Sunday, March 13, 2016

மிருதுளா செய்த கதாகாலேட்சேபம் - ரைட்டர் ஆட்சேபம்

தலைகீழாக நின்றாலும் வை கோ வை கோவை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதும் ஒரு வித நேமாலஜி  மூட நம்பிக்கையே! # வைகோ=கோவை


============



கேப்டன் = நான் கிங் கா இருக்க  தொண்டர்கள் ஆசைப்படறாங்க


ஜெ= அதான் ராஜா வுக்கு செக் மேட் வெச்சேன் இல்ல? # எதிர்க்கட்சி அந்தஸ்து இழப்பு

=============

3 தனுஷ் = ஜோசியரே!  என் ஜாதகம் இப்போ எப்டி இருக்கு?


கீர்த்தியால உங்க கீர்த்திக்கு பங்கம் வரப்போகுது


==============

4  இண்ட்டர்வ்யூவில் 

 கண்ணம்மா பேட்டை எங்கே இருக்கு?

 ட்விட்டர் அடிக்ட் 1 = தஞ்சாவூர்ல

ட்விட்டர் அடிக்ட் 2 = கனடா ல


==============

5  டியர்! பக்கம் பக்கமா மெசேஜ் அனுப்புனா ஒரு வார்த்தையில் ரிப்ளை பண்றீங்களே  , அது ஏன்?

அது வார்த்தை இல்லை, வாழ்க்கை

=============


6 சிவகார்த்திகேயன் = கீர்த்தியை தொந்தரவு பண்ணீங்களா?

தனுஷ் = ச்சே ச்சே ஆதரவு தர்றேன்னு சொன்னேன், அவ்ளோவ் தான் # கற்பனை

============


7  ஜட்ஜ் =  ஏம்மா, அவர் டெய்லி  உன்னை டார்ச்சர் பண்ணினாரா?

நடிகை= ஆமாங்க, ஏதோ ஒரு நாள் சாப்பாடு போட்டேன், டெய்லி சாப்பிட வந்துடறாரு


===============

8  அதிமுக கூட்டணி - ச”ரத்து” குமார்

===================


மச்சி, செம கவிதைடா, இதை குமுதத்துக்கா  ரெடி செஞ்சே?

 இல்லை எதிர் வீட்டு குமுதாக்கு


==============


10 தினமும் அதிகாலையில் நீ எழுந்து விடும் பார்முலாவை கடைப்பிடித்தால் கணிதன் ஆவாய்!
4கிமீ நடைப்பயிற்சி மேற்கொண்டால் ஆரோக்யன் ஆவாய்

============

11 அன்பே ! ரோஷினி!
ரோஸ் மில்க்கே வெட்கப்படும் அளவு நேச்சுரல் ரோஸ் நீ!


==========

12 பாக்கட்ல பணமே இல்ல ,ஆனாலும் என் சந்தோஷத்துக்கு குறைச்சல் இல்ல னு நெட் தமிழன் சொன்னா கள்ளக்காதலி 2 பேர் இருக்காங்கனு அர்த்தம்

==================

13 பெண்ணிடம் என்னென்ன சொல்லக்கூடாதோ எல்லாத்தையும் சொல்லிட்டு சமாளிஃபிகேஷனா “ எனக்கு தான் பொய் சொல்ல தெரியாதே பேபி”னு பிட் ஓட்டுவான்நெட் தமிழன்



===========

14 அன்பே! நொறுக்குத்தீனி தின்பதில் நீயே ஒரு மினி கிரைண்டர் தான்.உன் வீட்டில் எதுக்கு தனியா ஒரு கிரைண்டர்?


===========


15 புது மாடல் போன் தினம் 1 வந்தாலும் வசதி இருக்கே என புதுசு வாங்காமல் இருப்பதைக்கொண்டே வாழ்பவர்கள் தான் எளிமையான நிம்மதியானவர்கள்


==========

16 பிகருங்களை நாசூக்கா பார்க்காம அவங்க தப்பா நினைச்சாலும் பரவால்லைன்னு தீர்க்கமா முறைச்சுப்பார்க்கும் நாம் எல்லோரும் தீர்க்க தரிசிகள் தாம்

===============


17 ஒரு படைப்பாளியின் படைப்பு மெருகேறுவது அவன் சோகமான மன நிலையில் இருக்கும்போதே


==========


18 பாமர மக்களுக்கும் புரியும்படி எளிமையான வார்த்தைகளில் தன் படைப்பு இருக்கும்படி பார்த்துக்கொள்வான் ஒரு ஜனரஞ்சக எழுத்தாளன்


==============

19 துலாபாரம் பற்றிய கதாகாலேட்சபத்தை மிருதுளா செஞ்சா அதுதான் மிரு"துலா பாரம்"



=============

20 அன்பே மோகினி !
உடல் நலனுக்கு ஊறு விளைவிக்காத ராகி நீ!


===============