Tuesday, March 22, 2016

MOHA VALAYAM - சினிமா விமர்சனம் ( மலையாளம் )



 ஹீரோ சாருநிவேதிதா  மாதிரி ஒரு ரைட்டர் மட்டும் இல்லை. ஒரு சினிமா டைரக்டர். அவரு ஒரு ஸ்டோரி டிஸ்கஷனுக்காக தன் சொந்த சம்சாரத்தோட பஹ்ரைன் வர்றார். சினிமா சம்பந்தப்பட்ட 2 ஆட்களும்  கூட இருக்காங்க. கொஞ்ச நாள் கழிஞ்சதும்  சம்சாரத்தை மட்டும்  ஊருக்கு அனுப்பிட்டு   டைரக்டர்  தனியா  ஃப்ரீயா  ஒரு வாரம்  இருக்க  பிரியப்படறார்

 ஏன்னா  சம்சாரம்  எப்போப்பாரு  தம் அடிக்காத , தண்ணி  அடிக்காதன்னு அவரோட ஆரோக்யத்தின் மேல் அக்கறை  கொண்டு  அட்வைஸ்  பண்றது  பிடிக்கலை. அக்கரை வந்தும் எதுக்கு அக்கறை?னு நினைச்சாரோ என்னவோ?


 நைசா  பேசி  சம்சாரத்தை தனியா பேக் பண்ணி அனுப்பிடறார்.


அதுக்கப்பறம் டைரக்டருக்கு   ஒரு பார்  ஓனர் உடைய நட்பும் அறிமுகமும்  கிடைக்குது. பார்  ஓனர்  ஒரு லேடி.

 இதுவரைக்கும்  வேண்டா வெறுப்பா பார்த்திட்டு  இருந்த  தமிழன்  இப்போ தான் நிமிர்ந்து    உட்கார்றான்.  ஏன்னா இனிமே தானே மெயின் கதையே வருது?

அந்த  பார்  ஓனர்  லேடி  சரிதா நாயரை விட பெரிய    கேடி  போல . தன்னைப்பற்றிய  கதையை எல்லாம் எடுத்து  விடுது’’

 ஒன்றுக்கும்  மேற்பட்ட  காதலர்  உள்ள  பெண்ணை நாம எல்லாம் கொஞ்சம் அசூயையாப்பார்ப்போம். ஆனா டைரக்டர்  அந்த  லேடி  சொன்ன  கில்மாக்கதை  எல்லாம் கேட்ட  பின்னும்  அந்த லேடி  மேல  லவ் ஆகிடறார்.


எப்டியாவது  அவ  கூட சேரனும்னு  துடிக்கறார். ஆனா அந்த லேடி  கேப்டன்  மாதிரி  டேக்கா  கொடுத்துட்டே  இருக்கு   என்ன ஆச்சு என்பதே மிச்ச  மீதிக்கதை 


 இந்த  கதையை  இப்போ நான் சொன்னது போலவே  சிங்கிள்  டிராக்கில்  சொல்லி இருந்தா  அது  ஒரு நீட்டான  லவ் ஸ்டோரியா  இருந்திருக்கும்


 டைரக்டர்  கொஞ்சம்  அதி மேதாவி  போல . கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமா   ஊடால  3  கிளைக்காதல்  கதையை இணைச்சிருக்கார் 

 பாரில்  பணி  புரியும்  பெண்களின்  காதல்  கதை  , மெயின் கதைக்கும்  , இந்த சைடு  கதைக்கும்  எந்த சம்பந்தமும்  இல்லை, ஆனாலும்  படத்தை  இழுப்பதற்காக அல்லது கால்ஷீட் வாங்குனதுக்காக  ஏதோ   ஒண்ணுக்காக 


 அந்தக்கிளைக்கதைகள்  கொஞ்சம்  குழப்புது. அது மட்டுமில்லை, மெயின் கதையின்  தாக்கத்தை  அது  குறைக்குது





 படத்தோட  ஹீரோவா  ( டைரக்டரா)  Joy Mathew    நல்லா  பண்ணி 
இருக்கார். நம்ம  ஊர் பிரதாப்  போத்தன்  மாதிரி  முகச்சாயல். இவர்  ஒரு  பெரிய  டைரக்டர்  என்பதற்கான எந்த வித காட்சியும்  காட்டப்படாதது   திரைக்கதையின் ஆகச்சிறந்த மைனஸ். க்ளைமாக்சில்  இவர்  நடிப்பு  குட்


ஹீரோயினா  மைதிலி , அனு அகர்வால்  போல்  சிரிப்பு , காஜல் அகர்வால் போல்  இளமை, நிஷா  அகர்வால்  போல்  இடை ( என்ன ஒரே அகர்வால்  ஃபேமிலி வர்ணனையா வருது?) 


