1 தலைவரே!உங்களை நிரந்தர முதலமைச்சர் ஆக்குவோம் கறாங்களே? நடக்குமா?
ஒரு தடவை,ஒரே ஒரு தடவை அந்த சீட்ல உக்காந்துடலாம்னு பாக்கறேன் விட மாட்டாங்க போல,நம்ம நேரம் கமல் ,ரஜினி னு வரிசையா தடங்கல் வேற
===============
2 காதல் ல மிஸ் யூனுலாமா இன்னும் சொல்றாய்ங்க?
ஆமா,கள்ளக்காதல் னா மிஸஸ் யு னு சொல்வாங்க
================
3 தலைவரே!நம்ம கட்சித்தொண்டர்கள் காரா சேவுக்கடைல மிக்சர் ஜாடியை எல்லாம் உடைச்ட்டு இருக்காங்க
ஏன்?
அதி காரக்குவியலை அடித்து நொறுக்குவோம்னீங்களே?
===============
4 தலைவரே! வளமான தமிழகத்தை வளர்த்து எடுப்போம்னிங்க
ஆமா
நம்ம கட்சி ஆட்சி ல இருந்தப்ப வளம் ஆக்கி இருக்கலாமே?ஆளுங்கட்சியா இருக்கும்போது குடும்ப வளம் பத்தி எதிர்க்கட்சியா ஆகிட்டா மாநில வளம் பத்தி சிந்திப்பது ஏன்?
==================
5 தலைவரே!மதில் மேல் பூனை போல அப்டினு சொல்றதுக்கு பதிலா பூனை மேல்"மதில் போல ் னு சொல்லீட்டீங்களாமே?
போச்சுடா!இதை வெச்சு இன்னும் ஒரு வருசம் மீம்ஸ் வருமே.நமக்கு நாக்குல தான் சனி
================
6 தலைவரே!ஆட்சியும் ,பழமொழியும் ஒண்ணுதான்னு யாராவது சொன்னாங்களா?
இல்லையே?
பின்னே?பலவீனமான இந்த ஆட்சியை மாத்துவீங்கனு பாத்தா நீங்க பலவீனம் ஆகி பழமொழிகளை மாத்தி மாத்தி தப்பா சொல்லீட்டு இருக்கீங்களே?
================
7 ஒரு சொடக்கு போடுற நேரத்துல இந்த ஆட்சியை கலைத்துவிட முடியும்.!
~ஸ்டாலின்
#சொடக்கு மேல சொடக்கு போட்டாச்சு ,இன்னும் ஆட்சி கலைஞ்ச பாடில்லை
==================
8 தலைவரே!தமிழகத்தில் வெற்றிடம் என எதுவுமே இல்லைனு எப்டி உறுதியா சொல்றீங்க?
நாம ஆட்சில இருந்தப்பவே எல்லா வெற்றிடம் ,பொறம்போக்கு இடம் இதெல்லாம் வளைச்சுப்போட்டுட்டமே?
=================
9 தலைவரே!ஏர்போர்ட்ல ஒரு கடைல ஒரு காபியோட விலை ரூ 180 னு பொங்குனீங்களே?
ஆமா
அந்தக்கடை ஜெயில்ல களி சாப்டுட்டு இருக்கற உங்க பையனோட பினாமி கடையாமே?
==============
10 தலைவரே!ஈரோட்ல மாநாடு நடத்துனதுக்கு ஆளுங்கட்சி நன்றி சொல்லி இருக்கு
எதுக்கு?
நேத்து ஒரு நாள் டாஸ்மாக் சேல்ஸ் மட்டும் 10 கோடி ரூபாயாம்.நாம 20% கமிஷன் கேட்ரலாமா?
=============
11 ஜட்ஜ் = பழனி"மலைல ஐம்பொன்"சிலை"அமைக்க காசு"வாங்கிட்டு சாதா சிலை வெச்சீங்களாமே?
