1 நான் கருணாநிதியின் மகன் ஆதாரமில்லாமல் பேச மாட்டேன்-ஸ்டாலின் # ஆதாயம் இல்லாமல் பேச மாட்டேன்னு படிச்ட்டேன்
=============
2 அம்மா உணவகம், என்பதை அண்ணா உணவகம் ஆக்கறாங்களாம்.தி.மு.க.,வை அண்ணா தி.மு.க., என்று மாற்றிவிட வேண்டியது தானே?-விந்தியா# அம்மா திமுகனு நீங்க மாற்றத்தயாரா?
==================
3 அம்மாவைபற்றி பேச விஜயகாந்த்திற்கு தகுதியில்லை-சரத் # என்னைப்பற்றிப்பேச ராதிகாவுக்குத்தகுதி இல்லைனு அவர் இன்னும் சொல்லலை,நல்லவேளை
================
4
. 70 லட்சம் பேரை தமிழகத்தில் குடிகாரராக மாற்றி, 3 கோடி குடும்பங்களை வேதனை கண்ணீர் வடிக்க வைத்தவர் தான் ஜெ- கனிமொழி # டிஸ்ட்ரிபியூட்டரும், சப்ளையர்சுமே நம்மாளுங்க தானே?
================
5 தமிழகத்தில், ஒரு கோடி புதிய வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில், 50%இளைஞர்கள், எங்கள் அணிக்கு ஆதரவாக உள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன-வை.கோ# ஒவ்வொரு கூட்டத்திலும் கேப்டன் பேசும்போதும் அந்த % குறைஞ்சிட்டே வருதாமே?
====================
===================
7 திமுகவும், அதிமுகவும் தான் மது ஆலைகள் நடத்துகின்றன: வைகோ # ஆமா, சிகரெட் கம்பெனி மட்டும் மதிமுக நடத்துது
====================
8 தேமுதிக - ம.ந.கூ தலைவர்கள் கறை படியாத கைகள்: பிரேமலதா # மக்கள் நலனில் அக்கறை இருந்தா போதும், கறை படியாது
================
9 மக்கள் பணியாற்றத் தவறும் கட்சியினர் மீது நடவடிக்கை: மு.க. ஸ்டாலின் உறுதி # தன் வீடு, மனைவி, மக்கள் இவங்களுக்குத்தானே எல்லா அரசியல்வாதிகளும் பணி ஆற்றுகிறாங்க?
================
10 தொகுதிகளை பார்வையிடாதவர் ஜெயலலிதா: ஸ்டாலின் குற்றச்சாட்டு # இல்லையே? மழை வெள்ளம் வந்தப்போ 4 நாள் கழிச்சு ஹெலிகாப்டர்ல வந்து பார்த்தாரே?
=================
11 விஜயகாந்த் எங்களுக்குப் போட்டியே அல்ல: அன்புமணி # அப்போ சீமான் தான் உங்களுக்கு சரி நிகர் சமான போட்டியா?
==============
12 திமுக தேர்தல் அறிக்கை தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்பட்டது: மு.க. ஸ்டாலின் # நாளை கிடைக்கும் பலாக்காயை விடுங்க, இன்னைக்குக்குக்கிடைக்கும் கிலாக்காய் பற்றி சொல்லுங்க
===============
13 வேளச்சேரியில் ஆயிரம் கோடி ரூபாயில் திரையரங்கம் வாங்கியுள்ளதாக ஜெ மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு # விரைவில் அம்மா தியேட்டர் வருமா அப்போ?
======================
14 பயத்தினால் தான் திராவிட கட்சிகள் தங்களை விமர்சிப்பதில்லை: அன்புமணி # எதிர்பார்ப்பு அதிகம் இல்லாத லோ பட்ஜெட் சினிமாப்பட விமர்சனம் வர்லைன்னா பயம்னு அர்த்தமா?
==============
15 ரூ.6,000 கோடி!தமிழக மின் வாரியத்திற்கு வர வேண்டிய தொகை போச்சு* 'உதய்' திட்டத்தில் தமிழகம் சேர மறுத்ததால் இழப்பு # உதய சூரியன் ல உதய் இருப்பதால்தான் சேரலை போல
================
16 156 இடங்களில் பா.ஜ., போட்டி: தமிழிசை அறிவிப்பு # இது பிஜேபியின் பிரம்மாண்ட வளர்ச்சி. டெபாசிட் பயம் இல்லாம 156 பேர் நிக்க தயாரா இருக்காங்களே?
====================
17 வீதிகளில் மது கடைகள் திறந்தவர் ஜெ., பிரசாரத்தில் ஸ்டாலின் பதிலடி # தமிழன் நடு வீதில தான் நிக்கனும் என சிம்பாலிக்கா சொல்றார் போல
=======================
18 நான் நல்லவனா, கெட்டவனா?: தெரியாது - விஜயகாந்த் # இது நாயகன் கமல் டயலாக் ஆச்சே?தேர்தலில் வெற்றி “நாயகன்” ஆக ஐடியாவா?
====================
19 தமிழக மக்கள் ஊழல் அற்ற நேர்மையான அரசை தேர்ந்தெடுப்பார்கள்; மத்திய மந்திரி வெங்கையா நாயுடு # அப்போ கவர்னர் ஆட்சி தானா?
==============
20 அ.தி.மு.க.,-தி.மு.க., வந்தால் யாராலும் காப்பாற்ற முடியாது: பிரேமலதா காட்டம் # தேமுதிக வந்தால் ஒப்பேற்றவே முடியாதுன்னு சொல்றாங்களே?
==========================