1 மன்னா! 4 1/2,வருசமா சும்மா இருந்துட்டு திடீர்னு ஏகப்பட்ட சலுகைகளை அறிவிக்கிறீரே ஏன்?
தேர்தல் வரும் முன்னே
சலுகை வரும் பின்னே
===========
2 காஞ்சி புரம் மாநாட்டில் கூட்டணி பற்றி அறிவிப்பீங்களா?
விரைவில் அறிவிப்போம்னு அறிவிப்போம்
=================
3 உங்க வீட்டுக்கு ஏன் கூட்டிட்டுப்போக மாட்டேங்கறீங்க.வீட்டைப்பார்த்தா உங்களைப்பிடிக்கலாம் இல்லையா?
ஹவுஸ் ஓனரை பிடிச்ட்டா?
==========
4 விஷ்ணு கோயிலுக்கு வர மாட்டேன், ஆனா பெருமாள் கோவிலுக்கு வருவியா? என்னடி குழப்பறே?2 சாமியும் 1 தானே?
ஆனா விஷ்ணு விஜய் படம் ஆச்சே? நான் அஜித் ரசிகை
==================
5 மேடம், எதுக்காக பால் வளத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செஞ்சீங்க?
கட்சிப்பணியை கவனிக்காம அமலா பால் கிட்டே கடலை போட்டுட்டு இருந்திருக்கார்
======================================
6 நம்ம தலைவர் கிங்கா? கிங்க் மேக்கரா?
சோடா மேக்கரா ஆகாம இருந்தா சரிதான்
==================
7 தலைவரே! உங்களை கிங்க் மேக்கர்னு உங்க சம்சாரம் தான் சொல்லுது
மக்கள் என்ன சொல்றாங்க?
ஜோக்கர்னுதான்
===============
8 தலைவரே! நீங்க மப்ல மேட்டர் உங்க சம்சாரத்துக்கு தெரிஞ்சிடுச்சு போல
எப்டி சொல்றே?
தெளிவு பெற வேண்டிய நேரம் வந்துடுச்சுனு சொல்தே?
==============
9 தலைவரே! மாநாட்டுக்கு வரும்போது ஏன் குடிச்ட்டு வந்திருக்கீங்க?
அப்போதான் எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியும், ஓவர் கூட்டம்னு சந்தோசப்பட்டுக்கலாம்
=============
10 தலைவரே! மாநாட்ல என்ன அறிவிச்சீங்க?
என் மனைவி பேரை எல்லாருக்கும் அறிவிச்சேனே?
=============
11 தலைவரே! உங்க இனிஷியல் ஓவா? ஜீரோவா?கிண்டல் பண்றாங்க?
ஜீரோ ( ஜீர்+ஓ) , ZERO எப்படிச்சொன்னாலும் மேட்ச் ஆகுதே, நோ பிராப்ளம்
================
12 மேடம், பன்னீர் செல்வம் கேரக்டர் சத்ரியன் ல ஆல்ரெடி பண்ணி இருக்காரே? நீங்க திட்றது அவரைன்னு நினைச்சு கோவிச்சுக்க மாட்டாரா?
================
13 எதிர்க்கட்சிகள் வாக்குகள் பிரியும்போது அது ஆளுங்கட்சிக்கே சாதகமாக அமையும், .இதை உணர்ந்து எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டால் நல்லது
==============
14 தலைவரே! நியூஸ் பேப்பர் படிக்க மாட்டீங்களா? அது ஏன்?
யோவ், அதெல்லாம் படிக்கத்தெரிஞ்சா நான் ஏன் அரசியலுக்கு வாரேன்?
==============
15 கிங் ஆக இருக்கணுமா? கிங் மேக்கராக இருக்கணுமா?
தலைவரே! ஆல்ரெடி நடிகர் விக்ரம் கிங் கா இருந்தாரு எடுபடலை, கிங்க் மேக்கரா ட்ரை பண்ணுங்க
==================
16 தலைவரே! திருப்பு முனை மாநாடுனு எப்டி சொல்றீங்க?
முடிவே அறிவிக்காம முடிச்ட்டேனே அது திருப்பு முனை தானே?
=================
17 தலைவரே! மாநாட்டில் ஏன் நைட் 9 மணிக்கே பேச்சை முடிச்ட்டீங்க?
10 மணி ஆகிட்டா டாஸ்மாக் பூட்டிடுவாங்களே?
=================
18 எதுக்காக எல்லாருக்கும் கிங்க் ஃபிஷர் பீர் வாங்கிட்டு வந்திருக்கே?
தலைவர் தான் பூடகமா கிங்க்கா இருக்கனுமா?ன்னு கேட்டுட்டே இருந்தாரே?
==============
19 தலைவரே! நம்ம அடுத்த மாநாட்டை ஊட்டி. கொடைக்கானல், கொல்லிமலை இங்கே எங்கயாவது வெச்சுடுவோம்
ஏன்?
அதான் நிஜமான திருப்பு முனை மாநாடு
==================
20 கமல் க்கும் , கேப்டனுக்கும் என்ன ஒற்றுமை?
கமல் சினிமா ல பேசுவதும் , கேப்டன் மேடைல அரசியல் பேசுவதும் யாருக்கும் புரியாது
========================