1 தலைவரே! நம்ம கட்சிக்காரங்க வாக்காளர்கள் கால்ல விழுந்து வாக்கு சேகரிக்கறாங்களாமே?
கழக கொள்கையே காரியம் ஆகும் வரை காலைப்பிடி தானே?
===================
2 2011 முதல் 2016 ஏப்ரல் வரை நாங்க தப்பே பண்ணலை, எங்களுக்கே உங்கள் ஓட்டு
தலைவரே! நாம தான் ஜெயிக்கவே இல்லையே? எப்டி தப்பு செய்வோம்?
===================
3 கருப்பு - கறுப்பு விளக்குக
டீச்சர். ஃபிகரு கருப்பா இருக்கு. ஃபிகர் போட்டிருக்கும் சேலை, ஜாக்கெட் கறுப்புக்கலர். எப்பூடி?
=====================
4 தலைவரே! இவ்ளோ பாவம், ஊழல் பண்ணியும் இதுவரை பாவ மன்னிப்பே கேட்கலையே?
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒட்டு மொத்தமாக பாவ மன்னிப்புக்கேட்பொம்
================
5 சார், உங்க படத்துக்கு குருதிப்பூக்கள் -னு டைட்டில் வெச்சிருக்கீங்களே? ஏன்?
சிம்ப்பிள். குருதிப்புனல் + பூக்கள் விடும் தூது = குருதிப்பூக்கள்
================
6 DR.கணுக்காலுக்கு கொஞ்சம் மேல டாட்டு குத்திக்கலாம்னு இருக்கேன்.ரொம்ப வலிக்குமோ?
மேடம்.கணு கணுவா அணு அணுவா வலிக்கும்.ஏன் இந்த விஷப்பரீட்சை?
===================
7 தலைவரே! காமராஜர் ஓட்டுக்கு காசு கொடுத்தார் னு சொன்னீங்களா?
ஆமா.காமராஜர் ஆட்சி அமைப்போம்னு நம்ம பசங்க மேடைல உளறிட்டாங்க.அதை சரி செய்ய
================
8 டியர்.என் கனவுல நீங்க தூங்கிட்டு இருந்தீங்க.
நீ தூங்கிட்டு இருந்தப்ப கனவில் நான் வந்தேன்னு சொல்லு.நீ பக்கத்துல இருக்குமபோது தூங்கமாட்டேனே
=============
9 டியர், நான் கோவிச்ட்டு எங்க அம்மா வீட்டுக்குப்போறேன்
போ போ குளிர் காலம் வந்தபின் வந்தா போதும்.
==================
10 சார், ஜங்கிள் புக் படம் சிறுவர்களுக்கான காமிக்ஸ் கதை அதுக்கு ஏன் யு/ஏ சர்ட்டிஃபிகேட்?
அதுல வர்ற விலங்குகள் எல்லாம் டிரஸ்ஸே போடலை. நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு
================
1 1 அந்தமான் நிக்கோபார்த்தீவுகள் ல என் படம் 46 கோடி கலெக்ட் பண்ணிடுச்சு
அங்கே தியேட்டர் இருக்கா?ரிலீசாச்சா?
சும்மா எதுனா அடிச்சு விடறதுதான்
====================
12 ஜட்ஜ் = வாங்குன 7000 கோடியை எப்போ கட்டுவீங்க?
மல்லய்யா = தாணு சார் முதல் தவணையா 100 கோடி கட்டுவார். ஏகப்பட்ட வசூலாமே?
=====================
13 தலைவரே! மக்கள் பிரச்சனைக்காக ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கனும்
நான் தானைத்தலைவரின் மகன்., ஆகாரம் இல்லாமல் உண்ணாவிரதம் இருக்க மாட்டேன்
=================
14 மினிமம் கேரண்டி பணம் கட்ட மாட்டேன்னு சொன்னதால தான் செங்கல்பட்டில் ரிலீஸ் ஆகலை
சார். நம்ம படம் மேல தான் நம்பிக்கை இருக்கில்ல? எதுக்கு மினிமம் கேரண்டி கேட்டீங்க?
====================
15 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மீட்போம்’
தலைவரே! நம்ம கட்சியையே பழையபடி உங்களால மீட்க முடியலையே?
=====================
16 சார். கந்த சாமி படம் ரிலீஸ் ஆகி முதல் வாரம் என்ன சொன்னீங்க?
படம் செம ஹிட்டுன்னேன்
2 வது வாரம் என்ன சொன்னீங்க
அட்டர் ஃபிளாப். செம லாஸ்னேன் ,ஹிஹி
அப்போ 15 நாள் ஆகுமா உண்மை பேச?
=================
17 சார். சக்சஸ் பார்ட்டி பொதுவா எப்போ வைக்கனும்?
100 வது நாள் ல
உங்க படம் 100 நாள் ஓடும்னு நம்பிக்கை இருக்கில்ல? ஏன் 5 வது நாளே அவசரம்?
=====================
18 சார். விஜய் கேரியர்லயே பெஸ்ட் படம் தெறின்னு சொன்னீங்களே, எவ்ளோ ரேட்டிங்?
3.8 /5
சரி. தலைவாக்கு?
4 /5
இப்போ உங்க ஸ்டேட்டஸ்ல எது பொய்? எது உண்மை?
=================
19 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மட்டுமல்ல கோஹினூர் வைரத்தையும் தூம் 3 படத்தில் வருவது போல் மீட்போம்.எங்கள் பர்சனல் லாக்கரில் பத்திரப்படுத்துவோம்
===================
20 தலைவரே! மேடை ல ஏன் பேச மாட்டேங்கறீங்க?
எனக்கு பேச வராதுன்னு ஓப்பனா சொல்ல முடியுமா? செயலில் தான் ஆர்வம் காட்டுவேன்னு அடிச்சு விடவேண்டியதுதான்
=======================