Monday, March 21, 2016

Darvinte Parinamam - சினிமா விமர்சனம் ( மலையாளம்)

வை கோ கலைஞர் கூடவே இருந்திருந்தா  இப்போ அல்லது எதிர்காலத்துல நல்ல எதிர் காலம் இருந்திருக்கும் ( எதிர் காலத்தில் ஒரு எதிர் காலம் அடடே!)ஆனா அவசரப்பட்டு ஒரு ஆசைல வந்துட்டார். அந்த மாதிரி  ஹீரோ  ஒரு சின்ன சண்டைல அம்மா கிட்டே கோவிச்சுக்கிட்டு மாசமா இருக்கும் சம்சாரத்தைக்கூட்டிக்கிட்டு  வேற  ஊர் போறார்

 ஹீரோக்கு வேலை இல்லை, கைல காசில்லை. நண்பர்கள் உதவியுடன்  ஒரு வாடகை வீட்டில்  தங்கறார்.

வெள்ள நிவாரண உதவியை மத்திய அரசு கொடுக்கறதை 50% தனக்கு ஒதுக்கிட்டு மிச்ச மீதியை பாதிக்கப்பட்டோர்க்கு  அரசு கொடுத்தது போல்  ஹீரோவே நண்பர்கள் உதவியுடன்  வாழும்போது 
ஒரு வீணாப்போன ரவுடி ஹீரோ சம்சாரத்தின் கழுத்தில்  இருக்கும்  செயினை பறிச்சுட்டுப்போய்டறார்

ஹீரோ செம கடுப்பாகி அந்த ரவுடியை பற்றி  போலீசில் புகார் தர்றார்

 பொதுவா ரவுடிங்கன்னாலே அரசியல் செல்வாக்கு இருக்கும். ஏன்னா முன்னாள் ரவுடி தானே  இந்நாள் அரசியல் வாதி?

 புகார் கொடுத்த்அ  ஹீரோ  வீட்டில் இருந்த  எல்லா பொருள்களும், கூடவே அவர் பைக்கும் திடீர்னு காணாம போய்டுது

 கடுப்பான  ஹீரோ  இதுக்குக்காரணமானவங்களைப்பழி வாங்கப்புறப்படறார். காமெடி ட்ரீட் கதை 




ஹீரோவா  4  மெகா ஹிட்ஸ் வரிசையா கொடுத்த  பிருத்விராஜ். அவரோட அந்த 4 படங்களின்  தரத்தையும் , திரைக்கதையையும் ஒப்பிடும்போது  இது  ஒரு சறுக்கல் படமே , ஆனால்  பொதுவாப்பார்த்தா இது சராசரிப்படமே ( அதுக்காக தியேட்டருக்கு  வரும் ஆடியன்சிடம் எல்லாம்  இதை பொதுவாப்பாருன்னு சொல்ல முடியுமா?)


ஹீரோ ஆக்சன் காட்சிகளில்  ஸ்டண்ட்  சீன்களில்  நல்லா பண்ணி  இருக்கார் .  சோக காட்சிகள்  குறைவு . தப்பிச்ட்டார் 


 வில்லனா வரும்   சேமபன் வினோத்   கலக்கலான நடிப்பு . ஃபிகருக்கு  ரூட் விடுவதும் அதுக்கு  அவரின் ரீ ஆக்சன்களும் அருமை

 பின் பாதியில்  ஹீரோ அவரை பாடாய் படுத்தும்போது காட்டும்  முக எக்ஸ்பிரசன்கள் அழகு 

 காமெடியனா  சவுபின்  மகேஷ் பாபு ரசிகரா வந்து  விஜயை கலாய்க்கும் காட்சிகள் அடடே

 ஹீரோயினா சாந்தினி  அழகு  ஃபிகர் . மாசு மருவே இல்லாத வழு வழு  முகப்பரப்பு ( அப்பா மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரியாம் )


