1 சட்டசபை தேர்தலில் மக்களை நம்பி பா.ம.க. தனித்து போட்டியிடுகிறது: - ராமதாஸ் # நீங்க மக்களை நம்பிட்டீங்க சரி, மக்கள் உங்களை நம்பனுமில்ல?
===============
2 'ஸ்பெக்ட்ரம்' ஊழல் பின்னணியில் ஸ்டாலின் - :வைகோ .# இதை ஏன் முன் கூட்டியே முன்னணிக்கு நீங்க கொண்டு வர்லை?
================
3 ஊழல், வறுமையை ஒழிக்க பிரதமர் மோடி உறுதி # இந்தியாவில் இருக்கும் எல்லா அரசியல்வாதிகளையும், ஏழைகளையும் ஃபாரீன் அனுப்பிடுவார்னு நினைக்கேன்
==================
4 மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்கியவை திராவிட கட்சிகள்:- அன்புமணி # அம்மா தாயே-ன்னு அதிமுக கட்சிக்காரங்க மட்டும் தானே கூப்பிடறாங்க? மக்களுமா?
==================
5 'பூத் சிலிப்' விவகாரத்தில் தேர்தல் கமிஷன் கண்டிப்பு:கட்சிகள் வழங்குவது செல்லாது என அறிவிப்பு # ஸ்லிப்லயே கட்சி சின்னம் பிரிண்ட் அடிக்க வழி இல்லை இனி
=================
6
- மீண்டும் திமுக ஆட்சி மலர மாணவர்கள் பாடுபட வேண்டும்: மு.க.ஸ்டாலின் # மாணவர்கள் சமயோசித”மானவர்கள்”
====================
7
- தேர்தல் அறிக்கையில் இலவசங்களுக்கு இடமில்லை!பிரேமலதா விஜயகாந்த் # வெரிகுட், இலவசம் என்றும் இரட்டை இலை வசமாகவே இருக்கட்டும்
=====================
8
டெல்லியில் 21 ஆண்டுகளாக திருடி வந்த இளைஞர் கைது: 500 வீடுகளில் கொள்ளையடித்தவர் # அரசியல்வாதியா வர எல்லா தகுதியும் இருக்கே?
===============
9
மகளிர் முன்னேற்றத்தைப் பொருத்தே சமுதாய வளர்ச்சி அமையும்- உச்ச நீதிமன்ற நீதிபதி வெ. கோபால்# அப்போ சிஎம் வேட்பாளரா துர்கா ஸ்டாலின், பிரேமலதா, ஜெ இவங்களை மோத விட்ரலாமா?
===============
10
2ஜி பின்னணியில் ஸ்டாலின் எனக் கூறிய வைகோவுக்கு 'நோட்டீஸ் # நோட் திஸ் யுவர் ஆனர், இந்த தெர்தல் முடிவதற்குள் வை கோ வுக்கு நோட்டீஸ் மேல் நோட்டீஸ்
===================
11
11
தேர்தலில் வெற்றி பெற வேண்டி திருச்செந்தூர் கடற்கரையில் யாகம் நடத்திய பாஜக # ஆளாளுக்கு யாகம் பண்ணினாலும் அரோகரா அரோகரா தான்
=================
12
தொகுதிப் பங்கீடு: திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் இழுபறி # இந்த பழமும் கை நழுவிடாம பார்த்துக்குங்க, எப்படியும் காங் 1 சீட் கூட ஜெயிக்காது
==============
13
தேர்தல் சமயத்தில் வைகோ எந்த நேரத்திலும் சரியான பஸ்ல ஏறுவதில்லை #கீ.விரமணி # இருந்தாலும் அவருக்கான மதிப்பு என்றும் இறங்கியதே இல்லை
================
14
===================
15
யாரிடமும் பேரம் பேச வேண்டிய நிலையில் பாஜக இல்லை: பொன்.ராதா # பாவம், ரொம்ப பரிதாபமான நிலை தான், யாரும் வர்லை போல
===================
15
வாக்காளர்களை பணம் வாங்க தூண்டும் வகையில் பேச்சு: பிரேமலதா மீது வழக்குபதிவு # இந்த தேர்தல் முடியும் வரை வக்கீல்களுக்கு செம லாபம்
=================
16 மக்கள் நலக்கூட்டணியை விஜயகாந்த் அணி என அழைக்க முடியாது-ஜி.ராமகிருஷ்ணன் # சரி அழைக்க வேணாம் மனசுக்குள்ளேயே சொல்லிப்பார்த்துக்குங்க
===========
17 திமுகவில் 80% இந்துகள் உள்ளனர் -ஸ்டாலின் #,தப்பு.திமு க வில் இருப்பவர்களில் 80%, இந்துக்கள் என்பதே.சரி
===========
18 அதிமுக MPக்கள் நாடாளுமன்றத்தில் வாய் திறப்பதே இல்லை
- பியூஷ் கோயல் # வாய் திறந்தா அப்புறம் எம் பி பதவியே இருக்காதே?
================
19
ஜெ.வை ஒரு முறை கூட சந்திக்க இயலவில்லை... மத்திய மின்சாரத்துறை அமைச்சர் "ஷாக்" புகார் # BJP கூட கூட்டணிப்பேச்சுனு நினைச்ட்டேன்னு சமாளிப்பாரோ?
================
20
கார் விபத்தில் உயிர் தப்பினார் "ஆர்ஜே" பாலாஜி # தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்னு சும்மாவா சொன்னாங்க நம் முன்னோர்?
================