1 மிஸ்.கோபமா இருக்கும் காதலனை சமாதானப்படுத்த கோபமா?ன்னு ஒரு பேப்பர்ல எழுதிக்காட்டச்சொன்னேனே?
அவனுக்கு படிக்கத்தெரியாது
================
2 டியர்.நான் கோபமா இருக்கும்போது என் கன்னம் சிவக்குதா?ன்னு பார்த்து சொல்லுங்க.
நீ என்ன சாய் பல்லவியா?மருதாணி வெச்சாலே சிவக்காது விரல்
================
3 டாக்டர்.2,வருசமா என் தலைல பேன் குடி இருக்கு.காலி பண்ண என்ன வழி?
வாடகையை டபுள் ஆக்கிப்பாருங்க
=============
4 டியர்.ஏன் என் கிட்டே பேசறதில்ல?
நீ 1000 கிமீ தள்ளி இருக்கே.எப்டி உன் "கிட்டே"பேசமுடியும்?
=============
5 10 வது கூட படிக்காத மாப்ளை எப்டி பேங்க் மேனேஜர் ஆனார்?
கட்சியோட வாக்கு வங்கியை கவனிக்கும் வோட் பேங்க் மேனேஜராம்
=================
6 பாரீஸ் கார்னர், லஸ் கார்னர் ல சினிமா தியேட்டர் கட்னா நல்லா போகும்
ஏன்?
கார்னர் சீட் ? ,லவர்ஸ்ஸ்பெஷல் தியேட்டர்னு விளம்பரம் பண்ணலாமில்ல?
====================
7 எல்லா தேர்தல்லயும் நின்னு ஜெயிச்சவன்னு பேர் எடுத்தவன் நான்
அப்டியா? போப் ஆண்டவர் தேர்தல்ல நின்னு ஜெயிச்சிடுங்க பார்ப்போம்
====================
8 தலைவர் ஒரு நேர்மையான ஊழல்வாதின்னு எப்டி சொல்றே?
எந்த வேலைக்கு எவ்ளோ ஊழல்னு ப்ரைஸ் லிஸ்ட் கொடுத்துடுவார்
===================
9 உனக்குப்பக்கத்துல எப்பவும் இஞ்சிமொரப்பான், இஞ்சி மிட்டாய் வெச்சிருக்கியே ஏன்? ஜீரணக்கோளாறா?
ஆர்வக்கோளாறு. இஞ்சிNEAR ஆகிடலாமில்ல?
====================
10 நேத்து வாக்கிங் போகும்போது என் தங்கச்சியைக்கட்டிப்பிடிச்சீங்களாமே?ஏன்?
உன் சொந்தஙகளை அரவணைச்சு நடக்கனும்னு நீதானே சொன்னே?
====================
11 மிஸ்! ஐ லவ் யூ!
அப்டியா? என் அம்மா கிட்டே தில்லா சொல்ல முடியுமா?
சொல்லிடுவேன், உன் அப்பா 1ம் சொல்ல மாட்டாரா?
====================
12 டியர், ஐ லவ் யூ. நீயும் சொல்லு
உம்
என்னாதிது?
நீ உம் சொல்லுன்னு நீங்க தானே சொன்னீங்க?
=======================
12 பசங்களை தூக்கி எறிஞ்சு பொண்ணுங்க பேசுனாக்கூட பசங்க கவலைப்படறதில்லை, ஏன்?
எப்டியோ பொண்ணுங்க பேசினா சரினு நினைக்கறாங்க போல
======================
13 தலைவர் டெய்லி காலைல சுண்டல் சாப்பிடறாரே? எதுக்கு?
பதவியில் இருந்தா சுரண்டல், இல்லைன்னா சுண்டல் இதுதான் அவர் கொள்கை
====================
14 ஜட்ஜ் = சப் இன்ஸ்பெக்டரை தாக்குனியா?
கைதி = ஆக்சுவலா நான் தாக்குனது கமிஷனரை. அவங்க கவுரவம் பாதிச்சிடும்னு அப்டி சொல்றாங்க
==================
15 தலைவரே! நோட்டா பற்றி என்ன நினைக்கறீங்க?
அப்டின்னா என்ன?கள்ள நோட்டா?
====================
16 உங்க கிட்னில கல் இருக்கு
அய்யய்யோ, அடிக்கடி தட்”கல்” ல புக் பண்ணி ட்ரெய்ன் ட்ராவல் பண்ணுவேன்,அதனாலயோ?
=================
17 மக்கள் எளிமையா வாழக்கற்றுக்கொள்ள வேண்டும்னு ஏன் தலைவரே அறிக்கை விடறீங்க?
அப்போ தானே அரசியல்வாதிக நாம ஆடம்பரமா வாழ முடியும்?
=======================
18 டியர், உங்க கூட சண்டை போட ஆசையா இருக்கு, எப்போ ஃப்ரீ?
இரு, எங்கம்மாவை அனுப்பறேன், அவங்க ஆல் டைம் ஃப்ரீ
=======================
19 டியர், முதுகு காட்டி நின்னு அந்தப்பக்கமா என்னமோ சொல்றியே? ஏன்?
ஐ லவ் யூ சொல்லிட்டு எங்கே திருப்பி சொல்லு பார்ப்போம்னீங்க, அதான் திரும்பி நின்னு சொல்றேன்
=====================
20 வியாபாரம் பண்ணும்போது சிரிச்ச முகமா இருக்கனும், நீங்க மட்டும் ஏன் சிடு சிடுன்னு ?
இஞ்சி “மொரப்பா” விற்கறேன், அதான் முறைப்பா விற்கறேன்
=======================