1 ஊழல் வழக்கில் கைதானவர்கள் சொத்துகளைசவுதி அரசுக்கு எழுதிக்கொடுத்தால் உடனே விடுதலை செய்யப்படுவார்கள் - சவுதி #சசிகலாவை சவுதி"அனுப்பிட்டா?
=============
2 அதிமுக அழிய தொடங்கிவிட்டது திமுகவை எளிதாக அழித்து விடுவோம்-பொன்னார்.
# அடுத்தவங்க அழிஞ்சா அவ்ளோ சந்தோஷமா?சீக்கிரம் முன்னேறிடுவீங்க
=============
3 தமிழக அரசு செயல்படவில்லை: பொன்.இராதா # தலைக்கு எவ்ளோ தில் பாத்திங்களா?மோடியையே மட்டம் தட்டறாரு
=============
4 கட்சியில் நான் படிப்படியாக வளர்ந்துதான் முதல்வரானேன்.-EPS # அப்டி பாத்தா ஜெ இருக்கும்போதே துணை முதல்வர் ஆகி இருக்கனுமே?
==============
5 மத்திய பாஜக அரசு ஊழலற்ற ஆட்சி நடத்தி வருகிறது: அன்புமணி ராமதாஸ் திடீர் பாராட்டு #அப்டி சொன்னாதான்"ரெய்டு வராதுன்னாங்க,சொல்லிட்டாரு
=============
6 கறுப்பு பணத்திற்கு எதிராக அறுவை சிகிச்சை தொடங்கி விட்டது - தமிழிசை
# அதாவது பாஜக வுக்கு எதிரா யாரெல்லாம் இருக்காங்களோ அவங்களுக்கு எதிரா?
==============
7 பொருளாதார ரீதியாக இந்தியாவில் 2 வது பெரிய மாநிலமாக தமிழகம் விளங்குகிறது-OPS # விளங்கட்டும்,ஆமா ஏதோ போராட்டம்,நியாயம்,தர்மம்னு பேசுனது?
============
8 தமிழகத்தில் நேரடியாக ஆட்சியை
பிடிப்போம் −தமிழிசை #அதுக்கான ட்ரெயினிங்க்தான் இந்த மறைமுக பொம்மலாட்ட ஆட்சி?
=============
9 வேதா இல்லத்தில் வேதாளங்கள் குடியிருந்ததால் தான் ரெய்டு நடைபெற்றது: எச்.ராஜா
# போற போக்குல போக்கிரி ங்க கூட அறிக்கை விடுவாங்க போல
==============
10 குஷ்பு ஒரு நடிகை என்பதால் அவருடைய விமர்சனத்துக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை: செல்லூர் ராஜூ.# நாம கால்ல விழுந்து கிடந்தமே ஜெ அவங்க?
============
11 சசிகலாவும், தினகரனும் என்னை முதல்வராக்கவில்லை.கட்சியில் நான் படிப்படியாக வளர்ந்துதான் முதல்வரானேன்”−EPS #பிக்பாஸ் ஜூலிக்கே டப் பைட் தர்றாரே?
=============
12 சாதி" பெயரை சொல்லி போனில் கூட திட்டக்கூடாது..! உச்சநீதிமன்றம் அதிரடி..!#ஆண்கள் தினம் வேற.பொஞ்சாதி பேர சொல்லியாவது திட்டலாமா?
=============
13 மக்கள் சிங்கத்தை விட பசுவைக் கண்டுதான் பயப்படுகின்றனர்: -லாலு #சிங்கத்தை வெச்சு சர்க்கஸ்காரன் ,பசுவை வெச்சு அரசியல்வாதி சம்பாதிக்கறான்
=============
14 எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம், அடிபணிய மாட்டோம் −Ops #
மோடி −அங்கே என்ன சத்தம்?
ops - சும்மா பேட்டி குடுத்துட்டு இருக்கேங்க
==========
15 குற்றவாளிகள் சிறைக்கு செல்வார்கள் அல்லது என்கவுண்டரில் கொல்லப்படுவார்கள்; யோகி ஆதித்யநாத் #பணபலம்,பதவி பலம் இல்லாத குற்றவாளிகள் என சொல்லவும்
============
16 பிரதமர் மோடி தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை பொருட்படுத்துவதில்லை -நிர்மலா சீதாராமன். # அப்டி சொன்னாதான் யாரும் விமர்சிக்க மாட்டாங்க?
=============
17 நான் தீவிர அரசியலுக்கு வர இந்திராகாந்தி தான் காரணம்- ஸ்டாலின் !# அந்த நன்றிக்கடனுக்குதான் காங் உடன் கூட்டணியா?
=============
18 சிலரின் தவறால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.. வேதனை அடைந்துள்ளேன்.Eps #சசிகலா ,தினகரன்,Ops .Eps 4 பேர் தான் மெயின்
=============
19 தி.மு.க. தலைவர் கருணாநிதி அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் -மு.க.அழகிரி #மொத்தத்துல ஸ்டாலின் சிஎம் ஆக விடமாட்டிங்க?
=============
20 தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம்: ஸ்டாலின்
# நாம நம்ம ஐடெண்ட்டியை விட்டுத்தரக்கூடாது தலைவா
==============