Monday, May 29, 2017

ராமராஜன் ஆட்சி

1  ரஜினி,ஒரு வியாபாரி; அமைச்சர் ராஜு # கேப்மாரியா, மொள்ளமாரியாத்தான் இருக்கக்கூடாது, வியாபாரியா இருப்பது தப்பில்லையே?

=================

2 இந்த மண்ணை ஆள வேண்டியது, மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் தான்.- பாரதிராஜா # அப்போ உங்க மகன் மனோஜை களம் இறக்கிடலாமா?சினிமால தான் ஜெயிக்கல

==============

3 கட்சிக்குள் எந்த பிளவும் இல்லை: தம்பிதுரை # அதல பாதாளமே உருவாகி இருக்கு, நல்ல கண் டாக்டரைப்பார்க்கவும்


================

4  ஜெ., மறைவுக்குப் பின், ஆட்சி நடைபெறவில்லை. காட்சி தான் நடைபெறுகிறது.-துரைமுருகன்:# அதுவும் தினசரி 4 காட்சிகள் , ஏன்னா 4 அணி ஆச்சே?


================


5 வேதனைகள் மிகுந்த இந்த ஆட்சி, ஜனநாயக முறைப்படி வெகுவிரைவில் மாறும்.-ஸ்டாலின்: #ஜனநாயக முறைப்படி மாறனும்னா 2021 மே வரை ஆகும்

===============


6 தமிழகத்தில், ஹிந்தி மொழியைத் திணிக்க, மத்திய அரசு முயற்சித்தால், புரட்சி வெடிக்கும்.-கனிமொழி # ஜூன் மாசம்   2 ஜி வழக்கு தீர்ப்பு வரப்போகுதாம், என்னென்ன எல்லாம் வெடிக்குமோ


=============


7 மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் பெண்களை, காவல்துறை அடித்து விரட்டும் அவல நிலை தொடர்கிறது-
 திருநாவுக்கரசர்:# புதுச்சேரிலதானே?


=================


8
சீக்கிரம் அரசியலுக்கு வாங்க; ரஜினிக்கு சத்ருகன் அழைப்பு  # ஒவ்வொரு ஊர்லயும் ஒரு வைகோ இருக்காரு



=============


9 பதவி கேட்டு எம்.எல்.ஏ.,க்கள் நெருக்கடி: அமைச்சரவையை மாற்ற முதல்வர் முடிவு? # 122 பேரும் அமைச்சர் பதவி வேணும்பாங்க, முடியுமா?ஆட்சி முடியுமா?


=================


10  அ.தி.மு.க.,வில் பிளவு கிடையாது. அனைவரும் சகோதரர்களாக,  உள்ளோம்,'- தம்பிதுரை # அழகிரி-ஸ்டாலின் போலவா?பல்வாள்தேவன் - பாகுபலி போலவா?


=========


 
4 அதிமுக வின் 2 அணிகளை இணைக்கும் கட்டப்பஞ்சாயத்தை மோடி திறம்பட செய்து வருகிறார் - ஸ்டாலின் # அழகிரிதான் அவுட் ஆஃப் ஃபார்ம் ஆகிட்டாரே?அதான்

================

5 பிரதமரை சந்திக்க முதல்வருடன் செல்ல வேண்டிய அவசியமில்லை: தம்பிதுரை # கவுதமி , பாபா  ராம்தேவ்,பதஞ்சலி ஓனர் கூட போனா போதுமா?


================

6   3 மாதங்களாக, தமிழகத்தில், ஜெ., ஆட்சி நடைபெறவில்லை; சசிகலாவின் பினாமி ஆட்சி தான் நடைபெறுகிறது.-மைத்ரேயன்: # ஜெ தான் இறந்துட்டாரே?எப்படி ஜெ ஆட்சி நடக்கும்?

