Monday, June 20, 2016

முத்தின கத்திரிக்கா -திரை விமர்சனம்:

நாற்பது வயதாகியும் திரு மணம் ஆகாத ஒருவனின் வாழ்க்கையில் காதலும் அரசியலும் கலந்து செய்யும் கலாட்டாக்கள்தான் இந்த ‘முத்தின கத்திரிக்கா’


பரம்பரை அரசியல் குடும்பத் தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (சுந்தர் சி). தன் முன்னோர்கள் பெரி தாகச் சோபிக்காமல்போன அரசிய லில், தான் ஒரு பெரிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற இலக் கோடு ஒரு தேசியக் கட்சியில் இருக் கிறார். அவருக்கு உதவியாக சரவ ணன் (சதீஷ்) வருகிறார். மகனுக் குத் திருமணம் ஆகவில்லை என்ற கவலை முத்துப்பாண்டியின் அம்மாவுக்கு (சுமித்ரா).


அதே ஊரில் சேர்மனாக இருக் கும் புல்லட் பாண்டி (விடிவி கணேஷ்), கவுன்சிலர் வாஞ்சிநாதன் (சிங்கம்புலி) இருவரும் முத்துப் பாண்டியின் அரசியல் வளர்ச்சி யைக் கெடுக்கத் தொடர்ந்து பல வியூகங்களை வகுக்கிறார்கள்.



இதற்கிடையில், கோயிலில் சந்திக்க நேரும் மாயாவின் (பூனம் பாஜ்வா) மீது காதல் கொள்கிறார். மாயாவின் தந்தை பெண்ணைத் தர மறுக்கிறார். அரசியலிலும் காதலிலும் சுந்தர் சி எப்படி வெல்கிறார் என்பதுதான் கதை.
மலையாளத்தில் பிஜுமேனன், நிக்கி கல்ராணி நடித்த ‘வெள்ளி மூஙா’ படத்தின் மறுஆக்கம்தான் ‘முத்தின கத்திரிக்கா’. சுந்தர் சியின் உதவியாளராக இருந்த வேங்கட் ராகவன் இதை இயக்கியுள்ளார்.



காமெடி இருந்தால் போதும் என்று எடுக்கப்பட்டிருக்கும் படம். அதற்கான காட்சிகளுக்கும் வசனங்களுக்கும் குறைவில்லை. ஆனால், எதுவும் பெரிதாகக் கவர வில்லை. சுந்தர் சி மக்களிடம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளச் செய்யும் விஷயங்கள் ரசிக்க வைக்கின்றன. விடிவி கணேஷ், சிங்கம்புலி, சுந்தர் சி சந்திக்கும் ஒவ்வொரு இடமும் கலகலப்பு. சுந்தர் சி செய்யும் தந்திரங்களை எந்தக் கேள்வியும் எழுப்பாமல் பார்த்தால் ரசிக்கலாம்.



நகைச்சுவை என்னும் பெயரால் ரசக் குறைவான விஷயங்களும் இடம்பெறுகின்றன. பூனம் பாஜ்வாவின் அம்மாவாக வரும் கிரணுக்கும் சுந்தர் சிக்கும் இடை யிலான பழைய கதையை வைத்து செய்யப்படும் காமெடி முகம் சுளிக்கவைக்கிறது.



படத்தில் நாயகன் சகட்டுமேனிக் குப் பரிகாசம் செய்யப்படுகிறார். படம் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகரும் விதம் சரளமாக உள்ளது. ஆனாலும் திரைக்கதை விறுவிறுப்பாக நகரவில்லை. திரைக்கதையில் வேகத்தைக் கூட்ட இயக்குநர் இன்னும் மெனக் கெட்டிருக்கலாம். சுந்தர் சியின் நண்பனாக வரும் சதீஷ் கொடுக் கும் பதிலடிகள் சுவாரஸ்ய மானவை.


பூனம் பாஜ்வாவுக்கு வேறொரு இடத்தில் திருமணம் பேசி முடி வான பிறகு அடிக்கடி சுந்தர் சி வீட்டுக்கு அவரது அம்மா கிர ணுடன் ஏன் வர வேண்டும்? காவல் துறை அதிகாரியான ரவி மரியா தன் மகளுக்குப் பார்த்த பையனைப் பற்றி விசாரிக்காமலேயே எப்படி முடிவுசெய்கிறார்? சுந்தர் சியின் வலையில் எல்லோரும் விழுந்து விடுவது எப்படி? இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பக் கூடத் தோன்றாத அளவுக்குத் திரைக் கதை தளர்வாக இருக்கிறது.



நடிப்புக்கான எந்தச் சவாலும் இல்லாத வேடம் சுந்தர் சிக்கு. பூனம் பாஜ்வாவுக்கும் அப்படியே. கணேஷ், சிங்கம்புலி, ரவி மரியா, சதீஷ், சுமித்ரா ஆகியோர் தங்களுக் குக் கிடைத்த வாய்ப்பை நன் றாகப் பயன்படுத்திக் கொண் டிருக்கிறார்கள்.


பானு முருகனின் ஒளிப்பதிவில் குறை ஏதும் இல்லை. இசை யமைப்பாளர் சித்தார்த் விபின் இசை பரவாயில்லை.



சிரிக்கவைப்பதையே இலக் காகக் கொண்ட படத்தில் காட்சி களும் திரைக்கதையும் அந்த அள வுக்கு சுவாரஸ்யமாக இல்லை.


நன்றி - த இந்து