்டியே...சாரி.தெரில
============