=============MGR கட்சிகளுக்கு அப்பாற்பட்ட தலைவர். அவரது நுாற்றாண்டு விழாவை, தி.மு.க.,வும் கூட கொண்டாடலாம்.-
தம்பிதுரை:# தேர்தல் பிரச்சாரத்துல வேணா MGR பேர் சொல்லி  ஓட்டு கேட்பாங்க

=

8
 இந்தியாவில் பெரும்பாலான மாநில முதல்வர்கள், மத்திய அரசை எதிர்த்து, ஒரு கேள்வி கூட கேட்பது இல்லை-
கனிமொழி # கழக ஆட்சில கலைஞர் எத்தனை கேள்வி கேட்டாருங்கோ?:

=============


9 OPS டில்லிக்கு செல்கிறார்' என, சொல்வதை விட, 'அவர் அழைக்கப்படுகிறார்' என்பதே சரி - திருநாவுக்கரசர் # அழைக்கப்படுகிறாரா?அலைக்கழிக்கப்படுகிறாரா?.

=============

10 கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தியதால், ஜாமினில் வெளியே வந்தேன். - வை கோ # அப்டியா? வற்புறுத்திய நிர்வாகிகள் பேரை வெளில சொல்லிடாதீங்க, ஆபத்து அவங்களுக்கு

==========

11 சிறையில் இருந்த காலத்தில், என்னை நானே சுய ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது -வை கோ#  இப்போ வெளீல வந்துட்டீங்களே?ஆய்வை எப்ப்டி தொடர முடியும்?

===============


12 ரஜினி  அரசியலுக்கு வந்தால் காங்., கட்சிக்கு அவரை அழைப்போம்- நக்மா #  கை கொடுக்கும் கை கைக்கு கொடுக்குமா ஆதரவுக்கை?


============

13  ஜெ படத்தை, சட்டசபையில் வைத்தால், ஐ.ஜி., அலுவலகத்தில் வீரப்பன், ஆட்டோ சங்கரின் படங்களை வைப்போம்,''-EVKS # லாஜிக்படி சட்டசபைல தானே வைக்கனும்?

==================


14 அரசியலுக்கு வராதீங்க! ரஜினிக்கு கமல் 'அட்வைஸ் # அரசியலுக்கு வராதீங்கன்னு சொல்லலை , வராம இருந்தா நல்லதுன்னு சொல்றேன்


===============


15  தற்போதைய அரசியல் நிலவரத்தில், யாரும் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது- கமல் # நல்ல வேளை, யாருமே சினிமாக்கு வரக்கூடாதுன்னு சொல்லலை


======


16 தற்போது மத்திய அரசின் இந்த முடிவை நாம் அனுமதித்தால், நாளை மீன் சாப்பிடுவதற்கு மத்திய அரசு தடை விதிக்கும்-பினராயி விஜயன் # வாட் டூ யூ மீன்?


===============


17  பாலில் கலப்படம் உள்ளது என்றால் அது குறித்து விசாரணை நடத்தவில்லை ?- ஸ்டாலின் # விசாரணை நடத்தினா நாங்களே மாட்டிக்குவோமே?



=============


18

சட்டப்பேரவையில் ஜெ. படத்தை வைப்பது சட்டவிரோதம்: EVKS #அட்லீஸ்ட் அவங்கவங்க சட்டைப்பாக்கெட்ல  ( சட்டைப்பை) யாவது வெச்சுக்கலாமா?

 

================

 

 

19

போயஸ் கார்டன் எங்களுக்கு சொந்தமானது: ஜெ.தீபா # நல்ல வேளை, ஆட்சிக்கு உரிமை கோரலை

 

===============

 

20

நாடு முழுவதும் இறைச்சிக்காக பசுக்களை விற்கவும், வாங்கவும் தடை: மத்திய அரசு அறிவிப்பு # ராமராஜ்யம் அமைப்போம்னாங்க, போற போக்கைப்பார்த்தா ராமராஜன் ஆட்சி தான் மிஞ்சும் போல

 

============