1 டியர், அடிக்கடி மாங்காய் சாதம் சாப்பிட்டா மாங்காய் மடையன் ஆகிடுவே-னு குழந்தை கிட்டே ஏன் பொய் சொன்னே?
எனக்கு மேங்கோ ரைஸ் கழற ( கிளற) தெரியாது
===================
2 தலைவரே! நாம ஜெயிச்சுட்டா முதல் வேலையா என்ன செய்வோம்?
முதல்வராகப்பதவி ஏற்கிறேன்னு கையெழுத்துப்போடனும்
அப்போ மதுவிலக்கு தான் முதல் கையெழுத்து என்பது பொய் தானே?
=================
3 மேடம், மக்களோட வரிப்பணத்துல தானே தாலி தந்தீங்க?
ஆமா,
ஆனா மாங்கல்யப்பிச்சை-னு சொல்றாங்களே அப்போ நீங்க கேட்கும் வாக்குப்பிச்சை?
================
4 தலைவரே! அரசுப்பள்ளிகளில் தான் மக்கள் படிக்கனும்னு சொன்னீங்களே, வெரிகுட்
நன்றி
உங்க ஸ்கூல் சர்ட்டிஃபிகேட் காட்டுங்க. எந்த ஸ்கூல்னு பார்ப்போம்
==================
5
தலைவரே! ஹிந்தித்திணிப்பை எதிர்த்த முக்கிய தலைவர் நீங்க
ஆமா
உங்க மகன், மருமகள்,பேரன், பேத்தி எல்லோரும் ஹிந்தி படிச்சிருக்காங்களே அது எப்படி?
=================
6 தலைவரே! 1974-ல் என்ன நடந்தது?
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தோம்.
அப்போ இருந்து ஒவ்வொரு தேர்தலிலும் கச்சத்தீவை மீட்போம்னு சொல்லிட்டுதானே இருக்கீங்க?
================
7
நான் எங்கே என்ன விஷயமாப்போனாலும் பாசிட்டிவ் ரிசல்ட்டோட தான் வருவேன்
ஓஹோ, எய்ட்ஸ் டெஸ்ட்டுக்குப்போனா பாசிட்டிவ் ரிசல்ட்டோட வந்தா எய்ட்ஸ் இருக்குனு ஆகிடுமே?
=============
8 தலைவரே! உங்களுக்கு சொந்தமா வாகனம் கூட இல்லைனு சொன்னீங்க?
ஆமா
அப்போ பிரச்சாரத்துக்கு கார்ல, வேன்ல வர்றீங்களே அந்த வண்டியோட ஆர்சி புக் எடுங்க பார்ப்போம்
=================
9 தலைவரே! சாராயத்தை முதன் முதலா கொண்டுவந்தது யாரு?
நான் தான்
கச்சத்தீவை தாரை வார்த்தது யாரு?
அதுவும் நாந்தான்
இப்ப நீங்களே மதுவிலக்கு , கச்சத்தீவு மீட்பு பற்றி பேசுவது முரண் தானே?
===============
10
சார், நீங்க வரலாறு படிக்காம கருத்து சொல்லாதீங்க
நாந்தான் படிக்கலையே? படிச்சிருந்தா ஸ்கூல், காலேஜ்னு போய் இருப்பேனே? ஏன் ட்விட்டர் வர்றேன்?
===================
11
சார், நீங்க ஒரு அரை வேக்காடு
ஓஹோ, எப்டி சொல்றீங்க?
எங்க கட்சியை விமர்சிக்கறீங்க இல்ல?
அப்போ உங்க கட்சியை பாராட்னா முழு வேக்காடா?
==================
12
அஜித் குமார் 3 வேடத்தில் நடிச்சு கே எஸ் ரவிக்குமார் டைரக்ஷன் பண்ண படம் தான் வரலாறு
இப்போ எதுக்கு இது?
வரலாறு தெரியாமல் பேசாதேன்னீங்களே?
================
13 சார், எங்க கட்சி ஆன் லைன் மெம்பர் ஷிப் ஓப்பன் ஆகிடுச்சு, சேர்றீங்களா?
என்ன விதிமுறை? எப்டி லாக் இன் ஆக?
சாஷ்டாங்கமா தரைல படுக்கனும் முதல்ல
=====================
14
மேடம், ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் 250 கோடி லஞ்சமா வாங்குனீங்களா?
காத்து வாக்கில் வந்த செய்தி இது, நம்பாதீங்க
===================
15
தலைவரே! கட்சியின் வெற்றிக்குப்பாடுபட்டா 5 பவுன் தங்கம் பரிசாமே?
ஆமா, உள்ளங்கையை விரிச்சு ஓட்டு கேட்கும் போஸ் கைக்கு அதான் அர்த்தம்.அஞ்சு பவுன் தரும் அஞ்சான்
====================
16 டியர். சாப்ட்டியா?ன்னு அக்கறையா ஒரு வார்த்தை கேட்டா போதும், எனக்கு வயிறு நிறைஞ்சிடும்.
நிஜமாவா? அப்போ தினசரி 3 வேளை சாப்ட்டியா? மட்டும் கேட்டுடறேன்
====================
17 தலைவரே! எல்லா அரசியல்வாதிகளும் விபரமா சம்சாரம் பேருல பாதி சொத்து எழுதி வைக்கறாங்களே எதுக்கு?
திடீர்னு நாம ஜெயிலுக்குப்போய்ட்டா ஜாமீன் எடுக்க காசு வேணுமில்ல?
===============
18 மிஸ்! இந்தாங்க பிளம் கேக்கு
யோவ் பேக்கு. நான் 250 ரூபாய் கேக் தான் சாப்பிடுவேன்.
அப்போ நீங்க பேக்கரி வெச்சிருக்கறவனைத்தான் வெச்சுக்கனும்
================
19 டியர், எனக்கு பிளாக் ஃபாரஸ்ட் கேக் வேணும்
உங்கப்பா என்னமோ ஃபாரஸ்ட் ஆஃபீசர் மாதிரி பில்டப் தர்றியே?இந்தா கூடை கேக் சாப்பிடு
=============
20 டாக்டர்! கேக் சாப்ட்டா உடலுக்கு நல்லதா?
பேக்குதான் கேக்கு, கோக்கு சாப்பிடுவான். மைதா + அஸ்கா = 2ம் கெடுதல் தான்
===========