1 டெய்லி ஷீட் காலண்டர் பார்த்து நான் தத்துவம் சொல்லக்கூடாதுனு கத்துக்கிட்டேன்
ஏன்?
கிழி கிழினு கிழிச்சுடறாங்க
===============
2 தலைவரே! நம்ம ஆட்சில இனி கட்டப்பஞ்சாயத்து ரவுடியிசம் இருக்காதுனு எப்டி சொல்றீங்க?
அதான் அண்ணனுக்கு கல்தா கொடுத்துட்டமே?
=================
3 தலைவரே! தமிழே நமக்குக்குளறுது, ஆனா இங்க்லீஷ்ல பொளந்து கட்றீங்க ட்விட்டர்ல எப்;படி?
அட்மின்க்கு இங்க்லீஷ் தெரியுமில்ல/?
=================
4 மேடம், பிரச்சாரத்துக்கு ஏன் சேலை கட்டாம துக்ளியூண்டு டிரஸ் போட்டுட்டு வர்றீங்க?
நமீதா = சேலை கட்டிட்டு வந்தா அழுக்காகிடுது.நமக்கு சுத்த பத்தம் ரொம்ப முக்கியம்
===============
5 மணிரத்னத்துக்கு போட்டியா 90% படப்பிடிப்பை இருட்லயே முடிச்ட்டோம்\\
வெரிகுட்
இப்போ ஹீரோயின் 3 மாச கர்ப்பம்
===============
6 ஹீரோயின் ஒரு டீச்சர் , கேம்ஸ் பீரியட், சயின்ஸ் பீரியட்,மேத்ஸ் பீரியட் எடுக்கறாங்க
\
ஓஹோ, இது ஒரு பீரியட் ஃபிலிம்னீங்களே?இதானா?
================
7 கதைக்கு தேவைப்பட்டா மட்டுமே கவர்ச்சியா நடிப்பேன்
\\
நல்லா மாட்டிக்கிட்டீங்க, நம்ம படமே ஆதாம் ஏவாள் கதை தான் , காஸ்ட்யூமே கிடையாது
==============
8 ஏய் மிஸ்டர்! எதுக்காக என்னை ஃபாலோ பண்றீங்க?
\\ நீங்க தான் மொக்கை ஃபிகரா இருக்கீங்க ,அட்லீஸ்ட் உங்க வீட்ல தங்கச்சியாவது நல்ல ஃபிகரா|?னு பார்க்கத்தான்
==============
9 உங்க படத்துல எப்பவும் மலையாள ஹீரோயினையே போடறீங்களே ஏன்?
தமிழ் ஹீரோயினை போட்டா தமிழ் சொல்லித்தர்றதுக்குள்ள தாவு தீர்ந்துடுது
=================
10 மேடம், தமிழ் நாடு பார்டர் தாண்டுனதும் சேலையைக்கழட்டிட்டு ஸ்விம் டிரஸ் போட்டுக்கிட்டீங்க?
கவர்ச்சிக்கு ஒரு எல்லை வெச்சிருக்கேன்னேனே இதான் அது
====================
11 ஆடியன்ஸ் செல் நெம்பரை எதுக்கு வாங்கறாங்க?\
படத்துல மெசேஜ் இல்லைனு யாரும் சொல்லிடக்கூடாதில்லை.அதான் ஒரு மெசேஜ் அனுப்புவாங்க
==================
12 தலைவரே!ஆண்ட்ராய்டு ஃபோனை விட ஆப்பிள் ஃபோன் தான் பெஸ்ட்டா எப்டி?
ஆண்ட்ராய்டு என்றால் உதடுகள் ஒட்டாது, ஆப்பிள் என்றால் தான் உதடுகள் ஒட்டும்
================
13 டியர், நீயும் ட்விட்டர்ல இருக்கே, நானும் ட்விட்டர்ல இருக்கேன், ரூல்சை மீறலாமா?
அதுக்காக ஐ லவ் யூ சொல்ல 143 சொல்லாம 140ன்னா எப்டி?
=================
14 தலைவரே! ஹவாலா பணம் எல்லாம் என்னாச்சு?
பேரன் சினிமா படம் எடுத்து திவாலா ஆகிடுச்சு
===============
15 டியர், என்னைப்பற்றி ஒரு கவிதை எழுதுங்க
ம், சன்மானம் 250 ரூபா தருவியா?
==============
16 டிம்பிள் கபாடியா தங்கை பெயர் சிம்பிள்-னு சொல்றாங்களே, நிஜமா?
பேசாம சிம்ப்பிள் சடுகுடுன்னு வெச்சிருக்கலாம்
=================
17 தலைவரே! நீங்க படிக்கும்போது ஃபில் இன் த பிளாங்க்ஸ் ல மட்டும் ஃபுல் மார்க்கா? எப்படி?
“கோடி”ட்ட இடத்தை நிரப்பவும் ல கோடி இருக்கில்ல
================
18 தலைவரே! எத்தனையோ பொண்ணுங்க இருந்தாலும் லாவண்யா மேல மட்டும் ஒரு கிரேசா? ஏன்?
லஞ்ச லாவண்யம், ஹிஹி
==================
19 தலைவரே! உங்க குடும்பத்துல மொத்தம் 234 பேரு இருப்பாங்க இல்ல?
ஆமா\\
ஏன் எல்லாருக்கும் வாய்ப்பு தரக்கூடாது?
====================
20 டியர், ட்வீட்டப் முடிச்ட்டு நைட் 10 க்கு ரிட்டர்ன் ஆவியா?
ச்சே ச்சே ஆவியா இல்ல,மனுசனா
===================