1 ஜெயலலிதா ஒரு வாரம் கழித்து அப்போலோவில் சேர்ந்திருந்தால் நான் அமைச்சராகி இருப்பேன்- கருணாஸ்
ஜெ உயிரோட இருந்தப்ப இதை சொல்லி இருந்தா அந்த அம்மா இவரை அப்போலோல சேத்தி இருக்கும்
அம்மா வீட்ல விட்டுடுங்க
ஆபீஸ் போறப்போ அந்த முக்குல எறக்கி விட்டுடுங்க
ஜெ உயிரோட இருந்தப்ப இதை சொல்லி இருந்தா அந்த அம்மா இவரை அப்போலோல சேத்தி இருக்கும்
===========
2 மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய ரஜினிகாந்த் மீது தேசத்துரோக வழக்கு பதிய வேண்டும் - ் சரத்குமார் # முதல்ல தேசதுரோக வழக்குன்னா என்ன?அது எதெதுக்கு பிரயோகிக்கப்படுதுனு தெரிஞ்சிட்டு கருத்து சொல்லுங்க நாட்டாம
=============
3 ரஜினியின் பேச்சு பாஜக குரலா? அல்லது அதிமுகவின் குரலா என்ற சந்தேகம் எழுகிறது!
-ஸ்டாலின் # யாரோட குரலோ,ஆனா துண்டு சீட்டு பாக்காம கரெக்டா சொல்லிட்டாரே?தடுமாறலயே?
=============
4 தமிழகத்துக்கு விடிவு காலம் பிறக்கும்னா கூவத்தூர் ரகசியங்கள் சொல்ல தயங்க மாட்டேன் -கருணாஸ்
#தமிழகத்தின் விடிவெள்ளியே!உங்களால பலர் வாழ்க்கைல சனியே!சீக்கிரம் சீக்ரெட்ட எடுத்து விடுங்க
=============
5 அனைத்து விஷயங்களிலும் குழப்பமின்றி தெளிவாக கருத்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த் - தமிழிசை
# பாஜக கருத்தை தான் ரஜினி னு சொல்றாரோனு எங்களுக்கு குழப்பமா இருக்கு
============
6 ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டியவர் ஜெ. தான்.. மாதிரி சட்டசபையில் ஸ்டாலின் சரமாரி தாக்கு #இதையாவது துண்டு சீட்டு பாக்காம சொன்னாரா?
=============
==============
8 பெருந்துறை சிப்காட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் , 26 -ஆம் தேதி முதல் சிப்காட் வளாகத்தில் போராட திட்டம்
#சாயக்கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பு,பல தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பறி போகும் ,ஆனாலும் வேற வழி இல்லை 10,000 வேலைவாய்ப்புகளுக்காக 2 லட்சம் குடும்பம் பாதிக்கப்படக்கூடாது
===========
9 செய்தி : அம்மன் வேடத்தில் பிக்பாஸ் ஜூலி
# அடுத்ததா சினேகன் சிவபெருமானா வருவாரோ?ஆரவ் கிருஷ்ணபரமோத்மா
==============
10 மன்மோகன் சிங் இப்போது பேச தொடங்கிவிட்டார், நீங்கள்தான் மியூட் ஆகிவிட்டீர்கள்
#ShivSena # அவரும் எதிர்க்கட்சி ஆனதும் பேசத்தொடங்கிடுவார்
===========
11 குதிரை பேரத்திற்கு பெயர் போனது காங்கிரஸ்தான்” - பிரகாஷ் ஜவடேகர் # நாம யானை பேரத்துக்கு பேர் போனவங்களா?
================
12 மோசமான ஆட்சியில் இருந்து நல்ல ஆட்சியை நோக்கி இந்தியா இன்று சென்று கொண்டிருக்கிறது - பிரதமர் மோடி # அப்ப இந்த 4 வருசமா நல்ல ஆட்சி இல்ல,இனிமே வரப்போற ஆட்சிதான் நல்ல ஆட்சியா?
==============
13 தூத்துக்குடிக்கு சென்று நாடகமாட விரும்பவில்லை - பொன்னார் #
அப்போ ரஜினி நாடகமாடினார்ன்னு சொல்ல வரறீிங்க?
நீங்க அங்கே போனா நடமாட முடியாதபடி ஜனங்க பண்ணிடுவாங்க,அவ்ளோ காண்ட்ல இருக்காங்க
============
14 முதல்வர் கனவுடன் யார் வேண்டுமானாலும் வரலாம்; முதல்வராக ஸ்டாலினுக்கு மட்டுமே தகுதி உண்டு - வைகோ #
2 வருசத்துக்கு முன்னேயே இதை சொல்லி இருந்தா பாவம் ம ந கூ வே உருவாகி இருக்காது.விகாந்த்தும் அவர்வழில அக்கடானு இருந்திருப்பார்.இப்டி உசுப்பேத்தி ...
==============
15 நடிகனான என்னை பார்ப்பதால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி கொள்வார்கள் - ரஜினி #காலா காலத்துல கரெக்டா வந்துட்டாரேனு சந்தோஷப்படுவாங்க,அடுத்த வாரம் காலா ரிலீசுக்கு இப்பவே ப்ரமோ?
=============
16 4 ஆண்டு சாதனையை சொல்ல ஓராண்டு போதாது - தமிழிசை பேட்டி #மக்கள் படும் வேதனையை சொல்ல 40 வருசம் போதாது
============
17 ஆளுநர்களின் அலவன்ஸ் தொகை அதிகரிப்பு # அவங்களுக்கு எவ்வளவோ எக்ஸ்ட்ரா செலவு இருக்கு.நிர்மலா தேவிகளுக்கு டிப்ஸ்,கமிஷன் குடுக்கனும்
===========
18 முதல்வராக ஸ்டாலினுக்கு மட்டுமே தகுதி உண்டு - வைகோ
#உங்களுக்கு தெரியுது
தமிழ்நாட்டுஜனங்களுக்குத்தெரியலயே?கடைசி வரை செயல்தலைவரை எதிர்க்கட்சித்தலைவராவே வெச்சிருக்காங்க
============
19 மு.க.ஸ்டாலினை முதல்வராக்க வேண்டுமென்ற வைகோவின் உறுதியை விசிக வழிமொழிகிறது
- திருமாவளவன் # அடேங்கப்பா,முக்கியத்தலைவர்கள் எல்லாம் முடிவு எடுத்துட்டாங்க,இனி ஜனங்க தான் பாக்கி
=============
20 ரஜினியின் கருத்துக்கு 80 சதவீத மக்கள் வரவேற்பு: தமிழருவி மணியன் கருத்து
#இந்த கணக்கு குத்துமதிப்பா எடுத்ததா?குத்துமதிப்பு ஜட்ஜ் குமாரசாமி கணக்கா?
=============