1 எங்க தலைவர் 2 மணி நேரம் எந்தக்குறிப்பையும் பார்க்காம மேடைல பேசுனாரு, அதனால அவருதான் சிஎம்
அப்போ மதுரை முத்து கூடத்தான் 3 மணி நேரம் பேசுவாரு விஜய் டிவில
=================
2 முன்னாள் மினிஸ்டரை Ex-Ministerனு கூப்பிடறோம்! புதுசா மந்திரி ஆக ஆசைப்படறவங்களை, எப்படி விளிக்கிறது?
நப்பாசை அமைச்சர்
===============
3 கேப்டன் - என்னைக்கேட்காம சரத் குமாரை ஏன் உள்ளே வரச்சொன்னீங்க?
பிஜேபி = நீங்க வந்துட்டா அவர் ஆட்டோமேடிக்கா கிளம்பிடுவாரு
===============
4 தலைவரே! எல்லா கட்சியும் தனியா போட்டியிட்டா என்ன ஆகும்?
வாக்கு வங்கி சதவீதம் எல்லார்க்கும் தெரிஞ்சிடும், ஒரு பய மதிக்க மாட்டான்
=================
5 உங்க தலைவர் ஒரு திருடரா? இல்லையா?
அவர் மட்டும் திருடலையா?
அது பதில் இல்லை. கேட்ட கேள்விக்கு பதில். உங்க தலைவர் திருடுனாரா?யோக்கியமா?
===============
6 எங்க கட்சி தான் தலித் மக்களுக்கு பதவி தரும் ஒரே கட்சி
ஓஹோ, அப்போ முதல்வர் வேட்பாளரா உங்க வாரிசை அறிவிக்காம ஒரு தலித்தை அறிவிக்கலாமே?
====================
7 குடும்ப அரசியலை மிக கடுமையாக எதிர்ப்பவன் நான், மேலும்....
தலைவரே, ஒரு நிமிசம், நம்ம கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்?
ஹிஹி, என் பையன் தான்
==================
8 தமிழகத்தை 60 வருடங்களாக அவர் கொள்ளையடித்தார், 20 வருடங்களாக இவர் கொள்ளையடித்தார், எனவே வாக்காளர்களே! எங்களுக்கும் ஒரு வாய்ப்பு தரவும்!
===============
9 இந்த ஆட்சியில் திருட்டை , திருடர்களை ஒழிக்க முடியவில்லை.. எனவே.....
தலைவரே! நம்மை ஒழிச்சிருந்தா நாம எப்படி தேர்தலில் போட்டி போட?
===============
10 தலைவரே! எதுக்கு சிகப்பழகு க்ரீம் யூஸ் பண்றீங்க?
கறுப்பா இருக்கறவனுக்கு ஓட்டு கிடைக்காதாம்
================
11 தலைவரே! எதுக்கு சிகப்பழகு க்ரீம் யூஸ் பண்றீங்க?
கறுப்பா இருக்கறவனுக்கு ஓட்டு கிடைக்காதாம்
==============
12 டாக்டர்! 4 கடை வாய்ப்பல்லில் 1 தான் வளருது ஏன்?
நீங்க வீட்டுக்கு 4 வது கடைக்குட்டியா இருக்குமோ?
=================
13 ஒருத்தன் தன்மான சிங்கமா? இல்லையா?ன்னு எப்படி கண்டுபிடிப்பது?
அவனுக்கு கல்யாணம் ஆகாம இருந்தா தன்மான சிங்கம்
===============
14 வண்டில PRESSனு எழுதிருந்தா போய் ப்ரெஸ் பண்ணிட்டு ஒண்ணுமே ஆகலையேன்னு பீல் பண்ணுவன் நான்
நல்லவேளை,லேடி பிரெஸ் ரிபோர்ட்டர் யாரும் எதிர்ல வர்ல
=================
15 உங்க தொப்பை குறையனும்னா டெய்லி பத்மாசனம் செய்யனும்
டாக்டர்! பத்மா ஆசனம் செஞ்சா பத்மாவோட தொப்பை தானே குறையும்?
===============
16 மிஸ்! மயில் தோகை போல் நீளமான அழகான கூந்தலை கட் பண்ணி ஏன் பாப் கட்டிங்க் பண்ணிக்கிட்டீங்க?
நான் பாப் சிங்கர் ஆகப்போறேன், மேட்சுக்கு மேட்ச்
====================
17 என்னோட படைப்பை ஃபேஸ்புக்ல பாத்து மோட்டிவேட் ஆகிருக்கீங்களா யாராவது ?
எஸ் மேடம், உங்க பொண்ணு ஃபோட்டோ பார்த்து
==================
18 சங்கீதாவுக்கு sangeetha தானே கரெக்ட் ஸ்பெல்லிங்க்? நீங்க தப்பா போட்டிருக்கீங்க?
நான் ஒரு பாடகி ஆச்சே? அதான் "SONG"EETHAAனு போடறேன்
==================
19 எந்த நல்ல செய்தியா இருந்தாலும் என் கிட்டே தான் சொல்றாங்க, என்னை ராசியா நினைக்கறாங்களோ?
ஓஸி ரோஸியா நினைப்பாங்க போல, எதுனா ஓசி கேட்பானுங்க
==============
20 டாக்டர்.குழந்தை பிறப்பை ஒத்திப்போட என்ன செய்யனும்?
எதுவும் செய்யக்கூடாது.வாசல் திண்ணைல போய் கம்முனு படுத்துக்கனும் தனியா
================