1 காதலும் கடந்து போகும்
2 மாப்ள சிங்கம்
3 நட்பதிகாரம் 79
4 அவியல்
5 என்னை பிடிச்சிருக்கா?
6 கதிரவனின் காதல் மழை # 11/3/2016 தமிழ்
HINDI
1 .GLOBAL BABA
2 JD
3 TERAE SUROOR
4 OK MEIN DHOKHA
ENGLISH
5 GRIMSBY
6 THE PERFECT MATCH
7 THE YOUNG MESSIAH # 11/3/2106
1 காதலும் கடந்து போகும்
படம் காதலும் கடந்து போகும். விஜய்சேதுபதி கதாநாயகனாகவும்
மடோனா கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ்
நாராயணன்
மடோனா மலையாளத்தில் அறிமுகம் ஆன நடிகை. இதில்
சமுத்திரக்கனி முக்கிய ரோல் ( வில்லன் ?)
ஒரு கொரியன் மூவியின் அதிகாரப்பூர்வமான ரீ மேக் இது
இளைஞர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புகளுக்கு ஆளான ’காதலும் கடந்து போகும்’ படத்தின் டிரெய்லர் நேற்று சூர்யா அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இதுவரை 2 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகியுள்ளது. விஜய் சேதுபதி மற்றுல் மடோனா செபஸ்டியன் காமெடி மற்றும் ரொமாண்டிக் வசனங்கள் டிரெய்லரை இன்னொருமுறை பார்க்கத் தூண்டுவதை நம்மால் மறுக்க முடியாது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி , மடோனா செபஸ்டியன் , சமுத்திரகனி நடிப்பில் மார்ச் 11ம் தேதி வெளியாக உள்ள படம் ’காதலும் கடந்து போகும்’. படத்துக்கு இசை சந்தோஷ் நாராயணன். இப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது, விஜய் சேதுபதி பட டிரெய்லர் என்றாலே அவரை மீறி யாரும் பெர்ஃபாமென்ஸில் பின்னி எடுத்துவிட முடியுமா பாணியில் லோக்கல் சென்னை பாஷை, அசால்ட், கெத்து என ரவுடிக்கே உரிய தோரணை காட்டுகிறார்.
’பிரேமம்’ படத்தின் செலினா கேரக்டரில் மிகச் சொற்ப சீன்களிலேயே கொள்ளை கொண்ட மடோனா செபஸ்டியன் இதில் முழுப் படமும் வந்து கிறங்கடிக்கப் போகிறார் என்பது டிரெய்லரிலேயே தெரிகிறது. ”ண்ணா. நான் உங்களுக்கு ஒரு பழமொழி சொல்ட்டா?, இருங்க வந்து சொல்றேன்” என விஜய் சேதுபதி ஒரு பக்கம் அடடே! என சொல்ல வைத்தால், இன்னொரு பக்கம் ”மூஞ்சி லோக்கலா இருக்குல்ல இவ்ளோ தான் மேட்ச் பண்ண முடியும்” என மடோனா கலாய்ப்புகளும் படம் ரொமாண்டிக் காமெடிக் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும் என்பதைக் காட்டுகிறது.
சந்தோஷ் நாரயணனின் இசையில் ”கககபோ” பாடல் டிரெய்லருக்கு கொஞ்சம் பளிச் லுக். கூலர் போட்டுக்கொண்டு போலீஸ் லுக்கில் “ உள்ள போனாலும் அப்படியே இருக்க, வெளிய இருந்தாலும் அப்படியே இருக்க, ஒரு நல்ல தத்திக்கு உதாரணமா வாழ்ந்துட்டு இருக்க” என திடீர் எண்ட்ரி கொடுக்கும் சமுத்திரக்கனியால் படத்தில் சீரியஸ் போர்ஷன்களும் ஹெவியாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
அவ்வப்போது ”நானும் ரவுடிதான்” படத்தின் டிரெய்லர் நினைவு வருவதைத் தான் தவிர்க்க முடியவில்லை. எனினும் நலன் குமாரசாமி என்பதால் கண்டிப்பாக ‘ சூது கவ்வும்’ , ‘ பாணியில் அடுத்த ட்ரெண்டி படமாக இருக்கும் என நம்புவோம். ”காதலும் கடந்து போகும்” மக்களின் மனதைக் கடத்திப் போகுமா? அல்லது வெளியாகும் 10 படங்களில் இதுவும் ஒன்றாகக் கடந்து போகுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
2 மாப்ள சிங்கம்
விமல் நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் மாப்ள சிங்கம். இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக 3வது முறையாக அஞ்சலிநடித்துள்ளார்.
இப்படம் பல தடைகளை தாண்டி இந்த வாரம் வெளிவரவுள்ளது. நீண்ட நாட்களாக பலரும் இப்படத்தை எதிர்ப்பார்க்கையில், ரசிகர்களின் ஆவலை சற்றும் ஏமாற்றாதாம் இந்த மாப்பிள்ளை சிங்கம்.
விமலும் சமீபத்தில் ஒரு பேட்டியில், களவாணி அரிக்கியை எத்தனை பேருக்கு பிடிக்குமோ, அதை விட அதிகமானோருக்கு இந்த மாப்ள சிங்கத்தை பிடிக்கும் என கூறியுள்ளார்.
