1 மேடம், உங்க குழந்தைக்கு என்ன வயசு ஆகுது?
2 வயசு
உங்க கடைசி குழந்தைக்கு கேட்கலை, முதல் குழந்தைக்கு?
============
2 தென் இந்தியாவின் Brad Pitt சிம்புன்னு எப்டி சொல்றே?
தென் இந்தியாவின் ஏஞ்சலினா ஜூலி ஹன்சிகான்னு ஜெயம் ரவி சொன்னாரே?
==================
3 தலைவரே! பசுமைத்தமிழகம் அமைப்போம்னீங்களே? விவசாயம் செழிக்க பாடுபடுவீங்களா?
ச்சே ச்சே, தொண்டர்கள் கைல நெஞ்சுல பச்சை குத்த வைப்போம்
===============
4 என் பொண்ணு எப்பவும் சின்னதா டிரவுசர், டி சர்ட் போடுட்டு சுத்துது
உங்களுக்கு மந்த புத்தி, உங்க பொண்ணுக்கு சமந்தா புத்தி
===================
5
எங்கண்ணன் மேல கை வெச்சுப்பாருங்க
ஏன்? உங்கண்ணன் காங்கிரஸ்ல சேர்ந்துட்டாரா?
==============
6 தலைவரே! எதுக்காக அதிகாலை 5 க்கு அலாரம் வைக்கச்சொல்றீங்க?
நமக்கு நாமே விடியல் மீட்புத்திட்டத்தின் முதல் படி அதிகாலையில் துயில் எழல்
==============
7 தலைவரே! எதுக்கு எனக்கு ஃபோன் பண்ணி உங்க வீட்டு அட்ரஸ் விசாரிக்கறீங்க?
தமிழ் நாடு பூரா பயணம் செஞ்சதுல என் வீட்டு அட்ரஸை மறந்துட்டேன்
===============
8 முதன் முதலா படம் டைரக்ட் பண்றீங்க, பிளாக் பஸ்டர் ஹிட்னு டைட்டில் வெச்சிருக்கீங்க?
என் முதல் படமே பிளாக் பஸ்டர் ஹிட்னு சொல்லிக்கலாமே?
=============
9 தலைவரே! உ ங்க பயணக்கட்டுரை புரியலையே?
பஸ்ல பயணம் பண்ணிக்கிட்டே எழுதுனது, எழுத்து கோணல் மாணல் ஆகிடுச்சு
===============
10 மிஸ்!தூரத்துல இருந்து பாத்தா உங்க டிபி கிளியரா இருக்கு !
பக்கத்துல வந்து பாரு, கிளி மாதிரி இருக்கும்
=============
11 டியர், எதுக்கு பாம்புப்புத்துல இருந்து ஒரு பாம்பை எடுத்து கட்டிப்பிடிக்கறீங்க?
உங்க அரவணைப்பு எப்படி இருக்கனும்னு பார்க்கனும்னியே?
=============
12 நான் டாக்டர் இல்லையே எதுக்கு என்னை dr -னு சொல்றீங்க?
லூசு, உன்னை டியர்னு கூப்ட்டேன், டியரின் ஷார்ட் ஃபார்மும் அதுதான்
================
13 தலைவரே! இந்த ஆட்சில மின்சாரக்கட்டணக்கொள்ளைனு சொல்லி மாட்டிக்கிட்டீங்க
எப்டி?
நம்ம ஆட்சில தான் மின்சாரமே இல்லையே -னு கேட்கறாங்க
===============
14 டியர்! ரஃப் நோட்டின் கடைசிப்பக்கத்தில் எதையாவது கிறுக்குவேன்
ஓஹோ, 1வது , 2 வது பக்கங்களில் காவியப்படைப்பு எழுதுவியா?காட்டு பார்ப்போம்
=================
15 டியர், நான் கஷ்டப்படும்போது நீங்க ஏன் என் பக்கம் இருக்கறதே இல்ல?
சாரி, எனக்கு இஷ்டப்படும்போதுதான் உன் பக்கம் வருவேன்
===============
16 டாக்டர்! பப்பாளிப்பழத்தை முகத்துல தேய்ச்சுக்கிட்டா முகம் ஷைனிங் ஆகுமா?
அப்டியே தேய்ச்சா பிக்கும், அரிஞ்சு தேய்க்கனும்
================
17 நான் எல்லாரையும் பேர்சொல்லிதான்கூப்பிடுவேன், ஆனா அவரை மட்டும் தான் சார்னு கூப்பிடுவேன்
ஓஹோ, அப்போ சார்மிளாவை சுருக்கமா எப்டி கூப்பிடுவீங்க?
================
18 யோவ், எதுக்குய்யா ஜெயிலுக்குள்ளே பொம்பளை மாதிரி நாணிக்கோணி நடக்கறே??
நன்னடத்தை-ன்னு ஏமாந்து ரிலீஸ் பண்ணிடுவாங்கனு ஒரு நப்பாசைதான்
===================
19 டியர், நீ வைரம் மாதிரி
நிஜமாவா?
ஆமா, நேச்சுரலா நாம 2 பேரும் கரி போல் கறுப்பா இருந்தாலும் நீ மட்டும் பவுடர் போட்டே கலர் ஆகிட்டியே?
================
20 டியர், நான் என் இரு கண்களாலேயே பேசுறது உங்களுக்குப்புரியலையே? ஏன்?
தெரில, நீ வாயால பேசறதே புரிய மாட்டேங்குது
================