விஜய் ஆண்ட்டனியின் கிராஃப் வித்தியாசமானது. ஆர்ப்பாட்டம் இல்லாமல் அனைத்தும் வெற்றிப்படங்க்ள் + வித்தியாசமான கதைகள். இந்த முறை மேஜிக் ரைட்டர் அமரர் சுஜாதா வின் ஆ நாவல் தழுவி வெற்றி தேவதையையும் தழுவி இருக்கிறார்
ஹீரோ ஐடி ல ஒர்க் பண்றவர். புதுசா கல்யாணம் ஆனவர் ,சம்சாரத்தோட ஜாலியா இருக்கார். திடீர்னு அவரோட வாழ்க்கைல ஒரு புயல் அவர் மண்டைக்குள்ளிருந்து ஒரு குரல் . தற்கொலை பண்ணிக்கத்தூண்டுது.
சைக்யாட்ரிஸ்ட்டை அணுகறார்
முன் ஜென்மக்கதை. ஹீரோ போன ஜென்மத்தில் மனைவியோட சந்தோசமா இருக்கும் போது தனுசு ராசி யில் பிறந்த ஒரு கன்னிராசிக்காரன் அவர் சம்சாரத்தைக்கரெக்ட் பண்ணிடறான். ஒரு கட்டத்துல சம்சாரமே விஷம் வெச்சு ஹீரோவை தீர்த்துக்கட்டிடுது.அதுக்குப்பழி வாங்க ஹீரோ இந்த ஜென்மத்தில் அதே சம்சாரத்தைக்கட்டி இருக்கார்
நிற்க
இதுதான் கதைன்னு அசால்ட்டா இருக்க வேணாம். திரைக்கதை யாரு? சுஜாதா. பல பல ட்விஸ்ட்கள் இருக்கு
வெண் த்ரையில் காண்க
ஹீரோவா சைலண்ட் ஹிட் ஸ்டார் விஜய் ஆண்ட்டனி . இவர் அண்டர் ப்ளே ஆக்டிங்க் சொல்லியே தர வேணாம் , அசால்ட்டா வருது. வெரி குட் பர்ஃபார்மென்ஸ்
ஹீரோயினா அருந்ததி நாயர் . மிக அமைதியான நடிப்பு , பின் பாதியில் கலக்கி விட்டார்
வில்லன் நடிப்பு சுமார் தான் . கேனம் போல் சிரிப்பது , லூஸ் போல் பேசுவது என லைட்டாக சொதப்பல் ரகம்
பின்னணி இசையும் ஹீரோவே தான் ம் மிரட்டி விட்டார் பல இடங்களில் பிஜிஎம் கலக்கல் ரகம்
சபாஷ் டைரக்டர்
1 அறிமுக இயக்குநர் என்ற பயமே இல்லாமல் அனுபவ சாலி போல் அசால்ட்டாக திரைக்கதை சொன்ன விதம் பிரமாதம்
2 படத்தில் மொக்கை காமெடி காட்சிகள் எதுவும் வைக்காமல் நேர் கோட்டில் திரைக்கதை பயணிப்பது
3 யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் காட்சிகள் குட்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 ஹீரோ போன ஜென்மத்தில் துரோகம் இழைத்த மனைவியை கொலை செய்பவர் எனில் எதுக்காக அந்த தற்கொலை நாடகம்? விளக்கப்படவில்லை
2 வில்லனின் அந்த ரெட் மெடிசன் காட்சிகள் எடுபடவில்லை. காரணம் இருமுகன் படத்தில் அது சொல்லப்பட்டு விட்டது
3 முன் ஜென்மத்தில் மனைவி துரோகம் செய்தாரா? இல்லையா? என்பதை தெளிவாக காட்டவில்லை ( சீன் ஆக காட்டலை என்ற வருத்தத்தில் சொல்லலை )
4 சாதா ஐ டி ஊழியர் க்ளைமாக்சில் அந்நியன் ஆகி ஃபைட் போடுவது பூச்சுற்றல் ( மருந்து காரணம் எல்லாம் எடுபடலை)
நச் டயலாக்ஸ்
1 மனைவி மேல் சந்தேகம் வந்துட்டா வருத்தமும் அதிகம் வலியும் அதிகம் .இது ஆம்பளைங்களால மட்டுமே உணர முடியும் #சைத்தான்
2 அழுதா மட்டும் அவ நல்லவ ஆகிட முடியுமா? அமுக்கி.பசப்பி #சைத்தான்
3 அடுத்தவன் பொண்டாட்டியை இங்க்லீஷ்ல பேசி கரெக்ட் பண்ணிடுவீங்க.நாங்க வேடிக்கை பாத்துட்டு இருப்போம் ? #சைத்தான் #SAITHAN
தியேட்ட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 திகில் படம்னா பிஜிஎம் கலக்கனும்.கலக்குது #சைத்தான்
2 திரைக்கதை உத்தி அமரர் சுஜாதா வின் "ஆ" நாவலில் வருவது போல் மண்டைக்குள் ஒரு குரல் #சைத்தான்
3 வந்தியத்தேவன்(கலாசல்)டைம் லைனை எட்டிப்பார்த்த மாதிரி ஒரு எபக்ட்.கொல்லு,தற்கொலை ,சாவு னு .கொஞ்சம் ரிஸ்க் ஆன திரைக்கதைதான் #சைத்தான்
4 திகில் படங்களின் முதல் விதி பயம் ஏற்படுத்தும் உருவத்தை 5 நொடிக்குமேல் திரையில் காட்டக்கூடாது.பயம் போய்டும் #சைத்தான்
5 தமிழ் சினிமா வில் முன் ஜென்மக்கதைகள் வெற்றி வாய்ப்பு 50%:50% #சைத்தான்
6 சைத்தான் வெற்றிப்படமா?இல்லையா?ன்னு தீர்மானிக்க இன்னும் 30 நிமிசம் இருக்கு.ஆனா தோல்விப்படம் இல்லைனு இப்போவே சொல்லலாம்
சி பி கமெண்ட் -சைத்தான் - ஏ சென்ட்டர் ரசிகர்களுக்கான சைக்கலாஜிக்கல் க்ரைம் த்ரில்லர்.விகடன் -43 ,ரேட்டிங் - 3 / 5 (சுஜாதா வின் ஆ நாவல் ) #SAITHAN