Thursday, September 01, 2016

ஸ்வாதி கொலை வழக்கு - என் கருத்து

நெட் தமிழன் ஊர்ல இருக்கும் ஆம்பளைங்களையெல்லாம் அம்போன்னு விட்டுட்டு பொண்ணுங்களுக்கு ஃபாலோயர்ஸ் ஏற்ற மார்க்கெட்டிங் பண்ணுவான்


===============



மூளை எப்போதும் சுறுசுறுப்பாய் இருக்க தினமும் 7 மணி நேரத்தூக்கம் அவசியம்.


9 pm to 4 am
10 PM to 5 am
11 pm to 6 am
எனி 1


==============

3 தினமும் யாராவது ஒருவருக்காவது நீங்கள் உபயோகமாக இருந்தால் உங்கள் ஜாதகம் யோகம் பெறும்

============

4 சார் .ரயில்வே ஊழியர்கள் அதிருப்தியால் மோடி க்கு அடுத்த தேர்தலில் பாதிப்பு வருமா?

நோ வே

===============

5 உங்களை யாராவது பரிகாசம் செய்தாலோ,திட்டினாலோ அவங்களுக்கு ரிப்ளை பண்ணிட்டு இருக்காதீங்க.உங்க பாலோயர்சுக்கும் அந்த ராணுவ ரகசியம் தெரிஞ்சிடும்.


=============



6 எதிரி உங்களை முழு பலத்தோடு தாக்க வரும்போது ஒதுங்கிப்போய்டுங்க.எதிரி வேறு ஒரு சூழலில் வேறு ஒருவரிடம் மாட்டும்போது அப்போ அடிங்க



============



7 மாமியார் மருமக 2,பேரையும் ரசிக்கும் உலகம் இது.உதா.நாகார்ஜூன் ஜோடி அமலா.



மகன் நாகசைதன்யா வின் ஜோடி சமந்தா



===============




8 சாலை ஓரங்களில் ஒட்டப்பட்ட சினிமா போஸ்டர்களைப்பார்க்கும்போது பார்க்காத படங்கள் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்த வல்லவை ஒரு தீவிர சினிமா ரசிகனுக்கு



=============



9 கொலையாளியை காலையிலேயே சுற்றி  வளைத்த போலீஸ் நள்ளிரவு 1 மணி வரை காத்திருக்கத்தேவை இல்லை. அரசியல் தலைவர் என்றால்தான் அப்படிச்செய்யனும்





==========================


10  வயசுல மூத்த பொண்ணுக்கிட்ட என்னடா லவ்வு.ன்னு கேட்ட அதே பொண்ணு தான் முதல் மரியாதை படத்தை 3 டைம் சிலாகிச்சு பேசுச்சு


==============

11 ஒரு தலைக்காதல் தோல்வியால் கொடூரக்கொலை என்பது மிக அரிது.கொலையாளியை நன்றாக விசாரித்து உண்மையை வெளிக்கொணர வேண்டும்


============

12 மனோவியல் நிபுணர்கள் கூற்றுப்படி துரோகம் ,பழிக்குப்பழி போன்ற உணர்வுகளில் தான் பொது இட கொடூரக்கொலைகள் அரங்கேறுமாம்


=============

13 ராம்குமார் க்கு கொடூரக்கொலை ,தற்கொலை முயற்சி ,பொது இட அமைதிக்கு பங்கம் விளைவித்தல் என எல்லா பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்து தண்டனை தரனும்

============

14 காதலிக்க வற்புறுத்தி அனுப்பிய Sms சை போலீசிடம் காட்டுவேன் என ஸ்வாதி மிரட்டியதால் அதுக்கு பயந்து கொலை என்பது நம்பக்கூடியது அல்ல


===========

15 நான் கொலையாளியை ஆதரிக்கவில்லை.ஆனால் கொலைக்கான உண்மையான காரணத்தை உலகறியச்செய்ய வேண்டும்.அதைப்பொறுத்தே தண்டனை தீர்மானிக்கப்படனும்

===========

16 ராம் குமார் ஸ்வாதி செல் போன் களில் பரிமாறப்பட்ட SMS கள் பொது மக்கள் பார்வைக்கு கொண்டு வரனும்.


============
17 கொலையாளியின் அம்மா,தங்கை போட்டோ வை மீடியாக்கள் வெளியிடுவது சட்டப்படி ,தார்மீகமுறைப்படி தவறு.


==========

18 கொலை செய்யப்பட்டவர் ,கொலையாளி இரு தரப்பு குடும்பத்தார் வழக்கு தீர்ப்பு வரும் வரை ட்விட்டர்/FB யில் கருத்து சொல்லாமல் இருப்பது நலம்.


===========
19 கொலை வழக்கு தீர்ப்பு வரும் வரை சாட்சி வாட்ச்மேன் கோபால் படம் ,தகவல் ் மீடியாவில் வருவது தவறு


============

20 ஸ்வாதி கொலை வழக்கு- நீதி = பெண்கள் யாராவது யாராலாவது எப்போது மிரட்டப்பட்டாலும் உடனடியாக போலீசில் புகார் தருவதே நல்லது


=============