1 தேர்தல் வரை முகத்தை(DP) ஒரு கையால் மறைத்திருக்கும் பெண்கள் கையை அகற்றவும்.கை சின்னத்துக்கு வாக்கு கேட்பது போல் இருக்கு.தேர்தல் கமிசன்
==========
2 சு சுவாமியின் ஜெ வுக்கு எதிரான கோர்ட் விவாதம் பிரமாதம். உண்மையில் ஜட்ஜ் நேர்மையாளராய் இருந்தால் , பொட்டி கை மாறலை எனில் ஜெ வுக்கு குன்ஹா விதித்த தண்டனை தான்
==================
3 ஜெ வுக்குப்பின் சசிகலா அதிமுகவில் தலைதூக்க முடியாது,இந்த லாஜிக் படி அதிமுக வை விட திமுக தான் ஆபத்தான கட்சி, கலைஞருக்குப்பின் ஸ்டாலின் அவருக்குப்பின் உதயநிதி என வாரிசு அரசியல் தொடரும்
================
4 மாற்று அரசியல் என்பது 234 தொகுதிகளிலும் கட்சி, ஜாதி பார்க்காமல் நல்ல (சுயேட்சை) வேட்பாளருக்கு மக்கள் ஒருமித்த ஆதரவு அளிப்பதே.234 சுயேட்சைகளும் சேர்ந்து அவர்களில் ஒரு நல்லவரை சிஎம் ஆக்கலாம்
=================
5 திமுக உடன்பிறப்புகள் எந்த அளவு அதி புத்திசாலிகள் எனில் தனக்கு ஜால்ரா அடிக்காத எல்லோரும் அதிமுக பி டீம் என நினைப்பதே! அய்யோ பாவம்
==================
6 ஒரு சினிமா விமர்சகனால் அரசியல் நிலவரத்தை மதிப்பீடு செய்ய முடியுமா?
ஏன் முடியாது? தமிழக அரசியலே சினிமாக்காரர்களைத்தானே மையம் கொண்டு இருக்கு? ஜெ , கலைஞர், கேப்டன்
=====================
7 பொதுவெளியில் ஒரு பெண்ணிடம் நீங்கள் அவமானப்பட்டால் அது நீங்கள் வாழும் காலம் வரை நீங்காத கறையாக உங்கள் மனசாட்சியால் உறுத்திக்கொண்டே இருக்கும், எனவே கவனம் பெண்ணிடம்
================
8 நீங்கள் விவாதிப்பது ஆணாக இருக்கும் பட்சத்தில் யோசித்து வார்த்தையை விடவும்
பெண்ணாக இருந்தால் விவாதத்தையே விடவும்
=================
9 பெண்ணுடனான விவாதத்தில் ஆண் நிலை தடுமாறி வார்த்தையை விடுவான். பின் அதற்கான எதிர் விளைவால் வாழ்க்கை முழுவதும் வாடுவான்
=================
10 பொதுவெளியில் பெண்ணுடனான விவாதத்தில் , கோபத்தில் நீங்கள் இழப்பது அந்தப்பெண்ணின் நட்பும் உங்கள் மரியாதையையும்
==================
11 நாம் அவமானப்படும் தருணங்கள் இரு வகைப்படும்
1 நாம் எதிர்பாராத தருணங்களில் நமக்கு நேரும் அவமானம்
2 நமக்கு அவமானம் வரும் என உணர்ந்தே நாமே தேடிப்போய் படும் அவமானம்
====================
12
வாணி ராணி சீரியலில் “ அம்மாவுக்கு எந்த ஆபத்தும் இல்லை , அவங்க சேஃப்” என டயலாக் வருவது ராதிகாவின் புத்திசாலித்தனம், சன் டி வியின் கவனக்குறைவு
==============
13 நெருக்கடியான சூழலில் உங்கள் பெற்றோர் சொல்வதைப்பின் பற்றுங்கள். எப்போதும் அது உங்கள் நல்வாழ்க்கைக்கான வழி காட்டுதலாகவே அமையும்
====================
14 சாப்பிடுவதை நன்கு மென்று சாப்பிடனும் என்பதே நொறுங்கத்தின்றால் 100 வயது
நொறுக்குத்தீனி அதிகம் தின்றால் 60 வயதுதான்
==================
15 உங்களுக்கு ஒரு பிரச்சனை ஏற்படும்போது உங்களுக்காக உங்களால் 100% சிந்திக்க முடியாது.அப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் அம்மா அப்பாவிடம் பொறுப்பை விட்டுவிடவும்
====================
16 அதிகாலையில் நீ எழுந்து விட்டால் சூரியனை "ஜெ"யித்த மகிழ்ச்சி அன்றைய நாளை சுறுசுறுப்பாக்கும்
=============
17 மரங்கள் சூழ் மலைப்பாதையில் நீ நடைப்பயிற்சி மேற்கொண்டால் சுத்தமான காற்று சுவாசிக்க இலவசம்..தமிழனுக்கு இலவசம் என்றால் தான் பிடிக்கும்
============
18 தினமும் பாலில் சுக்கு , மிளகு நுணுக்கிப்போட்டு குடித்தால் இருமல்,வாயுத்தொல்லை எதுவும் வாழ்நாள் முழுக்க வராது. கால்சியம் சத்து கிடைக்கும்
==========
19 உள்ளங்கையில் மருதாணி அழகாக இருப்பது நடுவில் ஒரு வட்டம் , சுற்றியும் சிறு சிறு வட்டம் டிசைன் தான், இப்பவெல்லாம் கசக்குமுசக்குன்னு என்னெனமோ டிசைன் போட்டுக்கறாங்க
=================
20 சன் டி வி யில் ராசி பலன் சொல்லும் ரோசி வாடாமல்லி கலர் ஜாக்கெட்க்கு மேட்சா வாடாமல்லி லிப்ஸ்டிக் போட்டிருக்கு.இமைக்கும்.முடியல
===============