Friday, June 03, 2016

இறைவி - சினிமா விமர்சனம்

கார்த்திக் சுப்புராஜ்-ன்  பீட்சா தமிழ் சினிமா த்ரில்லர் மூவியில் முக்கிய அங்கம் வகிக்கும் அளவு ஹிட். விகடனில் 45 மார்க்.அவரது 2 வது படம் ஜிகிர்தண்டா காமெடி + அரசியல் நையாண்டி. இது முதல் படம் அளவு சூப்பர் ஹிட் ஆகவில்லை என்றாலும்  விமர்சகர்களிடையே பலத்த பாராட்டு பெற்ற படம். விகடன் மார்க் =44. 3 வது படமாக இறைவி

 ஆண் பால் சொல்லான இறைவன் தான் ஆண்களுக்கான மரியாதையில் உச்சம், அதுவே பெண் பால் எனில் இறைவி. ஒரு பெண்  அம்மாவாக , சகோதரியாக , மனைவியாக , தோழியாக பல பரிமாணங்களில் தியாகச்சுடராக இருக்கும்போது அவருக்கான மரியாதையை அங்கீகாரத்தை இந்த சமூகம் வழங்குகிறதா? என்பது தான் படத்தின் கதைக்கரு

வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கும்  விஜய் சேதுபதி ,அப்டேட்டட் ஏ கிரேடு கே பாக்யராஜ்  எஸ் ஜே சூர்யா இருவரும் நாயகர்கள். பாபி சிம்ஹா வும் கெஸ்ட் ரோல்.அழகுப்பதுமை கமாலினி முகர்ஜி ,அஞ்சலி நாயகி. கருணாகரன் , காளி வெங்கட் காமெடி ரோல்ஸ் , ராதாரவி  கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்


இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட இறைவி எப்டி இருக்கு?ன்னு பார்ப்போம்

ஹீரோ ஒரு சினிமா டைரக்டர்.  அவரோட ஒரு படம் எடுத்து முடிஞ்சும்  புரொடியூசர் உடன் நிகழ்ந்த ஒரு ஈகோ பிராப்ளத்தால் சிக்கல் ஆகி முடங்கி இருக்கு. அந்த கவலைல  ஓவரா குடிக்க ஆரம்பிச்சுடறார். இதனால அவர் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படுது.அவரோட மனைவி  டைவர்ஸ் வாங்கலாம்னு யோசிக்க ஆரம்பிக்கறாரு.


ஹீரோக்கு ஒரு தம்பி.தம்பியோட ஃபிரண்ட் கம் அடியாள் தான் இன்னொரு ஹீரோ.இவரு ஆல்ரெடி மேரேஜ் ஆகி விதவை ஆன ஒரு லேடியை  வெச்சிருக்காரு. வீட்டோட வற்புறுத்தலால  வேற ஒரு பொண்ணை மேரேஜ் பண்ணிக்கறாரு.


ஹீரோவான டைரக்டருக்கும் புரொடியூசருக்கும் ஏற்படும் தகறாரில் புரொடியூசர்  டைரக்டரை ( ஹீரோ) வை கொலை பண்ண போகும்போது இடைல வந்து ஹீரோ 2 அவரை பயங்கரமா தாக்கிடறார்.

 கொலை முயற்சிக்கேசில் உள்ளே போய் 7 வருச தண்டனை.இவரை நம்பி வந்த பொண்ணு தனிமையில்.

ஜெயிலுக்குள்ளே போன ஹீரோ 2 வும் நிம்மதியா இல்லை அவரை நம்பி வந்த பொண்ணும்  நிம்மதியா இல்லை.

டைரக்டரும் நிம்மதியா இல்லை.  , அவர் சம்சாரமும்  நிம்மதியா இல்லை.

 இவங்க  4 பேர் வாழ்வில் நடக்கும் திருப்பங்கள் நிறைந்த சம்பவங்கள் தான் மிச்ச மீதி திரைக்கதை.

க்ளைமாக்ஸ் ல 2 ட்விஸ்ட்  இருக்கு.



