1 தலைவரே! நம்ம கட்சி இந்த தேர்தல்ல சிக்சர் அடிக்கும்னு எப்டி சொல்றீங்க?
6% வாக்கு வங்கி இருக்கே? அதை வெச்சுத்தான்
==============
2 இன்ஸ்பெக்டர்! எங்க கட்சிக்கு பாதுகாப்பு வேணும்.
எதுக்கு?
4% வாக்கு வங்கி உள்ள கட்சி. வங்கின்னா பாதுகாப்பு வேணுமில்ல?
================
3 தொப்பை குறையனும்னா உங்க நாக்கை அடக்கனும்.
டாக்டர்! நாக்கைஅடக்கறதும், தாலி கட்ன சம்சாரத்தை அடக்கறதும் இந்த உலகில் யாராலும் முடியாததாச்சே?
===================
4 டாக்டர்! மைனர் ஆபரேசனுக்கும், மேஜர் ஆபரேசனுக்கும் என்ன வித்யாசம்?
மைனர் ஆபரேசன்னா என் பேரன் செய்வான், மேஜர் ஆபரேசனை நான் செய்வேன்
===============
5 யார் விலகினாலும் எங்கள் கட்சிக்கு பாதிப்பு இல்லை, அவ்வளவு ஏன்? எங்கள் கட்சியின் தலைவரே விலகினாலும் எந்த பாதிப்பும் இல்லை
===============
6 எனக்கு மஞ்சள் தான் ராசி, சிகப்பு ஒத்து வராது, அதனால கம்யூனிஸ்ட் கூட கூட்டணி வேணாம்.
ஓஹோ, உங்க உடம்புல ஓடும் ரத்தம் என்ன கலர்?தலைவரே!
==============
7 தலைவரே! குண்டர் தடுப்புச்சட்டத்தை ஏன் எதிர்க்கறீங்க?
நம்ம கட்சில எல்லாப்பயலும் கிடாக்கணக்கா இருக்கானுகளே?
===============
8 தலைவரே! மேடைல பேசும்போது சம்பந்தமே இல்லாம நயன்தாரா, ஹன்சிகானு சினிமா நட்சத்திரங்க பேரை எதுக்கு சொல்றீங்க?
நட்சத்திரப்பேச்சாளர்னு பேர் எடுக்க
================
9 தலைவரே! உங்க பையன் எட்டாம் கிளாஸ்ல ஃபெயில் ஆகிட்டான்
அடடா! அப்புறம்
தோல்விக்கு பொறுப்பேற்று ஸ்கூலை விட்டு விலகிட்டான்
==================
10 தலைவரே! போன தேர்தல்ல ஏன் தோத்தீங்க?
தோல்வின்னு சொல்லிட முடியாது.வெற்றி பெறவில்லைன்னு வேணா சொல்லலாம்
இந்த கெத்து தான் தலைவரே உங்களை வாழ வைக்குது
==================
11 என் சொத்துக்கணக்கு ஒரு திறந்த புத்தகம்.
தலைவரே! அதை ஒரு டைம் படிச்சு முடிக்கவே 2 வருசம் ஆகுமாமே?
===================
12 கச்சத்தீவை மீட்போம்னு எல்லாரும் சொல்லிட்டாங்க
தலைவரே! அதுக்காக கன்னித்தீவை மீட்போம்கறதா?அது தினத்தந்தி படக்கதை தான்
==================
13 படம் பூரா ஹீரோ ஊட்டி, கொடைக்கானல், கொல்லிமலைனு பைக்ல போய்க்கிட்டே இருக்காரே?
ஏகப்பட்ட டர்னிங்க் பாயிண்ட்ஸ் உள்ள படமாச்சே?
=================
14 கேரளா ஸ்பெஷல் முந்திரி ஒரு கிலோ 400 ரூபா
கொஞ்சம் குறைச்சுச்சொல்லுங்க
சரி, அரை கிலோ 200 ரூபா மேடம்
ரொம்ப தேங்க்ஸ்ங்க. அரை கிலோ குடு
==================
15 தலைவரே! குற்றப்பத்திரிக்கை வந்திருக்கு, சைன் பண்ணுங்க
வ்ழக்கமா பேப்பர், பத்திரிக்கைன்னா வீசிட்டுப்போய்டுவாங்க இல்ல, எதுக்கு சைன் பண்ணனும்?
================
16 ஜட்ஜ் = 211 கோடி ஊழல் செஞ்சீங்களா?
கைதி= எனக்கு கணக்கு வழக்கு எல்லாம் தெரியாதுங்களே எஜமான்
=================
17 தலைவரே! இத்தனை ஊழல் செஞ்சும் இத்தனை வருசமா எப்படி அரசியல்ல ஃபீல்டு அவுட் ஆகாம இருக்கீங்க?உங்க நினைவாற்றலாலா?
மக்களோட ஞாபகமறதியால
===============
18 எதிர்க்கட்சித்தலைவரை திட்டிப்பேச 40 கெட்ட வார்த்தை ரெடி பண்ணிட்டேன்
வெரிகுட். இன்னா நாற்பது, அதன் மூலம் உனக்கு இன்னோவா 40, டேக் இட்
==================
19 மீசை வெச்ச சாக்ரடீசே!ன்னு எதுக்கு தலைவரே அவரைப்புகழ்றீங்க?
இன்னைக்கு பார்ட்டில அவருக்கு விஷம் வெச்சு கொல்லப்போறோம்
==============
20 தலைவரே! பொதுத்தேர்தல் நடத்த 4000 கோடி செலவாகுமாம்
அடேங்கப்பா, அந்த காண்ட்ராக்ட் நமக்குக்கிடைச்ச்சா 2000 கோடி சுருட்டலாம்
======================