1 ஒரு ட்விட்டர்"அடிக்ட் பட்டாசுக்கடைல எப்டி பர்ச்சேஸ் செய்வார்?
க்யூட் புஷ் வாணம் 3 பாக்கெட் கோவை அனு குண்டு 2 பாக்கெட் குடுங்க
க்யூட் புஷ் வாணம் 3 பாக்கெட் கோவை அனு குண்டு 2 பாக்கெட் குடுங்க
============
2 சார், 150 கோடி செலவு ஆச்சுன்னீங்களே, கணக்கு சொல்லுங்க
முத நாள் வசூலே 100 கோடின்னு கூட சொல்வோம், விட்டா அதுக்கும் கணக்கு கேட்பே போல?
=================
3 படத்தோட 2 வது பாதில ரசிகர்களை அழ வெச்ட்டாராமே? டைரக்டர்?
அவரு ரசிகர்களை மட்டுமா அழ வெச்சாரு?
================
4 சார் , இந்தப்படம் ஒரு விழிப்புணர்வுப்படமாமே?
ஆமா, இனிமே யாரும் ஆல்ரெடி ரிலீஸ் ஆகி ஹிட் ஆன 3 படங்களை மிக்ஸ் பண்ணி படம் எடுக்க மாட்டாக
===============
5 சார், படம் எப்டி?
ஹீரோ இண்ட்ரோ சீன் பிரமாதம்
சார், கதை நல்லாருக்கா?
மேஜிக்மேன் சீன் எல்லாம் அள்ளுது
அய்யோ ராமா, ஹேமா போட்ட காசு வருமா?
================
6 விஜய் ரசிகர் =படம் எப்டி?ஓடற மாதிரி இருக்கா?
அஜித் ரசிகர் = மீம்ஸ் போட்டு ஓட்ற மாதிரி இருக்கு
அஜித் ரசிகர் = மீம்ஸ் போட்டு ஓட்ற மாதிரி இருக்கு
===============
7 சார்,மெர்சல் பாகம் 2 வருமா?
தெரில,சிம்பு கிட்டே கேட்கனும்
புரில
சிலம்பாட்டம் 2 வந்தா மெர்சல் 2 வும் வரும்.நாம எந்தக்காலத்துல புதுக்கதை
======================
8 விஜய் நித்யாமேனன் போர்ஷன் செம செம
அப்டீங்களா?
ஆமா,போர்ட்டிகோ ,ஹால் ,டோட்டல் போர்ஷனுமே செம
===============
9 படத்தோட முத பாதில ஹீரோ நம்ம இதயத்தை திருடிடறார்.பின் பாதில டைரக்டர் நம்ம மனச திருடிடறார்
ஓஹோ,மொத்தத்துல இது ஒரு திருட்டுக்கதை னு சொல்லுங்க
===============
10 வெளிநாட்டு டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் கிட்டே போன்ல பேசினேன்,செம கலெக்சன் வருமாம்.
அப்டியா?அவங்க போன் நெம்பர் சொல்லுங்க
ஒரு Flow ல சொன்னேன்
===========
11 இந்தப்படத்துல ஒரு சோசியல் மெசேஜ் சொல்லி இருக்கோம்.
அதை விடுங்க ்.130 கோடி செலவு பண்ணதுல 10 லட்சம் தந்து புதுக்கதை எழுதி இருக்கலாம்
==============
12 சார்,படத்தோட கதைக்கும் ஜல்லிக்கட்டுக்கும் சம்பந்தமே இல்லையே?எதுக்கு பிரச்சனை பண்ணாங்க?
சத்யராஜின் "ஜல்லிக்கட்டு" ல இருந்தும் 4 சீன் சுட்டோம்
==============
13 சார், பார்த்தா பழைய சட்டை மாதிரி இருக்கு, 1200 ரூபாயா?
பேக்கிங் சூப்பரா இருக்கு , பிராண்ட் ஐட்டம் போட்டுக்கறது சட்டையையா? பேக்கிங்கையா?
பேக்கிங் சூப்பரா இருக்கு , பிராண்ட் ஐட்டம் போட்டுக்கறது சட்டையையா? பேக்கிங்கையா?
=================
14 தீபாவளி ரேஸ்ல நாங்க தான் நெ 1
ஓஹோ,ஸ்டார் வேல்யூ உள்ளவங்க எத்தனை பேர் படம் ரிலீஸ் ஆச்சு?
1 தான்
அப்ப சரி
==================
15 பாசிட்டிவ் ரிவ்யூ நிறைய வருது
சரி, முத நாள் டிக்கெட் ரேட் எவ்ளோ?
400,500,1200
அவ்ளோ பணம் கொடுத்து யார் பார்ப்பா? பப்ளிக்கா?ரசிகரா?
==================
16 ஹீரோ கேரக்டருக்கு என்ன பேர் வைக்கலாம்?யோசிச்சு சொல்லுங்க
அது ரிஸ்க்,ஆல்ரெடி ஹிட் ஆன படத்துல என்ன பேரோ அதையே வெச்சிடுவோம். ஹூம்.பேருமா?
அது ரிஸ்க்,ஆல்ரெடி ஹிட் ஆன படத்துல என்ன பேரோ அதையே வெச்சிடுவோம். ஹூம்.பேருமா?
===================
17 சார்,உங்க டார்கெட் இளைய தலைமுறையை நம்பிதான் இருக்கா?
ஆமா,அவங்கதான் பழைய படங்கள் பார்க்கறதில்லை,பார்த்தாலும் ஞாபகம் வெச்சுக்க மாட்டாங்க
================
18 சார்,உங்க கிட்டே அசிஸ்டெண்ட் டைரக்டரா சேரனும்.
என்ன தகுதி இருக்கு?
1980 −2016 எல்லா ஹிட் பட டிவிடி யும் கை வசம் இருக்கு
=================
19 சார்,உங்க படத்தோட மையக்கருத்து என்ன?
டாக்டர்ங்க 5 ரூ வாங்கீட்டு மருத்துவம் பார்க்கனும்
உங்க சம்பளம்?
10 கோடி
ஹீரோக்கு?
25 கோடி
ரைட்டு
================
20 சார்,முத நாள் கலெக்சன் எவ்ளோ?
இருங்க சார்,இப்போதான் வடசட்டில எண்ணெய் கொதிக்க விட்டிருக்கோம்,இனி தான் வடை சுடனும்,சுட்டதும் தர்றோம்
================