Thursday, December 21, 2017

மிஸ் ரூம்

புல் மீல்ஸ் சாப்பிடாம ஹோட்டல் ல வெரைட்டி மீல்ஸ் (பட்டை சாதம்) சாப்பிடறவங்க பெரும்பாலும் காசை மிச்சம் பண்ணத்தான் அப்டி சாப்பிடறாங்க


==========

2 பெங்களூர் ரைட்டர்ட்ட 3 நெட் தமிழர்கள் மீனம்மா ,மிருதுளா போன் நெ கேட்டாங்களாம்
1 டைரக்டா அவங்களுக்கே மென்சன் போட்டிருக்கலாம்
2 தரவா போறாரு?


=======


3 குழம்பிற்கு
வெங்காயம் உரிக்கிறேன் ,னு ஒரு பொண்ணு போட்ட Fb ஸ்டேட்டசுக்கு 1936 பேர் டவுட் கேட்கறாங்க,பாவம்,அவங்க வீட்ல வெங்காயம் கூடஇல்ல போல


============
தன்னுடைய படைப்பை மட்டும்"க்ளோசப்ல போடுபவர் சுயநலவாதி.எல்லார் படைப்பும் தெரிவது போல் லாங்க் ஷாட்டில்,போடுபவர் பொதுநலவாதி பாயுதே"கண்ணே!


============






4 இன்று கோபப்படும் (சொந்த)சம்சாரத்தைக்கண்டு நீங்கள் பயந்து ஓடினால் நாளை வரும் மச்சினியை யார் வரவேற்பது.?


===========


5 விகடன் வலைபாயுதே க்காகவே ட்வீட் ரெடி செய்வோர்க்கு.செலக்சன் டைம் திங்கள் 10am to 5 pm. புதன் மாலை புக் மதுரை,கோவை,வியாழன் காலை மற்ற ஊர்கள்


============


6 அம்மாக்களின் அகராதியில் "எனக்கு உடம்பு சரி இல்ல,ஹோட்டல்ல சாப்பிட்டுக்குங்க எல்லாரும்"என சொல்லும் பழக்கமே இல்லை.


==========



7 அன்பு நிராகரிக்கப்பட்டபின் எந்த வித கோபமோ ,வெறுப்போ இன்றி அதே அளவு அன்பு அவரிடம் கொண்டிருந்தால்"அதுவே உண்மையான அன்பு


===========


8 ஏதோ ஒரு ட்வீட் காப்பி அடிக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நீங்கள் போடும் உண்மையான சொந்த"படைப்பும் நிராகரிக்கப்படும்,அங்கீகாரம் இழக்கும்


==========


9 அன்பே!நீயும் ஒரு புல்லட் வண்டிதான். ஹாரன் அடிக்கவே தேவை இல்லை,நீ வந்தாலே கூட்டம் விலகி வழி விடாதோ!


==========


10 சினிமாவோ,அரசியலோ எதுவாக இருந்தாலும் தனிநபர் துதியை தமிழன் தவிர்த்தால் தரணி போற்ற முன்னேறுவான்



===========



11 வெற்றி வீரராக வலம் வந்த நீங்கள் தோல்வி பெறும் சூழல் வந்தால் கம்பீரமாக தோற்க வேண்டும்.அழுது அனுதாப வெற்றி பெற முயலக்கூடாது



=========

12 நமக்காக அழாதவருக்காக நாம் அழுவதில் எந்த பயனும் இல்லை என கணக்குப்பார்க்கத்தேவை இல்லை.மொய்க்கு மொய் வைக்க அன்பு ஒன்றும் சம்பிரதாய விசேஷம் அல்ல



==============


13 டீச்சரின் அறையில் காளான் =மஷ்ரூம்@மிஸ் ரூம்



=======

14அன்பானவருக்கு நாம் தரும் அதிக பட்ச தண்டனை அவர் முன் அடக்க முடியாத அழுகையை கொட்டித்தீர்ப்பதே!


==========


15 அன்பே!எந்த சின்னத்துக்கு வாக்களித்தாலும் தாமரைக்கே விழுவது போல உன் உடலில் எங்கே என் கை பட்டாலும் வீல் என்று கத்துகிறாயே அது ஏன்?



==========



16 மழை வரும் நாட்களில் தொலைநோக்குப்பார்வை உள்ள தம்பதிகள் தங்களுக்குள் சண்டை இட்டுக்கொள்வதில்லை



============



17 ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்காய்ங்க ஆனாலும் பொம்பளைக மேல இடிக்கிறாய்ங்க பொறுக்கிப்பயலுக

சாமியாருங்க,சாமிக கிட்டதான் அதிக ஜாக்கிரத வேணும்


==========

18 பஸ் பயணத்தை விட ரயில் பயணம் ஏன் சிறந்தது?
1 சீரான சாலை என்பதால் முதுகுத்தண்டுக்கு பாதிப்பு இல்லை
2 பாத்ரூம்
3 செல் போன் சார்ஜ் போட்டுக்கலாம்



============



19 நெட் தமிழன் பொண்ணுங்க அட்டெண்டென்ஸ் எடுக்க புது டெக்னிக் வச்சிருக்காப்டி.என்ன tl ல ஆண் கீச்சாளர்கள் மட்டும் தான் இருக்காங்க. ன்னா லைனா ஆஜர்


========


20 ஒரு பணக்காரப்பெண் எந்த நகையும் அணியாமல் புன்னகை மட்டும் அணிந்திருந்தாள்.
அப்படி அணிந்திருந்தால் அது நகைமுரண் ஆகாதோ!



===========