கைதி = பொன் வைக்கற இடத்துல"பூ வைக்கற"மாதிரி"யுவர்"ஆனர்,இதெல்லாம்"கண்டுக்காதீங்க
================
12 அரசியல் மாற்றத்துக்கு"தகுதியான ஒரே"தலைவர் நம்ம தளபதி தானாமே?
பழமொழி மாற்றத்துக்கு"வேணா சரியா இருக்கும்.அரசியல் மாற்றத்துக்கு எல்லாம் அவரு"சரிப்பட்டு வர மாட்டார்ங்க
=================
13
பழமொழி சொன்னா அனுபவிக்கனும்,ஆராயக்கூடாது
அதுக்கு பழமொழியை கரெக்டா சொல்லனும் தலைவரே!கந்திரகோலம்"பண்ணக்கூடாது,2 வரி பழமொழியையே,ஒழுங்கா சொல்லத்தெரில,5 வருச ஆட்சி எப்டி சரியா செய்வாரு?னு ஜனங்க நினைப்பாங்க இல்ல?
=================
14
யுவர் ஆனர்",கோர்ட்"தடை விதிச்சும் அதை மதிக்காம கல்யாணம் நடந்துடுச்சு,இனி என்ன பண்ண?
விடுய்யா,எப்டியோ"போகட்டும்,அந்தாளை காப்பாத்தலாம்னு பாத்தோம்,அவன் தலை விதி மாட்டிக்கனும்னு இருக்கு
===============
15 ஜட்ஜ் = IOB பேங்க்ல ஏன் கொள்ளை"அடிச்சே?
கைதி = Be Indian buy indian னு"சொல்வாங்க.அதனாலதாங்க HSBC மாதிரி பாரீன் பேங்க்ல கொள்ளை அடிக்காம இந்தியன் பேங்க்",இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் ,இப்டி கொள்ளை அடிச்ட்டு இருக்கனுங்க
===================
16 டாக்டர்,இரண்டு வாழைப்பழங்கள்/ ஒரு சப்போட்டா/ பெரிய மாம்பழம் னு குழந்தைகளுக்கு கொடுக்க...
உறுதியான உயரமான அறிவார்ந்த குழந்தைகளாவாங்களாம்நிஜமா?
ஆமா,பழமொழியைத்தான் தப்பா சொல்றாங்க,பழங்களையாவது சரியா உபயோகிச்சா சரி
================
17 கால வரையற்ற உண்ணா விரதப்போராட்டத்தை அறிவிச்சிருக்கீங்களே?எப்போ இதை கை விடுவீங்க?கோரிக்கை நிறைவேறும் வரையா?
இல்லை,எப்போ பசிக்குதோ அது"வரை
=====================
18 ஜட்ஜ் =நேத்து நைட் 11 மணிக்கு பேங்க் கொள்ளை அடிக்கப்பட்டது இன்று காலை 11 மணிக்கு தான் தெரிஞ்சுதா?
IOB மேனேஜர் = ஆமாங்க,திருடன் 11 மணிக்கு தாங்க போன் பண்ணி சொன்னான்.பொறுப்பில்லாதவன்
==================
19 ஜட்ஜ் = கல்யாணம் பண்ண தடை விதிச்சோம்,மீறி ஏன்"பண்ணிக்கிட்டீங்க?
லேடி = அம்மா ,அப்பா,தாலி கட்ன முத புருசன் சொல்லியே கேட்கல,நீங்க சொல்லி கேட்பனா?
=================
20 ஸ்டெர்லைட் ஆலையால எந்த"கெடுதலும் வராது
அப்டியா?
ஆலையோட ஓனர் எங்கே?
பாரீன்ல
ஆலைக்கு அனுமதி கொடுத்தவர்?
டெல்லில
ஆலையோட ஓனர் பேமிலி,அனுமதி தந்தவர் பேமிலி யை தூத்துக்குடில 2 மாசம் ஆலைக்கு பக்கத்துல தங்கி இருந்து பாதிப்பு இல்லைனு நிரூபிங்களேன்
===============