Wednesday, May 30, 2018

நிபா வைரஸ் கேரளாவை தாக்கி இருப்பது அதிர்ச்சிதான்.ஏன்னா ...

 அணில்"கடிச்ச கொய்யா இனிக்கும் ,கிளி கொத்துன பழம் தித்திக்கும்னு இனி யாரும் பறவை ,விலங்கு எச்சில் பழத்தை சாப்ட்ராதீங்க.அது வவ்வால் கடிச்ச பழமாவும் இருக்கலாம் விழிப்புணர்வு


=========



2 டிபார்ட்மெண்ட்டல் அனவுன்ஸ்மெண்ட்.ஏசி கோச் ,ரிசர்வ்டு கோச் ல தண்ணீர் பிடிக்கவும் னு எல்லா ரயில்வே ஸ்டேஷன்லயும் அறிவிப்பு வருது.ஆனா ஒரு ஸ்டேஷன்ல கூட "அன்ரிசர்வ்டு கோச்"ல தண்ணி இல்ல.பிடிங்க னு சொல்றதே இல்ல. அவங்க என்ன தக்காளி தொக்கா?



=========


3 நெட் தமிழன் "கும்பல் னா
எனக்கு அலர்ஜி னு சொல்லிட்டு எப்பா பாரு பொண்ணுங்க ரயில்லயே தான் குடி இருக்காப்டி



===========


4 நம்மாளுங்க பயணங்களில் பசிக்கும்போது சாப்பாடோ,டிபனோ முதல்ல சாப்பிட மாட்டாங்க.பன் ,டீ,வரிக்கி,சுருள் கேக்,தேங்காபன் னு இப்டி எதுனா சாப்டறது.அப்றம் ஒரு மணி நேரம் கழிச்சு பசி தாங்காம சாப்பாடு சாப்டறது,முதல்லியே இதை செஞ்சா காசாவது மிச்சமாகும்


==========



5 தூத்துக்குடி பிரச்சனை தமிழக முதல்வர் பதில் சொல்ல வேண்டியது.ஆனால் சம்பந்தமே இல்லாமல் ஹெச் ராஜா அதற்கு முட்டுக்குடுப்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை டைப் ஒப்புதல் ஸ்டேட்மெண்ட்


===========


6 தூத்துக்குடி ஆலை பிரச்சனையில் மக்கள் சார்பாக குரல் கொடுப்பவர்கள்தான்"சமூக நலன் கொண்டவர்கள்.அரசுக்கோ ,ஆலை நிர்வாகத்துக்கோ ஆதரவு தெரிவிப்பவர்கள் விலை போன
"100% வியாபாரி"கள்


=============


7 தூத்துக்குடி ஆலை பிரச்சனை சுமூகமாகத்தீர Ops ,Eps,h.ராஜா இவங்க குடும்ப உறுப்பினர்களை ஒரு மாசம் தங்க விட்டு கதறடிக்கனும்.ஆலையால பாதிப்பில்லைனு சொன்ன அதே வாயால ஆமா பாதிப்புதான்னு உணர வைக்கனும்



============



8 எப்படியும் அடுத்தமுறை ஆட்சிக்கு வர முடியாது,இருக்கும் வரை கிடைச்சதை எல்லாம் சுருட்டு என்பதே அதிமுக வின் தாரக மந்திரம்



==========



9 பொண்ணைப்பெத்தவரும்,இலக்கியப்படைப்பாளியும் ஒண்ணு.ஒரு டைம் நம்ம படைப்பை காமிச்ட்டா விட்ரனும்.பிடிச்சிருக்கா?கருத்து சொல்லுங்கனு கேட்டுட்டு இருந்தா கெத்து இருக்காது


==========



10 நெற்றியில் விபூதி,குங்குமம் ,உதட்டில் சிரிப்பு என வளைய வரும் EPS & OPS கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருப்பது வியப்பு.பண்றதெல்லாம் துரோகம் ,பாவம்.ஆனா என்ன தைரியத்துல கோயில் போய் சாமி கும்பிடறாங்க?


==========


11 சந்தேகம்
1 யூனிபார்மில் இல்லாத மஞ்சள் உடை அணிந்தவர்கள் சுட்டது தெரிகிறது.அவங்க யாரு? 2 துப்பாக்கி சூடு ஒரு கலவரத்தில் பிரயோகிக்கப்படுதுன்னா புல்லட் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி காயம் இருக்கனும்.இறந்தவர் அனைவருக்கும் குறி தலை/நெஞ்சு 3 சம்பவம் நடந்தப்ப கலெக்டர் ஏன் அங்கே இல்ல?

