Monday, June 20, 2016

எனக்கு இன்னொரு பேர் இருக்கு - திரை விமர்சனம்:

தாதா என்று நம்பப்படும் ஒரு சாதாரண மனிதன், தாதாக்களின் உலகில் பெறும் அனுபவங்கள்தான் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படம்.


சென்னை ராயபுரத்தைத் தன் கைக்குள் வைத்திருக்கும் ராயபுரம் நைனா (சரவணன்), தன் மகள் ஹேமாவை (ஆனந்தி) ஒரு தாதாவுக்குக் கட்டிக்கொடுத்து அவரை அடுத்த நைனாவாக்க நினைக்கிறார். நைனாவின் ஆட்கள் சில தற்செயலான நிகழ்வுகளால் ஜானியை (ஜி.வி. பிரகாஷ்) பெரிய தாதாவாக நினைத்துவிடுகிறார்கள். அவர் கள் பரிந்துரையை நைனாவும் ஏற்கிறார். ஆனால், பிரகாஷோ ரத்தத்தைக் கண்டாலே வலிப்பு வந்துவிடும் விசித்திர நோயாளி. எனினும், ஆனந்தியை ஒரு கடை யில் சந்தித்து மனதைப் பறி கொடுக்கும் பிரகாஷ் இந்தக் கல்யாணத்துக்கு ஒப்புக்கொள் கிறார். இதற்கிடையில் சரவ ணனை விரட்டிவிட்டு இன்னொரு தாதா நைனாவாகிறார். டம்மி தாதாவால் நிஜ தாதாவை வீழ்த்த முடிந்ததா என்பதே கதை.


காமெடி படமா, நிழல் உலக தாதாக்களின் சாம்ராஜ்யம் குறித்த படமா என்று கணிக்க முடியாத அளவுக்கு இரண்டையும் கலந்து கொடுத்திருப்பதில் இயக்கு நர் சாம் ஆண்டன் தேறி விடுகிறார். தாதாவை முதலி லேயே அறிமுகப்படுத்திவிட் டாலும் ஜி.வி.பிரகாஷ் வரும் முதல் சில காட்சிகள் விடலைத் தனமான இளைஞர்களின் கதையாகவே நகருகின்றன. பெண்களைக் கேவலப்படுத்தும் வசனங்களுக்கும் குறைவில்லை. தாதாக்களை ஜி.வி.பிரகாஷ் சந்தித்த பிறகு படம் வேறு வடிவம் எடுக்கிறது.


மொத்தப் படமும் பல்வேறு ஆக்‌ஷன் படங்களின் உல்டா வாக அமைந்துள்ளது. தாதா படங்கள் பரிகசிக்கப்படுகின்றன. ஆக்‌ஷன் படங்களைக் கிண்டலடித்துக் கொண்டே அவற்றின் காட்சி களைத் திறமையாகப் பயன் படுத்திக்கொண்டு படத்தை நகர்த்திச் செல்கிறார் இயக்குநர்.


ரவுடியைத் தேர்வு செய்ய ரியாலிட்டி ஷோ நடத்துவது, ஜி.வி.பிரகாஷின் சாகசங்களை டீஸராகக் காட்டுவது என சமகால டி.வி. ஷோக்களை கிண்டலடிக்கவும் செய்கிறார் கள். ஏற்கெனவே வந்த படங் களை மட்டுமின்றி, வரவிருக் கும் படத்தின் இசை, வசனங் களை இயக்குநர் அளவுக்கு அதிகமாகவே பயன்படுத்தியிருக் கிறார். மன்சூர் அலிகான், பொன்னம்பலத்தையும்கூட 1990-களில் நடித்த பாத்திரங் களிலேயே காட்டுகிறார். சொந்த சரக்கில் துளியும் நம்பிக்கை இல்லையா?


இரட்டை அர்த்த வசனங் களும் தூக்கலாக இருக்கின்றன. ஜி.வி.பிரகாஷ் பாதிரியார் ஆவது போன்ற மத நம்பிக்கை சார்ந்த காட்சிகளில் காமெடியைப் புகுத்தியிருப்பது ரசிக்கவைக்கவில்லை.



படம் நகைச்சுவைப் பாதை யில் வேகமாகப் பயணிக்கும் போது சென்டிமென்ட்டுக்குள் புகுந்துவிடுகிறது. அங்கிருந்து ஆக்‌ஷன், அதிலிருந்து காமெடி எனக் கதை சுற்றிச் சுற்றி வருவது படத்தின் வேகத்தைக் குறைக்கிறது.


காமெடி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நியதிப்படி லாஜிக்கே இல்லாமல் கதை பயணிக்கிறது. வில்லனின் அடியாளின் எதிர் வீட்டிலேயே சரவணன் ஒளிந்து கொண்டிருப்பதுகூட வில்லனுக் குத் தெரியவில்லை. ரத்தத் தைக் கண்டாலே பயப்படும் ஜி.வி.பிரகாஷ், ஆஜானுபாகு வாக இருக்கும் வில்லனை கிளைமாக்ஸில் புரட்டி எடுக் கிறார்.



ஜி.வி.பிரகாஷ் தன் பாத் திரத்தை நன்கு உள்வாங்கிச் கச்சிதமாகச் செய்திருக்கிறார். முந்தைய படங்களைவிட நடிப் பில் கொஞ்சம் தேறியிருக்கிறார். படத்தில் டான்ஸர் அவதாரமும் எடுத்திருக்கிறார்.


நைனாவாக எடுத்த எடுப் பிலேயே மிரட்டுகிறார் சரவ ணன். ‘பாகுபலி’ படத்தில் வரும் காலகேயர்களின் பாஷை யில் பேசி கிச்சுகிச்சு மூட்டு கிறார் கருணாஸ். யோகி பாபு வும் கருணாஸுடன் சேர்ந்து காமெடியாட்டம் ஆடியிருக் கிறார்.


நாயகி ஆனந்தி ஜி.வி.பிர காஷைக் காதலிக்கிறார், டூயட் பாடுகிறார். அதோடு சரி. ‘பாகுபலி மகா’ என்ற கெட்டப்பில் வரும் மொட்டை ராஜேந்திரன் பாத்திரம் புஸ்வாணமாகிவிடுகிறது. ஜி.வி.பிரகாஷின் அப்பாவாக வரும் வி.டி.வி. கணேஷ் போடும் திட்டங்கள் அரதப் பழசாக இருந்தாலும் ரசிக்க வைக்கின்றன.




ஜி.வி.பிரகாஷே இசையமைத் திருக்கிறார். ‘கண்ணை நம் பாதே... உன்னை ஏமாற்றும்...’ பாடலை கானா வடிவில் கொடுத்து ரசிகர்களை ஈர்த் திருக்கிறார். மற்ற பாடல்கள் மனதில் நிற்கவில்லை. கிருஷ் ணன் வின்சென்டின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.



தாதா பாணியிலான ஒரு கதையை நகைச்சுவையாகக் கையாண்டிருப்பது நல்ல உத்தி. கதையோட்டத்தில் வரும் சில பல ஓட்டைகளும் சீரற்ற தன்மைகளும் பூச்சுற்றல்களும் படத்தின் மீதான ஈர்ப்பைக் குறைக்கின்றன.


நன்றி - த இந்து