1 மார்ச் டூ மே வெய்யில் கொடுமை ஜாஸ்தியா இருப்பதும் நல்லதுதான் ஒரு வகைல
எப்படி?
சூரியனால் தான் வெய்யில்னு நெகடிவ் ஓட்டு விழ ஒரு வாய்ப்பு இருக்கில்ல?
===============
2 என் டி எம் ஒர்க் ஆகலை,அதனால யாரும் டி எம் அனுப்ப வேண்டாம்
மிஸ், இதான் சாக்குன்னு அதை செக் பண்ண உங்க ஃபாலோயர்ஸ் எல்லாரும் டி எம்மப்போறாங்க
============
3 யுவர் ஆனர் , கட்சித்தலைவர் கிட்டே நல்ல பேர் எடுக்கத்தான் 3 பேரை உயிரோட எரிச்சோம்
ஓஹோ, அப்போ முதல்ல ஜெயில்ல தள்ள வேண்டியது கட்சித்தலைவரைத்தான்
==================
4 டியர், புது தோசைக்கல்லில் முதல் தோசை நல்லா வர மாட்டேங்குதே அது ஏன்?
விஜய் மல்லைய்யாக்கு கொடுத்த பேங்க் லோனும், புதுக்கல்லில் சுடும் தோசையும் 1. வராது
==================
5 சார், உங்க ஜோக்ஸ் எல்லாம் படிச்சா சுவரில் முட்டிக்கலாம்னு தோணுது
அப்டியா? உங்க ஃபேஸ்புக் WALL ல போடறேன், அதுலயே முட்டிக்குங்க
====================
6 மிஸ்! எதுக்காக என்னை கெட்ட வார்த்தைல திட்டுனீங்க?
என் கிட்டே ஒரு வார்த்தையாவது பேசுனாத்தான் ஃபாலோ பண்ணுவேன்னீங்களே?
================
7 கடல் கன்னியை நேர்ல பார்த்தவங்க இருக்காங்களா?
கடல் கன்னியோட பாலோயர்ஸ் யாராவது எதிர் வீட்டில் குடி இருந்தா பார்த்திருப்பாங்க
============
8 பர்த்.சர்ட்டிபிகேட் பார்்க்காமயே அந்தப்பொண்ணுக்கு 19 வயசுதான் னு எப்டி சொல்றே?
மடோனா செபாஸ்"டீன்" ,அப்போ டீன் ஏஜ் தானே?
============
9 தலைவரே! ஒரு வேளை ( ஒரு பேச்சுக்கு) நீங்க ஜெயிச்சுட்டா துணை முதல்வர் பதவி யாருக்கு கொடுப்பீங்க?
எனக்கு “வாங்கி”த்தான் பழக்கம். யாருக்கும் தரமாட்டேன்
===================
10 தலைவரே! உங்க ஆட்சில ஏன் விஜய் மல்லைய்யாவை தப்பிக்க விட்டீங்க?
அவங்க ஆட்சில மட்டும் லலித் மோடியை தப்பிக்க விடலையா?அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
==================
11 தலைவரே! மாடு எப்படி உங்களை முட்டுச்சு?இப்டி காயம் ஆகி இருக்கு?
4 நாளா தீனி போடலைங்கறது தெரியாம தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார்?னு அது கிட்டேப்போய் கேட்டேன்
=================
12 இன்ஸ்பெக்டர், 7000 கோடி ஏமாற்றி நாட்டை விட்டு ஓடிப்போன ஆளை பிடிச்ட்டீங்களா?
அது முடியலை சார், வீட்டை விட்டு ஓடிப்போன டீச்சரை திருப்பூர்ல பிடிச்ட்டோம்
==================
13 ஏட்டய்யா, நான் மாசமா இருக்கேன். அவர் கூட என்னை சேர்த்து வைங்க
ஏம்மா? 2 பேரும் சேராம எப்டி மாசமா ஆனே?
================
14 சார், உங்க பொண்ணு கடல் கன்னியைக்காதலிக்கறேன்
உனக்கு நீச்சல் தெரியுமா?
ம்ஹூம்
அப்புறம் எப்டி டெய்லி நடுக்கடலுக்குப்போய் அவளைப்பார்ப்பே?
=================
15 நைட் ஓவரா குடிச்சியா?
எப்டி தெரியும்?
வாசல்ல 6 ஃபுல் பாட்டில் கிடக்கே?
================
16 ஒரு பொண்ணு உங்க கிட்ட சாரி கேட்டா நீங்க என்ன செய்வீங்க?
நான் பதிலுக்கு பேன்ட் சர்ட் கேட்பேன்
============
17 பூரி ஒரு செட்
DMK பூரியா? ADMKபூரியா?
அப்டின்னா?
3,பூரி வாடிப்போய் இருந்தா அது DMK பூரி.செட்
2 பூரி பூரிப்பா இருந்தா அது ADMK பூரிசெட்
===========
18 தலைவரே! மேட்டூர் அணையை 80,வருசமா யாருமே தூர் வாரலையாமே ஏன்?
எங்கே டைம்?,ஒருவரை ஒருவர் காலை வாரி விடவே நேரம் சரியா இருக்கு
=============
19 டாக்டர்.சந்தோசமா இருந்தா சாப்புட முடியலயே..என்ன பண்ண?
உங்க சம்சாரத்தை நினைங்க.கடுப்பாகும்.டக்னு சாப்ட்ருங்க
===============
20 சார்.ஏழே கால் லட்சம் பேர் உங்களை பாலோ பண்றாங்க.ஆனா நீங்க வெறும் 24,பேரை மட்டும் பாலோ பண்றீங்க?
24 பட ப்ரமோ
================