Friday, March 31, 2017

THE GREAT FATHER (MALAIYALAM) -சினிமா விமர்சனம்

Image result for the great father poster புதிய நியமம் கற படத்துல தன்னோட மனைவியை ரேப்பின வில்லன் க்ரூப்பை பழி வாங்கும் கதைல நடிச்ச மெகா ஸ்டார் மம்முட்டிக்கு இளைய திலகம் விஜய் போல் வெரைட்டியான கேரக்டர்ல நடிக்க ஆசை, அதனால இந்தப்படத்துல தன் மகளை ரேப்பின சைக்கோ வில்லனை பழி வாங்கறார்

வில்லன் ஒரு சைக்கோ சீரியல் ரேப்பர் கம் மர்டரர். அதாவது டீன் ஏஜ் கேர்ள்சா பார்த்து 15 வயசுக்குள் செலட் பண்ணி அவங்க கிட்டே ஆதார் கார்ட் எல்லாம் கேட்காம ரேப்பிட்டு கொலை பண்ணிடறான். ஹீரோவோட கம்பெனில யே ஒர்க் பண்ற அவனை எப்படி ஹீரோவும், க ப்ண்டிடிக்கறாங்க என்பதே கதை


ஹீரோவா மெகா ஸ்டார் மம்முட்டி. கசபா படத்துலயே இவரோட கேரக்டர் சறுக்கல் ரகம். இந்தப்படத்துலயும் அதே. தேவை இல்லாத ஹீரோ பில்டப் காட்சிகள் இந்த கதைக்கு மைனஸ். மற்றபடி சோக காட்சிகள் பக்காவா பொருந்தி இருக்கு . டூயட் சீன்கள் இல்லாதது ஆறுதல்


மனைவியா சினேகா.அதிக வாய்ப்பில்லை. வந்தவரை ஓக்கே

மகளா வரும் பாப்பா அனுகா பாஸ் மார்க்


போலீஸ் ஆஃபீசரா வரும் ஆர்யா ஜிம் பாடியை காட்டி இந்த சமூகத்துக்கு ஏதோ சொல்ல வர்றார். க்ரைம் பிராஞ்ச்ல ஒர்க் பண்றதா அவரே சில காட்சிகள்ல சொல்லிக்கறார்.ஆனா ஒரு சீன்ல கூட யூனிஃபார்ம் கிடையாது. கூட வரும் சக ஆஃபீசர்கள் எல்லாம் போலீஸ் போல் கட்டிங் கெட்டப் எல்லாம் பக்கா.ஆனா இவர் மட்டும் தாடி விட்டுட்டு , ஃபங்க் ஹேர் ஸ்டைல்ல வர்றார்

வில்லனா வர்ற அந்த ஜோக்கர் ரேப்பர் மிரட்ற தா நினைச்சுட்டு காமெடி பண்றார். இவரே ஃபோன் போட்டு வாலண்ட்ரியா போலீஸ்க்கு , ஹீரோ க்கு சவால் எல்லாம் விடறார். அந்த டைம்ல இன்னும் 2பேரை ரேப்பி இருக்கலாம், தண்டம்

இசை , ஒளிப்பதிவு , எடிட்டிங் எல்லாம் சராசரி , திரைக்கதை வீக்





இயக்குநரிடம் சில கேள்விகள்

1 ஸ்கூல் ல யூனிஃபார்ம் போடுவதே எல்லாரும் ஒரே நிலை எனப்தை மாணவர்கள் மத்தியில் பதிய வைக்கத்தான். ஸ்கூல் பஸ்ல போற பொண்ணை வழி மறிச்சு காரில் கூட்டிட்டு ப்போகும் தேவையற்ற ஹீரோ பில்டப் சீன் எதுக்கு?

2 மக்ளை ஸ்கூல் ல இருந்து கூட்டிட்டு வர ஹீரோ லேட் ஆவதால் ரேப் நடப்பதா காட்சி வருது. ஸ்கூல் பஸ் என்னாச்சு? என்ற கேள்விக்கு விடை இல்ல

3 மத்த பொண்ணுங்களை எல்லாம் கொடூரமா ரேப்பிட்டு மர்டர் பண்ணும் வில்லன் ஹீரோ மக்ளை மட்டும் சாஃப்ட்டா ரேப்பிட்டு உயிரோட விடுவது ஏனோ?


4 பொதுவா வில்லன் மற்ற கேர்ள்சை அவனோட இருப்பிடத்துக்கு கூட்டிட்டுப்போய் பாதுகாப்பா ரேப்பறான்,ஆனா ஹீரோ மகளை மட்டும் பப்ளிக் பிளேஸ்ல லிஃப்ட் ல ரேப்பறான்,


5 ரேப் செய்யப்பட்ட மக்ளை ஹீரோ தூக்கிட்டு வீட்டுக்குப்போகும்போது மகளோட ஷூ வை ஸ்பாட்லயே விட்டுட்டுப்போறார்.அது போலீஸ்க்கு எவிடென்ஸ் ஆகாதா?யாருக்கும் இந்த மேட்டர் தெரியக்கூடாதுனு நினைக்கும் ஹீரோ இதை கவனிக்காமல் விட்டது ஏன்?

6 ரேப் செய்யப்பட்ட மக்ளோட உடல் நிலை டாக்டர் செக்கப் செய்யப்படுவது அவசியம், அதை செய்யாம ஹீரோவும் ஹீரோயினும் அது பற்றி டிஸ்கஸ் பண்ணுவது ஏன்?



7 படம் பூரா ஆர்யா வில்லன் போல் ஹீரோவை முறைச்ட்டு க்ளைமாக்ஸ் ல எனக்கும் ஒரு மகள் இருக்கா , உங்க ஃபீலிங்க்ஸ் புரியுதுனு பல்டி அடிக்கறார்


8 சோகமான ஒரு சின்ல ஹீரோவோட மகளுக்கு ஒரு லோ கட் லோ ஆங்கிள் கிளாமர் சீன் இருக்கு அது தேவை இல்லாதது. சூழல் சோகம் ஆனால் காட்சி கிளாமர்


9 டைட்டில் த கிரேட் ஃபாதர் . ஆனா அவர் என்ன கிரேட் ஒர்க் பண்ணார்? தெரியல




ஸ்கூல் பஸ் சை வழிமறிச்சு பஸ்ல இருந்து இறக்கி காரில் தன் மகளை ஏற்றிக்கொள்ளும் தவறான முன்னுதாரண ஓப்பனிங்சீன் GREAT.FATHER


சி பி கமெண்ட்



THE GREAT FATHER(MALAIYALAM)-மம்முட்டி+ ஆர்யா க்கு ஒருசராசரி சைக்கோ க்ரைம் த்ரில்லர்.முன் பாதி ஸ்லோ -ரேட்டிங் 2.75 / 5