சொந்த சித்தியுடனான பிரச்சினைக்குப் பிறகு மீண் டும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார் அஞ்சலி. வரிசையாக படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அவர், தேர்தல் களத்திலும் குதிக்கவுள்ளார் என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுக்கும். அவர் உண்மையான தேர்தல் களத்தில் இறங்கவில்லை. விமலுடன் இவர் நடித்து வரும் ‘மாப்ள சிங்கம்’ படத்தில்தான் அவருக்கு அப்படியொரு களம் அமைந்துள்ளது. இப்படத்தின் கதைப்படி கதாநாயகன் விமலுக்கு எதிராக இவரும் தேர்தல் களத்தில் இறங்குகிறாராம்.
‘மாப்ள சிங்கம்’ படத்தை ராஜசேகர் இயக்கி யுள்ளார். விமல், அஞ்சலி, சூரி, காளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 11ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் வழக்கறி ஞரான அஞ்சலி, விமலுக்கு எதிராக தேர்தல் களத்தில் குதிப்பதுபோன்ற காட்சி ஒன்று இடம் பெறுகிறதாம். இதில், அஞ்சலி வீர வசனங்கள் எல்லாம் பேசி அசத்தியுள்ளாராம்.
அதுமட்டுமல்லாமல், ஜனரஞ்சகமாக உருவாகியுள்ள இப்படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் மிகக் கவரும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் சார்பில் பி.மதன் தயாரித்துள்ளார். இப்படத்தின் தணிக்கைப் பிரதி அண்மையில் இணையத்தில் வெளியானது. எனினும் இதையும் மீறி படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் படக்குழுவினர்
3 நட்பதிகாரம் 79
மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் கலக்கியவர்ராஜ்பரத். அப்படி செல்வதை விட தம்பா என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும்.
இவர் முதன் முறையாக ஹீரோவாக களம் இறங்கும் படம்நட்பதிகாரம்-79. இப்படத்திற்கு சிவகுமார், சூர்யா கிரிக்கெட் வீரர் முரளி விஜய் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘எனக்கு அஜித் சாரின் எளிமை மிக பிடிக்கும், அதேபோல் விஜய்யின் மாஸ், விக்ரமின் உழைப்பு, மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் சூர்யாவிற்கு பொருந்தும்’
என கூறியுள்ளார்.
கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, சந்தித்த வேளை ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், ரவிச்சந்திரன். இவர் அடுத்து, நட்பின் பெருமையை சொல்லும் வகையில், ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்கு, 'நட்பதிகாரம்-79' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
இதில், கதாநாயகனாக, 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் நடித்த ராஜ் பரத் நடிக்கிறார். இன்னொரு கதாநாயகனாக, 'வல்லினம்' படத்தில் நடித்த அம்ஜத்கான் நடிக்கிறார். கதாநாயகிகளாக ரேஷ்மி, தேஜஸ்வி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், பஞ்சு சுப்பு, வினோதினி மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.
ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் நிலம்பூர் இசையமைத்து இருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், ரவிச்சந்திரன். டி.ரவிகுமார் தயாரிக்கிறார். இந்த படத்துக்காக, இசையமைப்பாளர் தேவா பாடிய ஒரு பாடல் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் படம் உருவாகி வருகிறது என்கிறார், டைரக்டர் ரவிச்சந்திரன்.
4 அவியல்
சென்னை: பீட்சா, ஜிகர்தண்டா படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்தப் படத்திற்கு வைத்திற்கும் தலைப்பு என்னவென்று தெரியுமா? அவியல்.
தொடர்ந்து வித்தியாசமான படங்களைக் கொடுத்து வரும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ஸ்டோன் பெஞ்ச் என்ற பெயரில் சொந்தப் படநிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.
இந்த நிறுவனத்தின் சார்பாக பெஞ்ச் டாக்கீஸ் என்ற பெயரில் 6 குறும்படங்களை ஒன்றிணைத்து ஒரு திரைப்படமாக வெளியிட்டார், இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக 5 குறும்படங்களை ஒன்றிணைத்து ஒரு திரைப்படமாக வெளியிடவிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ், இதற்காக ரசிகர்களிடம் தலைப்பு கேட்டு ஒரு போட்டி ஒன்றையும் நடத்தியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
இவரது படத் தலைப்புகள் பீட்சா, ஜிகர்தண்டா என்று உணவு சார்ந்தே இருப்பதால் ரசிகர்களும் உணவுப் பெயர்களின் பெயர்களையே தலைப்புகளாக அனுப்பி இருக்கின்றனர்.
வந்து குவிந்த தலைப்புகளில் இருந்து அவியல் என்ற தலைப்பை தேர்ந்தெடுத்து இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ், இந்தத் தலைப்பை திருச்சி வாசகர் ராஜ்குமார் என்பவர் அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்த முறை உலமெங்கும் இதனை வெளியிட இருப்பதால் அதிக உழைப்பு, அதிக சிரிப்பு, அதிக பொழுதுபோக்கு கலந்து இருக்கும் என்று உறுதிமொழி கொடுக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
உங்கள் அபிமானத் திரையரங்குகளில் விரைவில் வெளியாக இருக்கிறது அவியல்.
5 என்னை பிடிச்சிருக்கா?
6 கதிரவனின் காதல் மழை
நன்றி - தினமலர் தினத்தந்தி மாலைம்லர் வெப்துனியா ஆல் சினி வெப்சைட்