பாடல்கள்   3 தேறுது. ஒளிப்பதிவு  எடிட்டிங்க்   கன கச்சிதம் 



முன்  பாதி  சராசரி  மசாலா  பின் பாதி நம்ப முடியாத ரவுடிச காமெடி

முதலுக்கு  மோசமில்லாத  சராசரி மசாலா காமெடி ஆக்சன் ஃபிலிம்  என்ற அளவில்  ஓக்கே ரகம்


மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1  சுகப்பிரசவம் ஆகனும்னா கர்ப்பிணிப்பெண்கள் வழக்கம் போல் எல்லா வேலையும் செய்யனும்.ஓய்வெடுக்கறேன்னு முடங்கிக்கக்கூடாது பரிணாமம்



 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

தொடர்ந்து 4 மெகா ஹிட்ஸ் கொடுத்த பிருத்விராஜ் ன் 5 வது வித்தியாச படைப்பு டார்வின்ட்ட பரிணாமம் @ திருவனந்தபுரம் விசக்த் 11 30 am show








இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


  டைட்டிலும்  ,  போஸ்டர்  டிசைனும்  இது ஒரு சயின்ஸ் ஃபிக்சன் ஃபிலிம் என தெள்ளத்தெளீவாக சொல்லுது. வெரிகுட் டிசைன்ஸ், ஆனா நிஜத்தில் சாதாப்படம்


2  ஹீரோவுக்கு  ஓப்பனிங்க்  பில்டப் சீன்களோ, பஞ்ச் டயலாக்சோ இல்லாதது ஆறுதல்

3  வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது  அழகு



இயக்குநரிடம்  சில கேள்விகள்

1  கர்ப்பமான மனைவியை ரோட்டில் அம்போன்னு விட்டுட்டு  ஹீரோ செல்ஃபோன் ரீசார்ஜ் பண்ண பெட்டிக்கடைக்குப்போகும்போதுதான் அந்த  செயின் பறிப்பு சம்பவம் நடக்குது. மெடிக்கல் ஷாப்ல காண்டம் வாங்கவே அவனவன்  ஜோடியாப்போறான், இதுக்கு ஏன் மனைவியை விட்டுட்டுப்போகனும்?


2   செயின்  பறிச்ட்டு  ரவுடிகள் தப்பிப்ப்பதை பலரும் வேடிக்கைதான் பார்க்கறாங்க. பட்டப்பகலில் பஜாரில் நடக்கும்போது  யாருமே அவர்களைப்பிடிக்க  முயற்சிக்க மாட்டார்களா?


3  ஓப்பனிங்க்  சீனில் அம்மா -மகன்  பேச்சு வார்த்தை தடித்து  தனிக்குடித்தனம்  போவதில் ஆழம்  இலை. இதை எல்லாம் 4  வெவ்வேறு சம்பவங்களை க்காட்டி நம்ப வைக்கனும். 


4   பின் பாதியில்   சிலைத்திருட்டை வைத்து  வில்லனை  ஹீரோ மிரட்டி பணிய வைக்கும் காட்சிகள்  எல்லாம் காமெடிக்காக இருந்தாலும்  லாஜிக்கே இல்லாதவை




சி  பி  கமெண்ட் -Darvinte Parinamam -  ( மலையாளம்)- பிருத்விராஜ்-ன்   சராசரி காமெடி ஆக்சன் மசாலா தான்.பின் பாதியில் லாஜிக் சொதப்பல்கள் ரேட்டிங் = 2.5 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -  40



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) - சுமார்



 ரேட்டிங் -2.5 / 5


    Darvinte Parinamam is an Indian Malayalam-language action film directed by Jijo Antony. It stars Prithviraj Sukumaran, Chandini Sreedharan, Chemban Vinod Jose, and Balu Varghese in the lead roles. Wikipedia 
    Initial releaseMarch 18, 2016