ஹீரோவா எஸ் ஜே சூர்யா கலக்கலான நடிப்பு , வழக்கமா இவரு டபுள் மீனிங்க் டயலாக்ஸில் தான் அப்ளாஸ் வாங்குவார். இதில் செம ஆக்டிங். மனைவி ஒர்க் பண்ணும் ஆஃபீசில்  தன்னைப்போட்டுக்கொடுத்த ஆளை அடிக்க ஒரு நடை நடந்து வருவார் பாருங்க. அற்புதமான பாடி லேங்குவேஜ்


க்ளைமாக்சில் ஆண் திமிர் பற்றி பேசும் வசனம் கை தட்டல் ரகம்.ஆண்களை குறை சொல்லும் காட்சிகளுக்கு ஆண்களையே கை தட்ட வைக்கும் மேஜிக் முதல் முறையாக கண்டேன்.


அவருக்கு ஜோடியா கமாலினி முகர்ஜி. முகம் லைட்டா முத்தல் ஆகிடுச்சு. உடம்பு  டார்க்காவே முத்தல் ஆகிடுச்சு. ஆனாலும் கொடுத்த வாய்ப்பை கன  கச்ச்சிதமா உபயோகிச்சு இருக்கார்.


2 வது  ஹீரோவா விஜய் சேதுபதி. கல்யாண மாப்பிள்ளைக்கோலத்தில் இவர் போடும் குத்தாட்டப்பாட்டுக்கு செம  வரவேற்பு. பல இடங்களில் எஸ் ஜே சூர்யாவுக்கும் இவருக்கும் நடிப்பில் போட்டி . ஜெயிலில் இவருக்கு மகாநதி கமல் ரேஞ்சுக்கு காட்சிகள் எடுத்தும் படத்தின் நீளம் கருதி ட்ரிம் செய்யப்பட்டது தெரியுது.


 இவருக்கு ஜோடியா அஞ்சலி. கமாலினியை அழகாய் ஓவர் டேக்குகிறார். பின் பாதியில் இவரது முறைப்பு நடிப்பு செம.


பாபி சிம்ஹா தான் சஸ்பென்ஸ் கேரக்டர் .  அவர் நடிப்பு  சூப்பர்



க்ளைமாக்ஸ்   பற்றி இரு விதமான விமர்சனங்கள் வந்தாலும் படத்தின் நீதி  குடிகாரனை நம்பக்கூடாது அவனை கட்டக்கூடாது. ரவுடியிசம் என்னைக்கும் ஆபத்து தான் என்ற இரு நல்ல கருத்துகளை முன் வைக்க வேண்டிய  கட்டாயத்தில் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.


சந்தோஷ் நாராயணன் இசை கன கச்சிதம்  2 பாட்டு  செம. பிஜிஎம் வழக்கம் போல் மனம் கவருது. ஒளிப்பதிவு எடிட்டிங்க் பக்கா


திரைக்கதை அபாரமான யுக்தி. பின் பாதியில் நீளம் என்றாலும் பொறுமையாக பார்க்க வைக்கும் லாவகத்துடன் கதை சொல்லும் உத்தி









நச் டயலாக்ஸ்

எல்லா பீல்டுலயும்தான் பொம்பள பொறுக்கி இருக்காக.ஏன் சினி பீல்டை மட்டும் குறை சொல்லனும்


அஞ்சலி= கமல் +அஜித்+விஜய் காம்போ தான் எனக்கு வரப்போற மாப்ளை

எதுக்கு குடிக்கறே? சாகப்போறியா?



சாகக்கூடாதுன்னுதான் குடிக்கறேன்


முடிவடைஞ்சு ரிலீஸ் ஆகாத படம் இருக்கும்போது இன்னொரு படம் ஆரம்பிக்கச்சொல்றே.முடியாது.

ஏன்?

9மாச கரு இருக்கும்போது அடுத்த குழந்தை எப்டி?




