1 வயசில்,படிப்பில்,அனுபவத்தில் தன்னை விட 2 மடங்கு மூத்தவரை 4 பேர் முன் மட்டம் தட்டுவதை பெருமையாக நினைத்துக்கொள்கிறான் நெட் தமிழன்
=============
2 தமிழிங்க்லீஷ்ல ஏன் எழுதறீங்க?
10 வருசமா அப்டிதான் எழுதறேன்
சுத்தம்.இனிமேலாவது திருத்திக்கலாமில்ல?
என் தனித்தன்மையே அப்டி தப்பா எழுதறதுதான்
=============
3 ஜெ மகள் அம்ருதா என்பது நிரூபிக்கப்பட்டால் நம்ம துரோகிங்க 2 பேரும் ஓடிப்போய் கால்ல விழுந்துடுவாங்க.
============
4 பிரிவிற்குப் பிறகான பிரியத்திற்குப் பெயர் சொல்லேன்.
வம்சாவலி/ பரிவு
=============
5 அழகுத்தோற்றம் கொண்டோர் அனைவரும் அன்புடையவராய் இருப்பர் என எதிர்பார்க்காதீர்.ஆனால் அன்புடையோர் அனைவரும் அழகானவர் என்று உணர மறக்காதீர்!
=================
6 வாழ்வாதாரத்திற்காகவோ ,கமர்ஷியல் வெற்றிக்காகவோ உன் தனித்தன்மையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதே!
=============
7 கடலோர குடியிருப்புகள் ,வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்போர் நீச்சல் கற்றுக்கொள்வது நல்லது
=============
8 சந்தர்ப்பவாதம் எப்படி இருக்கும் என்பதற்கு வாழும் கேவலமான உதாரணம் அதிமுக MLAக்கள்
==============
9 ஏழையின் பசியை,அதன் வலியை நீங்களும் உணர மாதம் ஒரு நாள் ,ஒரு வேளை உண்ணாவிரதம் இருங்கள் .உங்கள் வயிற்றுக்கு,மூளைக்கு,மனதுக்கு நல்லது
=============
10 உங்கள் சம்பளம் /வருமானம் எவ்வளவு என்று கேட்டால் கவுரவத்துக்காகவோ ,வேறு எதற்காகவோ பெரும்பாலானோர் 50% கூட்டி சொல்கிறார்கள்
=============
11 எந்த ஊர் பஸ் ஸ்டேண்டாக இருந்தாலும் அங்கே இருக்கும் ஹோட்டல்கள் உணவு தரம் குறைந்ததாக ,விலை அதிகமாகவே இருக்கும்.வாடகை அதிகம் என்பதால்.
=============
12 பீர் அடிக்காதே என்பதன் சுருக் தவிர்ப்"பீர்"
============
13 ரிலீசுக்குப்பின் சூர்யா ரசிகர்கள் தானா சோர்ந்த கூட்டம் ஆவார்கள் என கணிக்கிறேன்
=============
14 தகுதி,திறமை,உழைப்பு எல்லாம் இருந்தும் பலர் முன்னேறாம இருக்க முக்கியக்காரணம் தகுதியே இல்லாதவங்க தன் செல்வாக்கால ஆக்ரமித்து இருப்பதே!
=============
15 நோய்வாய்ப்பட்டு இருக்கும் போதும் ஹார்லிக்ஸ் வாங்கி தரீங்களே அத நல்லா இருக்கும் போது வாங்கி தந்தா என்ன!!
அழுத பிள்ளைக்குதான் பாலு
============
16 வெளியூர் பயணங்களில் மெஸ்சில் சாப்பிடுவது உடல் நலனுக்கு,பொருளாதார நலனுக்கு நல்லது.பிராமண/அய்யர்/ செட்டியார் மெஸ் சைவர்களுக்கு உகந்தது
==============
17 சூர்யா ரீமேக் படம் பண்ணது இல்லையா?
1 பேரழகன் (குஞ்சு கூனன்) மலையாளம்
2 பிரண்ட்ஸ் ( பிரண்ட்ஸ்)மலையாளம்
3 தா சே கூ
==============
18 காலைல 8 மணிக்கு "சாப்ட்டாச்சா?"னு ஒரு பொண்ணு கிட்டே நெட் தமிழன் கேட்டான்.அதுல நியாயம் இருந்துச்சு.நைட் 10 மணி.அதே கேள்வி,அதே பொண்ணு.ஷப்பா
==============
19 ஜாதி மல்லி வேற ,ஜாதி முல்லை வேற.கூகுள் 2ம் 1ங்குது.ஒருவேள அட்மின் ஆபாயிலோ?
===============
20 ஒரு குடிகாரனால் சமூகத்துக்கு நிகழும் கெடுதலை விட சிகரெட் புகை விடுபவனால் ஏற்படும் சுற்றுப்புற சூழல் மாசு பல மடங்கு அதிகம்
================