Saturday, June 04, 2016

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் -சினிமா விம்ர்சனம்

இளைய தளபதி க்கு  சூப்பர் ஹிட் ரொமாண்டிக் ஃபிலிம் ஆக அமைந்த துள்ளாத மனமும் துள்ளும் தான் இயக்குநர் எஸ் எழிலின் முதல் படம். . சின்ன பூவே மெல்லப்பேசு இயக்குநர் ராபர்ட் ராஜ்செகரன் இடம் உதவி இயக்குநராகப்பணி ஆற்றியவர், பின் பன்னீர் , ஆர் பார்த்திபன் இவர்களிடம் பணி ஆற்றினார்.

1999 ல் ரிலீஸ் ஆன து ம து சார்லி சாப்ள்ன் படமான சிட்டி லைட்ஸ் ஹாலிவுட் பட உல்டா தான் என்றாலும் தமிழ் நாடு கேரளாவில் செம ஹிட். 2வது படம் பிரபுதேவா வுடன் பெண்ணின் மனதைத்தொட்டு(2000) அவுட். ( இதில் முதலில் விஜய் தான் நடிப்பதாக இருந்தது, பின் அவர் நல்ல நேரம் ஜகா வாங்கினார்)

3 வது படமாக அஜித் குமார் உடன் பூவெல்லாம் உன் வாசம் (2001) தமிழக அரசின்  விருது பெற்றது ( சிறந்த குடும்பப்படம்), மீடியம் ஹிட்.4  வது படமாக  அதே அஜித் உடன் ராஜா (2002) எடுபடலை.

3 வருச கேப். 2005 ல் அமுதே என தோல்விப்படம். 2007 ல்  தீபாவளி என  மீடியம் ஹிட் படம் ஜெயம் ரவி யுடன்

 மீண்டும் 5 வருசம் கேப். 2012 ல் சிவகார்த்திகேயன் உடன் மனம் கொத்திப்பறவை  மீடியம் ஹிட் . 

 2013 ல் விமல் உடன் தேசிங்கு ராஜா , 2014 ல் வெள்ளக்கார துரை இரண்டும் பி சி யில் நல்லாப்போச்சு . காமெடி சப்ஜெக்ட்ஸ்


 இப்படி ஏற்ற இறக்கம் கொண்ட எழில் சாரின் புதிய படம் தான்  வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ( 10 வது படம்)  

 ஒரு உபரி தகவல் இவரிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணி ஆற்றியவர்கள் தான் கரு பழனியப்பன் &  சுசீந்தரன் ( குருவை மிஞ்சிய சிஷ்யர்கள்)



கதைப்படி ஒரு மினிஸ்டர்  காலம் பூரா ஊழல் பண்ணி சாகக்கிடக்கும்போது இதுவரை நாம புண்ணியமே செய்யலை பாவம் தான் பண்ணி இருக்கோம்னு உணர்ந்து அந்த ஊழலில் சம்பாதிச்ச 500 கோடி பணத்தை தன் நம்பிக்கைக்கு உரிய எம் எல் ஏ விடம் சொல்றாரு. சொல்லி சிவலோக பதவி அடைஞ்சிடறாரு.


அந்த எம் எல் ஏ கிட்டே எடுபுடியா இருப்பவர்கள் தான் நம்ம ஹீரொவும் காமெடியனும். பணம் இருக்கும் ரக்சியம் தெரிஞ்ச எம் எல் ஏ கோமாவில். மினிஸ்டரோட மச்சான்  அந்த பண ரகசியத்தை தெரிஞ்சுக்க செய்யும் முயற்சிகள் தான் படம்


எம் எல் ஏ வா ரோபோ சங்கர் அதகளம் பண்றார். க்ளைமாக்சில் இவர்  கதை சொல்லும் காமெடி எபிக். நாகேஷின் கதை சொல்லும் காமெடி போல் இதுவும் நீண்ட நாட்களுக்கு பேசப்படும். ரோபோ சங்கரின் மறக்க முடியாத காமெடி ஆக இது நிலை நிற்கும்.  படத்தின் முதுகெலும்பே இவர் தான்.  10 வயசு பையனாக இவர் செய்யும் சேஷ்டைகள் செம


 எடுபுடியாக புஷ்பா புருசனாக வரும் சூரிக்கும் நல்ல காமெடி போர்சன். இதுவரை சூரி காமெடி பண்ணிய படங்களில் 3 தான் எனக்கு பிடிச்சிருக்கு  1 வெண்ணிலா கபாடி குழு புரோட்டா காமெடி  2 இது நம்ம ஆளு 3 வே வ் வெ

படத்தின் திரைக்கதையோடு ஒட்டி வருவதால் காமெடி ஒர்க் அவுட் ஆகி வருது


படத்தின்  ஹீரோ விஷ்ணு. ஹேர் ஸ்டைலில் மாற்றம் , பாடி லேங்குவேஜ் குட் . ஆனால் பெரிய அளவில் ஸ்கோர் செய்ய வாய்ப்பில்லை. படம் முழுக்க  ரோபோ சங்கரும்  சூரி யும் ஆக்ரமிப்பதால் ( போஸ்டரில் கூட ) ஹீரோ பெரிதாக எடுபடவில்லை

