1 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 14 தமிழ் தேசிய கட்சிகள் ஆதரவு - நாம் தமிழர் கட்சி அறிக்கை...
#14 *100=1400 ஓட்டு தேறுமா?
=========
2 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது - வைகோ
# ஒருவரால் மட்டும் முடியும்,முன்னாடி கண்ணாடி பார்க்க
===========
3 ஜெவின் மரணத்தை மூடி மறைத்தவர்கள்தான் சசிகலா, Eps,ops என்ற 3 குழல் துப்பாக்கிகள் - ஸ்டாலின் #4 தினகரன் ,5 அப்போலோ
=========
4 அகில இந்திய அளவில் ராகுலையும், தமிழகத்தில் ஸ்டாலினையும் விட்டால் வேறு வழி இல்லை− திருநாவுக்கரசர். #அதாவது உங்களுக்கு வேற வழி இல்ல?
=========
5 இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு திமுக வெற்றி பெறும் - ஸ்டாலின்.
# ஆளுங்கட்சி மீது அதிருப்தி இருந்தும் ,நாம ஜெயிக்கலைன்னா கஷ்டம்
============
6 RK.நகரில் கரு.நாகராஜன் வென்றால் அவர் மோடியின் நேரடி பார்வையில் இருப்பார் - தமிழிசை.# நடராஜன்,நாகராஜன் னு எந்த ராஜனையும் ஜனங்க நம்பமாட்டாங்க
===========
7 RKநகர்− திமுக பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது− EPS #ஜனங்க"கூமுட்டை கிடையாது,பணமூட்டையையே அவிழ்த்து விட்டாலும் சிந்திச்சு வாக்களிக்கனும்
==========
8 30ஆண்டுகள் தமிழக உளவுத்துறையை கையான்டவன் நான்-தினகரன் # அப்போ தொகுதி நிலவரத்துல நமக்கு சாதகமா ரிப்போர்ட் வர விசுவாசம் காரணமா?
=========
9 ஸ்டாலின்மீது கொட்டிய தேநீர். பதறிய வைகோ- செய்தி# அண்டர்ப்ளே ஆக்டிங்க்ல OPS வல்லவர்னா ,ஓவர் ஆக்டிங்க்ல வைகோ டாப்
\\
=========
10 மதுவிலக்கு வந்தால் கள்ளச்சாராயம் அதிகரிக்கும்: பிருந்தா காரத் # போலீஸ் ஸ்டேஷனை திறந்து வெச்சா திருட்டுப்பசங்கதான் லாக்கப்ல இருப்பாங்க
========
11 ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கான வழி இன்னும் வரவில்லை - ரஜினி சகோதரர்
# டெல்லில இருந்து சிக்னல் வர்ல
===========
12 தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அரசியலுக்கு வருவது உறுதி−ரஜினியின் நண்பர்கள்் # எக்சாம் டைம்டேபிள் வந்ததும் படிக்க ஆரம்பிப்போமே?அப்டி
============
13 ஆதி தமிழனின் மதம் இந்து மதம் தான் −H ராஜா # "ஆதி" "தமிழன்" கிறிஸ்துவமதம் ஆச்சே?
=============
14 உணவகங்களே தண்ணீர் பாட்டில் விலையை நிர்ணயிக்கலாம்.. பூ . உத்தரவு #தவறான தீர்ப்பு,வாட்டர் கேன்"எடுத்துட்டு போய்டனும்
===========
15 நான் ஏழை என்பதால் காங்கிரஸ்காரர்கள் என்னை இழிவாக பேசுகிறார்கள்
- மோடி
# மாடி வீட்டு ஏழை யோட கோட் சூட் செலவே கோடி பெறும்னு தெரிஞ்சுமா?
==========
16 பாபர் மசூதி வேண்டுமா?
ராமர்கோவில் வேண்டுமா? மோடி
# இந்து ,முஸ்லீம்,கிறிஸ்டீன் னு பிரிச்சுப்பார்க்காம பொது சிந்தனையோடு இருக்கும் பிரதமர் தேவை
==========
17 பாஜகவுடன் சேர்ந்தால் அதிமுக ஊழலே செய்யாது... தமிழிசை # ஆல் இன் ஆல் நீங்களே பாத்துக்குவீங்களா மேடம்?
===========
18 எனது போராட்டத்தால்
இனியும் கேஜ்ரிவால்கள்
உருவாக மாட்டார்கள்
#அட்லீஸ்ட் காஜல் அகர்வால்,நிஷா அகர்வால்?
-அண்ணா ஹசாரே
======
19 TV ல 10pm -6am மட்டுமே
ஆணுறை விளம்பரம்
காட்டவேண்டும்
-மத்திய ஒளிபரப்புத்துறை
#நைட்ஷிப்ட் வேலை பாக்கறவங்க பகல்லதான் டிவி பார்ப்பாங்க
===============
20 அதிமுக ஒரு சாய்ந்த கோபுரம் -பொன்.ராதா# நீங்க பார்க்க வேண்டிய படம் கோபுரங்கள் சாய்வதில்லை
==============