இந்த பிராஜக்ட்க்கு நான் ஒத்துக்கனும்னா ரேபான் கூலிங் கிளாஸ் வேணும்



டேய்.வெளக்கெண்ணெ.நாம திருடப்போறது நைட்ல#இறைவி


6 நாம எப்பவும் பேசக்கூடாது.நம்ம படம் தான் பேசனும் (மணிரத்னம் சொன்னது)


7 ஏற்கனவே பலர் குப்பைக்கொட்ன இடத்துல நீ குப்பை கொட்ட வந்திருக்கே.சோ அடக்கி வாசி


 ராஜா ராஜாதான்.எவனும் கிட்டே நிக்க முடியாது

ஒரு கலைப்படைப்பை அதன் மதிப்பு தெரியாத இடத்தில் இருக்க விடவே கூடாது

10 சிலப்பதிகாரத்தில் ஒரு டவுட்



ம்

கண்ணகி யாரையாவது லவ் பண்ணி பின் திரும்பி வந்தா கோவலன் ஏத்துக்குவானா ?
நோ
கோவலனா?கேவலனா?

11 சாமி சிலைகள் ல இறைவன் சிலைகளை விட இறைவி சிலைகளுக்கு தான் மவுசு அதிகம். பெண் சாமி சிலைகள் தான் அதிகம் கடத்தப்படுவதன் ரகசியம் அதுவே.


12 பொண்ணுங்க அழுதாப்பிடிக்காது.பொண்ணுங்களை அழ.வைக்கும் ஆம்பளைங்களை சுத்தமாப்பிடிக்காது

13 என்னை யார்?னு தெரியுதா?



உன்னோட எக்ஸ் லவ்வரோட கரண்ட் ஹஸ்பெண்ட்


14 ஆம்பளைங்களுக்கு ஆணவம் ஜாஸ்தி.எவ்ளோ கேவலமான ஆளுங்க நாம






தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

விமர்சகர்களுக்கு சோதனை

1 கதையை சொல்லிடாதீங்க

2 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஓப்பன் பண்ணிடாதீங்க.

3 நெகடிவ் ரிப்போர்ட் தராதீங்க # இறைவி

2 எஸ் ஜே சூர்யா படம் என்னைக்கு யூ சர்ட்டிபிகேட் வாங்கி இருக்கு?

கார்த்திக் சுப்புராஜ் ன் கட்டப்பஞ்சாயத்து காமெடிகள் கலக்கல் ரகம்

3 நிமிசம்.3 ஷாட்.3 ஹீரோ 3,ஹீரோயின் 2 காமெடியன் இன்ட்ரோ ஓவர். எந்த பில்டப்பும் இல்லாமல்.குட்.


விஜய் சேதுபதியின் மாப்ளை கோல குத்தாட்டம் தியேட்டரில் செம அப்ளாஸ்



6 சினிமாவில் ஜெயித்து பின் தோற்றுப்போன ஒரு இயக்குநர் ,காதலில் ஜெயித்து பின் தோற்ற.ஒரு காதலன் இருவர் குடும்ப வாழ்க்கை தான் கதை

எஸ் ஜே சூர்யாவின் குணச்சித்திர நடிப்பு கலக்கல் ரகம்

சிலை கடத்தல் வழக்கில் ஜெயிலுக்குப்போன. இயக்குநர் வி சேகர் சொந்தக்கதை யை திரைக்கதை

பாரதி.ராஜா பாலா இருவரும் சண்டை போட்டுக்கிட்ட குற்றப்பரம்பரை கதை க்கான பிரச்னை இதில் திரைக்கதையாய்
10 
இயக்குநர் பாலா அஜித் தாக்குதல் விவகாரம் பூடகமாய் படத்தில் சொல்லப்பட்டிருக்கு


11 கைதட்டல் வாங்குவதில் யார் முன்னணி?பலத்த போட்டி எஸ் ஜே சூர்யா , விஜய்சேதுபதி


12 கலக்லப்பு விறுவிறுப்பு சம கால சினி இன்டஸ்ட்ரி சம்பவங்களுடன் பரபரப்பான திரைக்கதை.இறைவி இடை வேளை


