1 சார்,அங்கே 200 ரூபா கோஷ்டிங்க உங்களை தாக்கீட்டு இருக்காங்க,பதிலடி"தராம ஆப்லைன்"போய்ட்டீங்களே ,ஏன்?
ஏப்பா,அவங்களுக்கெல்லாம்"படி"அளக்க"ஆள் இருக்கு,நாம உழைச்சாதான் நமக்கு"காசு
==========
2 முன்னாள் சாராய வியாபாரியும்
இந்நாள் பாமக முக்கியப்புள்ளியும்
மேடைகளில் கண்ணியமாகப்பேசத்தெரியாதவருமான காடுவெட்டி குரு 62 வயதிலேயே ஆரோக்யக்குறைவின்காரணமாக ஆஸ்பத்திரியில் இறந்தார் ( 26/5/18)
===========
3 ரயில் வந்த நாள் முதல் இந்த நாள் வரை தண்டவாளத்தில் கருங்கற்களையே கொட்டி வைக்கிறார்கள்.ஒரு டெவலப்பே இல்ல,நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மொசைக் கல்லே கொட்டுவோம்
=========
4 நண்பனை நாளைக்கு கூட பாலோ பண்ணிக்கலாம்,எதிரியை இன்னைக்கே பாலோ பண்ணு.
ஏன்னா எதிரி எப்பவும் உன் கண்காணிப்பு வட்டத்துலயே இருக்கனும்
=============
5 தியேட்டருக்கு இவனுங்க லேட்டா வந்துட்டு நம்ம முகத்துல லைட் அடிச்சு நம்மை தண்டிக்கறானுங்க,அடேய்
========
6 ஒரு ஆடியோவோ ,வீடியோவோ ரிலீஸ் ஆகும் ஒவ்வொரு தருணத்திலும் ஒரு பிரச்சனை மூடி மறைக்கப்படுககிறது,அல்லது புது பிரச்சனை வரப்போகுது # அப்போலோவில் ஜெ பேசிய ஆடியோ ரிலீஸ்டு
===========
7 எதிரி உனக்கு வலிப்பது போல் அடித்தால் நீ திருப்பிக்கொடுக்கும்போது எதிரியின் குடும்பத்துக்கே வலிக்கனும்
==========
8 ஒரு ஜாதிக்கட்சியோட அடிபொடி"டேய்,எங்க தராதரம்"என்ன"தெரியுமா?"னு கேட்டாங்க"
தெரியாதுங்க்ணா சொன்னா தெரிஞ்சுக்கறேன்" னேன்
கெட்ட வார்த்தைல திட்றாங்க.
இது தான் தராதரம் போல
==============
9 ஜெ வோட உணவுப்பட்டியல் ரெடி பண்ணுன ஆள் பேட்டா கடை ல வேலை செஞ்சவரா இருக்கும்.டைம் பாருங்க
5.55 am
7.55am
1.55pm
11.55am
3.55pm
இப்டிதான் வருது,
7.45pm
அதையே
6
8
12
2
இப்டி வெச்சா ஆகாதா?
4
8
=================
10 வங்கிகள் நட்டம் அடைவதை"தடுக்க பேங்க் மேனேஜர் லோன் சேங்க்சன் பண்ண தொழில் அதிபர்களிடம் கமிஷன் வாங்குவதை தடுத்தாலே/கண்காணித்தாலே போதும்.பைனல் அப்ரூவல் பேங்க் மேனேஜர் அதிகார வரம்புக்கு உட்பட்டு இருக்கக்கூடாது
===============
11 இந்த உடம்பு தான் நமக்கிருக்குற ஒரே ஆயுதம் இத உலகத்துக்கே தெரியப்படுத்துவோம்-காலா
இதை நான் வழிமொழிகிறேன்-
நிர்மலா தேவி
கவர்னர்
==============
12 டாக்டர்,அனாசின் 4 வழிகளில் குணப்படுத்தும் அனாசின் சாப்பிடுங்க. எங்க பாட்டி அதைத்தான் சாப்பிடுவாங்கனு பலர் கருத்து சொல்றாங்க ,அது நிஜமா?
அன்னாசி பழம் சாப்ட்டாலாவது உடம்புக்கு நல்லது.அனாசின் சைடு எபக்ட் அதிகம்
==============
13கமல் ரசிகரின் டைரியிலிருந்து
ரஜினியின் சொந்தப்படங்கள்
1 மாவீரன் −தோல்வி
2 வள்ளி−படுதோல்வி(ரஜினி கெஸ்ட் ரோல்)
3 பாபா −அட்டர் பிளாப்
4 காலா(தனுஷ் பேரில் ரஜினி எடுத்த சொந்தப்படம்)
===============
14 பணிநேரத்தில் FB ,ட்விட்டர் ,வாட்சப் மாதிரி சமூகலலைத்தளம் அதிகம் உபயோகிக்க முடியாதோர்
1 பஸ்,லாரி,கார் டிரைவர்கள்
2 -பைலட்கள்
3 ரயில்,கப்பல் ஓட்டுனர்கள்
============
15 மேடம்.உங்க அப்பாவை "தலைவர்"னு"கூப்பிடறீங்களே?வீட்ல எப்டி கூப்புடுவீங்க?
அப்பா/டாடி னு
அப்போ ஏன் இங்க மட்டும் இப்டி?
=============
16 தோசை,ரோஸ்ட்,பூரிகளு் க்கு ஹோட்டல்களில் மவுசு ஏற்படக்காரணம் சப்பாத்தி,புரோட்டா போல பழசை புதுசு போல் சுட வெச்சு தர முடியாது என்பதால்
fresh vs seconds
===============
17 பொண்டாட்டிங்க (ஒருமை ,மரியாதைச்சொல்)சிரிச்ச முகமா வாசல்ல நின்னு புருசனை வரவேற்றா அதுக்கு ரெண்டே காரணம்தான்
1 ஊர்ல இருந்து சம்சாரத்தோட சொந்தபந்தங்கள் டேரா
2 நம்ம சம்பள நாள்
===============
18 பொதுவா நல்லா படிச்ச நெட்டிசன்கள் ஒரு விஷயத்தை ஆதரிச்சா அது புட்டுக்கும் (உதா 200 ரூபா கோஷ்டிகளின் திமுக ஆதரவு)ஒரு விஷயத்தை எதிர்த்தா அது மக்கள் ஆதரவைப்பெறும் (உதா ரஜினி எதிர்ப்பு)
============
19 ரஜினி பாஜக வோட கையாளா?னு ஒரு பக்கம் விவாதம் நடக்குது,எது எப்படியோ அடுத்த தேர்தல்ல திமுக ,அதிமுக 2 கட்சிகளுமே ரஜினி வாக்குவங்கி எவ்ளோ வருமோ?னு கதிகலங்கி இருப்பதன் அறிகுறிதான் இவ்ளவ் ரஜினி எதிர்ப்புகள் (கமல் மீது அவ்ளோ எதிர்ப்பு இல்லாததற்குரீசன் அவர் என்னத்த ஓட்டு வாங்கிடப்போறார்?)
============
20 அன்பானவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விலகுவது போன்ற உணர்வு வந்தால் அது உங்கள் மன பிரமையே!ஏன் எனில் அன்பு ஒருநாளும் விலகுவதும் இல்லை,வெறுப்பதும் இல்லை,மீறி"நிகழந்தால் அது உண்மையான அன்பில்லை=======================