==========
12 சந்தேகம்
4 தூத்துக்குடில 100 நாளா போராட்டம் நடந்தும் ,முதல்வர் ஏன் ஆறுதல் சொல்லக்கூட ஸ்பாட்டுக்கு வர்ல?கேன்சர் பயமா? 5 முன் எச்சரிக்கை நடவடிக்கையா போராட்டக்குழுவின் முக்கிய ஆட்களை கைது செய்யாமல் கொலை செய்தது ஏன்?யார் தந்த ப்ராஜக்ட் அது? 6 அரசுகேபிளில் குறிப்பிட்ட செய்தி பிளாக்டு


==========


13 ஷாப்பிங்க் மால் ,தியேட்டர் ,ரயில்வே ஸ்டேஷன்களில் எஸ்கலேட்டரில் போய் பழக்கம்இல்லாதவர்கள் கைக்குழந்தையுடன் முதல் அனுபவமாக ழுயற்சிக்காதீர்கள்.படிக்கட்டு வழி பயணமே ஆரோக்யத்துக்கு நல்லது



===========



14 234 தொகுதி மக்களும் நெ1 திருடன் திமுக வையும் ,நெ2 திருடன் அதிமுக வையும் ஒதுக்கி அவரவர் தொகுதி நல்ல நேர்மையான சுயேட்சையை வெற்றி பெற வைத்தால் புதிய புரட்சி உருவாகும்.ஒரு பயம் வரும்.மாறாக மாத்தி மாத்தி இந்த 2 திருடன்களையே தேர்ந்தெடுத்தா இப்டித்தான் காலாகாலத்துக்கும்


============



15 ஒரு பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆக விடக்கூடாது.தாத்தா ,அப்பா,மகன் ,பேரன் என பரம்பரை பரம்பரையா ஒரே குடும்பம் கொள்ளை அடிக்க விடக்கூடாது.காங் −நேரு பரம்பரை ,திமுக −கலைஞர் பரம்பரை


============



16 இந்த அசாதாரணமான சூழலில் தூத்துக்குடிக்கு புதிய கலெக்டராகப்பொறுப்பேற்க வருபவர் 45+ வயது உள்ளவராக இருந்தால் அனுபவம் பேசும்.இளமையான நபர் குருவி தலை பனங்காய் கதை தான்


=============



17 ஷூட்டிங்க் ஆர்டர் யாரும் தரவில்லை என்பது எல்லோரும் தப்பிக்கும் முயற்சி.போலீஸ் மேல் பழி போடும் யுக்தி.மேலிட ஆதரவு/ஆர்டர் இல்லாமல் இது போன்ற சர்ச்சைக்குரிய இடத்தில் ஷூட்டிங்க் போலீசே நடத்த வாய்ப்பில்லை

=============


18 மறந்துவிடக்கூடாத பிரச்சனைகள் 1 தமிழகத்துக்கு தண்ணீர் தரச்சொல்லி கர்நாடகத்துக்கு கோர்ட் உத்தரவு 2 நிர்மலா vs கவர்னர் 3 எஸ் வி சேகர் கைது தள்ளிப்போவது 4 ஷூட்டிங்க் ஆர்டர் கொடுத்தது யார் என்ற உண்மை இன்னும் வெளிவராதது 5 நிபா வைரஸ்



==============



19 தமிழக அரசியலை நிர்ணயிக்கும் இரண்டாவது பெரிய கட்சியாக சக்தியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளது-திருநாவுக்கரசர் தமிழக கட்சிகளின் வாக்கு % தெரிஞ்சுக்குங்க 1 அதிமுக 35% 2 திமுக 28% 3 தேமுதிக 8.5% 4 பாமக 4% 5 நாம் தமிழர் 3.5% 6 பாஜக 3.25% இது போக இனி கமல்"கட்சி ,ரஜினி கட்சி வேற


============


20 நிபா வைரஸ் கேரளாவை தாக்கி இருப்பது அதிர்ச்சிதான்.ஏன்னா இங்கே அனைத்து ஹோட்டல் ,மெஸ் ,தட்டுக்கடை,கையேந்திபவன்களில் சீரகத்தண்ணீர்(வெந்நீரில்"சீரகம் இட்டு)தான் குடிக்க தர்றாங்க.நோய் எதிர்ப்பு சக்தி மக்களிடம் அதிகம்.சாதா காய்ச்சல் மற்ற மாநிலங்களை விட குறைவு


==========