 இவரது மயக்கும்  சிரிப்பும் , ப்ரா  லேங்குவேஜும் தான்  படத்தின்  ஸ்பெஷல். ( ( பாடி லேங்குவேஜின் லேட்டஸ்ட் வெர்சன்  தான் ப்ரா லேங்க்வேஜ்)


 இந்தப்படத்தில்  வில்லன்களே  இல்லை. சி செண்ட்டர்  ரசிகர்களுக்கு   பெருத்த  ஏமாற்றம். ரேப்  சீன் வைக்க வாய்ப்பு இல்லை



 இசை , ஒளிப்பதிவு  இரண்டும் அருமை அதுவும்  ஓப்பனிங்கில்  பர்ஹைனின் அழகை கேமரா வழங்கிய  விதம் அட்டகாசம்



லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1  படத்தில்  சரக்கு அடிக்கும்  காட்சி, தம் அடிக்கும் காட்சி  இதெல்லாம் நீக்கிட்டுப்பார்த்தா 1  மணி  நேரம்  தான்  ஓடும், படம் மொத்தம்  ரெண்டரை மணி  நேரம்  ஓடுது. ஏய்யா  எப்போப்பாரு  யாராவது  குடிச்ட்டே  இருப்பதைக்காட்டிட்டே  இருப்ப்பீங்களா?  ஓசில  சரக்குக்கிடைச்சா  புரொடியூசர்  தலைல இப்டியா மிளகாய்  அரைப்பீங்க?


2  ஹீரோயின்  பார்  ஓனர்  லேடி இளமைஆன ஆள். பல காதலன்களைப்பார்த்த  பதி விரதை. அவர்  ஏன் ஓவரா  டைரக்டர்  கிட்டே  பிகு  பண்ணுது?இத்தனைக்கும்   யூ ஆர்  மெஜஸ்டிகப்டினு  டயலாக் எல்லாம்  விடுது (  சீன் போச்சே  என்ற ஆதங்கம் எல்லாம் இல்ல, நிஜமாவே  கேரக்டர்  புரியலை)


3  பாரில்  பணி  புரியும்  ஒரு பெண்  ஒரு ஆளை  ஏமாற்றி  ஷாப்பிங்க்  மாலில் 1  லட்சம்  ரூபாய்க்கு  டிரஸ் எடுத்து  பின் அதே க்டையில்  அதே டிரசை 60,000  ரூபாய்க்கு விற்பது  போல்  ஒரு சீன். இந்த  சீனில்  ஜவுளிக்கடை  ஓனர்  அந்த  40%  எனக்கு  என சொல்லும்  சீனில் லாஜிக் இடிக்குது. இது என்ன  திருட்டு சரக்கா?அந்த லேடி  ஒண்ணா  அந்த டிரசை  தானே  வெச்சிருக்கலாம். இல்ல அந்த  லூசு ஜொள்  பார்ட்டி  கிட்டே பணமாவே  வாங்கி  இருக்கலாம்.  வீட்ல   அம்மா க்கு உடம்பு  சரி இல்ல இப்டி  பொய் சொல்லி


4   அந்த  லூஸ்  ஜொள்  பார்ட்டி  தன் மகனுக்கு  சீரியஸ்  என்ற  ஃபோன் வந்தும் அந்த  லேடி  பின்னால் சுத்து வது  ஓவர். எந்த ஆணும்  மனைவிக்கு துரோகம்  செய்வான் , ஆனால்  குழந்தைக்கு துரோகம்  செய்ய மாட்டான்


5  படத்தில்   பாரில்  வேலை செய்யும்  பணிப்பெண்களின்  3 கிளைக்கதைகள் , அது போக  பார்  ஓனர்  லேடியின் 4 கில்மாக்கதைகள்  என  இடைசெருகல் ( சிங்கிள்  மீனிங்க்)  காட்சிகள்  குழப்புது


6  ஹீரோயின்   மப்பில்  பெட்ல  படுத்து  இருக்கும்போது  அந்த  நோஞ்சான்  ஓனர் கில்மாக்கு கிட்டே போறான். அது படியுமா? படியாதா? இதெல்லாம்  தெரியாமயே  தன் டிரசை  எல்லாம் கழட்டிட்டு அண்டர்வேரோட  எப்டி தில்லாப்போறான்? அது ஓங்கி  ஒரு உதை  விட்டதும்  வரும் காமெடி  காட்சிக்காகவா? சகிக்கலை



நச்  டயலாக்ஸ்

1  டைரக்டர் சார்.என்னையே பார்த்துட்டு இருக்கீங்களே? ஏன்?



பார்த்துட்டு இருப்பதும் ஒரு சுகம் தான் VALAIYAM





2 கடலுக்கு முன் அமர்ந்திருக்கையில் அது மந்திர சக்தி மிக்க தேவதையாய் தோணும்.தன் அலைகளை அனுப்பி நம்மை அழைக்கும் VALAIYAM

3 ஒரு சினிமாக்காரனுக்கு முக்கியப்பணியே வித வித மாய் கனவு காண்பதே #,MOHA VALAI


4 தூக்கம் தொலைத்த என்னைப்போன்ற பெண்களுக்கு கனவு காண நேரம் இராது VALAIYAM

5 மரியாதை வெச்சிருக்கற ஆண்கள் லிஸ்ட் பெண்ணிடம் ஏராளம் உண்டு.ஆனால் எல்லோரையும் நேசித்து விடமுடியாது அவளால் VALAIYAM

6 வாழ்நாளில் நஷ்டப்படாதவர் என யாருமே இல்லை.ஒவ்வொருவரும் ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒன்றை இழக்கிறார்கள் VALAIYAM




சி.பி, கமெண்ட் -  ஏ செண்ட்டர்  ஆடியன்சுக்கான    சீன் இல்லாத   கில்மா லவ் ஸ்டோரி, ரேட்டிங்  -  2.5 / 5


 திருவனந்த புரம் நிலா வில் படம்  பார்த்தேன்