1 அதிமுக வின் இரு அணிகளும் ஆட்சியில் இருந்த போது, கூட்டுக் கொள்ளை அடித்தவர்கள் தான்.-ஸ்டாலின் # அப்போ ஓபிஎஸ் க்கு ஆதரவுன்னு நீங்க சொன்னது கூட ஒரு விதத்தில் கூட்டுக்கொள்ளை தானா?
====================
2 ஒரு எம்.பி., விமானத்தில் செல்ல தடை விதிப்பதன் மூலம், அவரது பணிகள் பாதிப்படைகின்றன.- நரேஷ் அகர்வால்:# எம் பி மானம் கப்பல் ஏறிடுச்சுனு சொல்லுங்க
======================
3 ஜெ., விட்டுச் சென்ற பணிகளை தொடர்வேன் - ஜெ தீபா # அவரால அந்த 4 வருச சிறை தண்டனை அனுபவிக்க முடியாம போய்டுச்சே, அதை ஏத்துக்கப்போறீங்களா?
=======================
4 இந்த ஆட்சி தற்காலிகமா, நிரந்தரமா தெரியவில்லை.- வாசன் # தற்”காலி”கம் தான் , நிரந்”தரம்” இல்லை, எப்போ வேணா கலையலாம்
====================
5 RK.நகரில், பணத்தை நம்பி சிலர் களமிறங்கியுள்ள நிலையில், நாங்கள் மக்களை நம்பி களமிறங்கி உள்ளோம் -தமிழிசை # நீங்க நம்பி என்ன பயன்? மக்கள் உங்களை நம்பியாரா பார்க்கறாங்களே?
===============================
6 அரசு வீட்டை காலி செய்யுங்க...! பன்னீர்செல்வத்திற்கு 'நோட்டீஸ்' # முதல்ல இந்த அரசை காலி செய்வாராம், அதுக்குப்பின் தான் அரசு வீட்டை காலி செய்வாராம்
===============
7
ஊழல் இல்லாத தொகுதியாக மாற்றுவேன்: கங்கை அமரன் # அதுக்கு எதுனா ராயல்டி கேட்பீங்களோ?
===================
8
திருப்பதி உண்டியலில் செலுத்தப்பட்ட ரூ.13 கோடி செல்லாத நோட்டுகளை மாற்றிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்: ரிசர்வ் வங்கிக்கு தேவஸ்தானம் மீண்டும் கடிதம் #உண்டியல்ல பணம் போட்டவன் புது நோட்டை வந்து வாங்கிக்கப்போறான்
=================
9
ரூ.2 ஆயிரம் கோடி போதை மருந்து கடத்தல்- மம்தா குல்கர்னிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் # விஜய் மல்லய்யா போல் வெளிநாடு போய்டப்போறாரு
=====================
10
எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களின் வீடுகளில் 73 திருட்டுச் சம்பவங்கள் # திருடன் வீட்லயே திருடற பலே திருடன் யாரு?
========================
11 தினமும் 20 மணி நேரம் பணியாற்ற வேண்டும்: உ.பி CM வலியுறுத்தலால் அரசு ஊழியர்கள் கலக்கம் # மீதி 4 மணி நேரம் குளிக்க ,சாப்பிட வே சரியா இருக்கும், தூங்குவது எப்போ?
======================
12 டிடிவி.தினகரன் கற்பனை கோட்டையில் மிதந்து வருகிறார் - கேபி.முனுசாமி # ஓட்டுக்கு பணம் தந்து வருகிறார்.அதை கவனிங்க
===============
13 நகைக்கடை கொள்ளையன் வாக்குமூலம்: வடமாநில கொள்ளையர்கள்150பேர் தமிழகத்தில்பதுங்கல்
# கொள்ளைக்காரர்கள் கூடாரம் ஆகி.வருதா தமிழகம்?
================
14 சிவப்பாக மாறிய திருச்செந்தூர் கடல்: பக்தர்கள் கடும் பீதி # கோயில் குங்குமத்தை கடல்ல கொட்டீட்டாங்களா?
==============
15 வாக்காளர்களுக்கு பணம் தர பெயர், போன் நம்பர் சேகரிப்பு: புதிய பார்முலாவில் தினகரன் அணி #10000ரூக்கு டாப் அப் பண்ணி விட்ருவாரோ?
=============
16 மது, சூதுவை மக்கள் விரும்புவார்களா?: ஓபிஎஸ் அணி வேட்பாளரை கலாய்த்த தீபா அணி
# சூது வாது தெரியாத அரசியல் மாதுனு தீபா வை சொல்ல இனி வழி இல்லை
=============
17 தமிழக நெடுஞ்சாலைகளில் 1ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்வு: செய்தி - நெடுஞ்சாலைக் கொள்ளைகள் கலி காலத்தில் பெருகும்னு சொன்னாங்ளே இதானா?
============
18 வங்கிகள் கூடுதல் அபராதம் விதிப்பதில் எந்த தவறும் இல்லை: மத்திய அரசு # அப்படிப்பட்ட.வங்கிகளிடம் கணக்கு.வைத்திருக்கும் ஜனங்களிடம் தான் தவறு
===============
19 RKநகரில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை -தினகரன் # அந்த ஹாஸ்பிடல் ஸ்பெஷாலிட்டியே சிசிடிவி கேமரா எதுவும் இல்லாதது.அதானே?
=============
20 காதலருடன் உறவு கொள்வதை லைவாக காட்டப் போறேன்: நடிகை கவிதா அதிரடி அறிவிப்பு # டிடிஎஸ் நுட்பத்துல 3டி எபக்ட்ல வருதாம்
===============