13 திரைக்கதை இயக்கம் பாத்திரப்படைப்பு என கார்த்திக் சுப்புராஜ் மெச்சூரிட்டி எல்லா கோணங்களிலும் மெருகேறி இருக்கு

14 குடிகாரனை நம்பாதே.அவனைக்கட்டிக்கிட்டா வாழ்வில் நிம்மதி இருக்காது என்ற சமூக நீதி தான் இறைவி யின் கதை கரு

15 இலக்கியம் நாவல் சிறுகதை சினிமாவாக ஜெயிப்பதில் மகிழ்ச்சி.சுஜாதா வின் ஜன்னல் மலர் தான் இறைவி



சபாஷ் டைரக்டர்


1  எஸ் ஜே சூர்யா  மாமனாரிடம் சண்டை போடும் காட்சி , மகளுடன்  தன் மனைவியை கல்யாண கோலத்தில் பார்க்கும் காட்சி  செம டச்சிங்


2 விஜய் சேதுபதி  யை தியாகம் செய்ய அவரது கள்ளக்காதலி  நடத்தும் நாடகம்


3  க்ளைமாக்சில்  எஸ் ஜே சூர்யா தன் மேல் வெறுப்பு வர வில்லன் போல் ஃபோனில் பேசும் காட்சி  சொர்ணமுகி ஆர் பார்த்திபன் டச்


4   பாபி சிம்ஹா பாத்திரப்படைப்பும் அவரது போர்சனும்


5  சம கால சினிமா பர பரப்பு சம்பவங்களை சாமார்த்தியமாக திரைக்கதையில் புகுத்தியது


லாஜிக் மிஸ்டேக்ஸ்  & திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1   கமல் , அஜித் விஜய் ரேஞ்சுக்கு தன் வ்ருங்காலக்கணவனை கற்பனை செய்து வரும் அஞ்சலி  தாடி வெச்ச சோக மாப்பிள்ளையை பார்த்ததும் ஓக்கே சொல்வது நெருடல்


2  விஜய் சேதுபது கள்ளக்காதலி வீட்டுக்குள் நடக்கும் அந்த நாடகம் அவருக்கு  தெரியாமல் போவதும் கள்ளக்காதலியை கெட்ட நடத்தை உள்ளவர் என நம்புவதும் நம்பும்படி இல்லை


3 கமாலினி முகர்ஜியின் கேரக்டர் சரியாக சொல்லப்படவில்லை. அவர்  தன் கணவரை விட்டு இன்னொரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுப்பது நம்பும்படி இல்லை. க்ளைமாக்சில் டைலம்மா ஆவது  டிராமா பார்ப்பது போல் இருக்கு. ரமணி சந்திரன் நாவலில் வரும் பேக்கு கேரக்டர் போல் சித்தரிக்கப்பட்டிருக்கார்


4   போலீஸ்  ஜீப்பில் கைதியாக வரும் விஜய் சேதுபதிக்கு விலங்கிடாமல் அழைத்து வருவது அவருக்கு ஒரே ஒரு போலீஸ் பாதுகாப்பாக இருப்பது அவர் தப்பி ஓடும் காட்சி எல்லாம் பூச்சுற்றல் ரகம்


5   தனக்கு விசுவாசியாக இருந்து  தனக்காக ஜெயிலுக்குப்போன விஜய் சேதுபதிக்கு எஸ் ஜே சூர்யா பாதகமாக நடந்து கொள்வதும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை



சி.பி கமெண்ட்-இறைவி - கலக்கலான திரைக்கதை ,முன் பாதி கமர்ஷியல் ,பின் பாதி உறவுச்சிக்கல் முடிச்சு ,விகடன் =48 ,ரேட்டிங் =3 .75 / 5


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு)=48


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்)= நன்று


டிஸ்கி - வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் -சினிமா விம்ர்சனம்

http://www.adrasaka.com/2016/06/blog-post_3.html