 ஹீரோயின் நிக்கி கல்ராணி க்கு ஒப்பனிங் சீனில் ஃபைட் எல்லாம் இருக்கு. பீச் ஓரமாக நம் நாக்கு ஈரம் ஆக ஸ்லோ மோஷனில் ஜாகிங்க் எல்லாம் போறார். ஐ லைக் இட்.ஹீரோயினுக்கு யார் வேணாலும் எவ்ளோவ் வேணாலும் சம்பளம் தந்துடலாம். ஒரு நல்ல ரசனை உள்ள இயக்குநரால்தான் இது போல் ஸ்லோ மோஷன் சீன் வைத்து நின்னு நிதானமா அவரும் ரசிச்சு நம்மையும் ரசிக்க வைக்க முடியும்


ஆடுகளம் நரேன் மொட்டை ராஜேந்திரன்  எக்ஸ்ட்ரா காமெடி.

 லாஜிக் எல்லாம் பார்க்காமல் சிரிச்ட்டு வர ஒரு படம். போட்ட முதலீட்டைப்போல் 3 மடங்கு லாபம் சம்பாதிக்கும் , சி செண்ட்டரில் சூப்பர் ஹிட் ஆகும், பி யில் சுமாராகப்போகும். ஏ  செண்ட்டரில் டவுட் தான்

நச் டயலாக்ஸ்

ஒரு பொண்ணு க்கு 8 மாப்ளைகளா?,கூட்டுக்குடும்பம்கறதை இப்டி புரிஞ்சுட்டாங்களா?

ஏன்டா.புஷ்பா புருசன் கற போஸ்ட் பெரிய கவர்னர் போஸ்ட்டா?,அவளே ஒரு ரெக்கார்டு டேன்சர்

காலேஜ் படிக்கறவனுக்கு தெரிஞ்சா பரவால்ல காஜா எடுக்கறவனுக்கு எல்லாம் புஷ்பா நெம்பர் தெரிஞ்சுருக்கு


ஓம் க்ரீம் ஐஸ்க்ரீம்


இவன் நிஜ சாமியார்தானா?


என் பொண்டாட்டி வைக்கும் சட்னி கூட பத்தினி தான்.என்னைத்தவிர ஒரு பய கை வைக்க முடியாது


அரசியல்வாதியை நம்பினாலும் அவ்ன் கூட இருக்கும் அடியாளை நம்பாதே#VVV


7 பணம் சொத்து ஏராளமா சேர்த்துட்டேன்.ஆனா புண்ணியம் கொஞ்சம் கூட சேர்க்கலை


தலைவரே" இது தான் ஊருக்கே தெரியுமே



யோவ் டெய்லரே.எப்போ ஜாக்கெட் தைச்சு தருவே?
6 மாசம்.ஆகும் அதுவரை நான் என்ன செய்வே ன்?
ஜாக்கெட்டே போடாதே


ஏன்டா.புஷ்பா புருசன் கற போஸ்ட் பெரிய கவர்னர் போஸ்ட்டா?,அவளே ஒரு ரெக்கார்டு டேன்சர்


10 இந்த கடத்தல் நாடகத்துக்கு நாம வெச்ச பேரு ஆபரேசன் ஜாக்கெட் 2

யோவ்.ஜாக்கெட் 1 னையே இன்னும் கிழிக்கலை.அதுக்குள்ளே.ஆபரேசன்.2,வா?


11 ஒரு மனுசன் ஆவியா அலையலாம்

ஆனா ஆவி ஆன பின்பும் அலைய்க்கூடாது#VVV



தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் -138 நிமிடம்


நிக்கி கல் ராணி க்கு ஓப்பனிங் சீன் பைட்

ரோபோ சங்கரின் கோமா ஆக்டிங் காமெடி எபிக்




சபாஷ் டைரக்டர்

1  அய்யோ பாவம் ஆம்பளை, நான் சொல்லப்போறேன் சாங்க்ல
ஆரவல்லி சூரவல்லி, குத்தீட்டிக்கண்ணாலே என பாடல்கள் எல்லாம் தர லோக்கல் டப்பாங்குத்து ஹிட் சி சத்யா தான் இசை , பிஜிஎம் ஓக்கே ரகம்



2   வசனம்  எழிச்சூர் அர்விந்த். இரண்டே இரண்டு மெயின் காமெடி மேட்டரை வைத்து 34 ஜோக்சை வைத்து ஒரு காமெடி ராஜாங்கமே நடத்தி இருக்கார்

3   படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை சோகம் என்றால் கிலோ என்ன விலை என கேட்கும் அளவு  செண்ட்டிமெண்ட் சீனே வைக்காமல் முழுக்க முழுக்க சிரிக்க வைத்ததற்கு சபாஷ்



லாஜிக் மிஸ்டேக்ஸ்  & திரைக்கதையில் சில ஆலோசனைகள்

 இது போன்ற படங்களுக்கு லாஜிக்கே பார்க்கத்தேவை இல்லை



சி.பி கமெண்ட்-வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் -,சி சென்ட்டர்.ரசிகர்களுக்கான காமெடிப்படம்.ரோபோ சங்கர் .புஷ்பா புருசன் ராக்கிங் ,விகடன் =40 ரேட்டிங் =2.5/5


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு)= 40


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்) = ஓக்கே