Friday, March 04, 2016

போக்கிரி ராஜா - சினிமா விமர்சனம்

ஹீரோயின் கேத்ரீன் தெரசா வடிவில் இருக்கும் அன்னை தெரேசா. புரியலையா? ரம்பா மாதிரி டவுசர் மட்டும் போட்டிருக்கும் கிளாமர் கலகல் பார்ட்டி ஆனா சமூக சேவகி.

ஹீரோ ஒரு விநோதமான நோயால் பாதிக்கப்பட்டவர். அதாவது இவர் தேவகவுடா மாதிரி கொட்டாவி விடுவார்.அந்த பாதிப்பில் ஆஃபீசில் இருக்கும் எல்லாரும் கொட்டாவி விட்டு தூங்கிடுவாங்க . இவருக்கு வேலை போய்டும். இப்டியே அடிக்கடி ஆஃபீஸ் மாத்திட்டு இருக்காரு நாஞ்சில் சம்பத் மாதிரி 


சமூக சேவகியான ஹீரோயின் வேலை இன்னான்னா  ரோட்டோரமா நெ 1 போகும் ஆட்கள் மேல லாரி பைப் தண்ணியை அடிச்சு துரத்தும் வேலை. வில்லனை ஒரு டைம்  ஹீரோ ஹீரோயினுக்காக அப்டி  தண்ணி அடிக்கறார், வில்லன் செம காண்ட் ஆகிடறார்.


வில்லன் ஹீரோவை பழி வாங்க சரியான சந்தர்ப்பத்துக்கு காத்திருக்கார்’
 இந்த எண்ணம்  நிறைவேறுச்சா?  ஹீரோ  ஹீரோயின் சேர்ந்தாங்களா?  என்பதை வெண் திரையில் காண்க


ஹீரோவா  ஜீவா. இவர் கற்றது தமிழ் போல்  கோ போல் பிரமாதமான படங்களில் கலக்கி விட்டு இது போல் மாமூல் மசாலா சாதா கதையில் நடிப்பது  ஏனோ? வேஸ்ட்

 ஹீரோயினா நம்ம ஹன்சிகா. துக்ளியூண்டு  ட்ராயருடன் வருவது செம கிளு கிளு. அவருக்கே தெரியாமல் டபுள் மீனிங்கில் பேசுவது புரிந்தவர்களுக்கு கிளு கிளு  ( தமிழ் தெரியாத ஹீரோயின்னா  டைரக்டர்களுக்கு இது ஒரு சவுகர்யம் எதுனா வசனம்  ஏ வா எழுதி பேச வெச்சுடலாம்)


பாட்டு  சீனில் செம கிளாமர். வாழ்க கவர்ச்சி வளர்க


 வில்லனா சிபி ராஜ் ம் சத்ய ராஜ் மாதிரி மேனரிசம் செய்ய வசனம் பேசத்தான் சத்யராஜே இருக்காரே பாஸ். நீங்க எதுக்கு? புதுசா ட்ரை பண்ணுங்க . ஃபிகரை ட்ரை பண்ணும்போது எல்லாரும் புதுசு வேணும்னு ட்ரை பண்றாங்க ஆனா படைப்பில்  நடிப்பில் அடுத்தவங்களை  ஃபாலோ பண்ணுவது  ஏனோ?


இண்ட்ட்ர்வெல்  பிளாக்கில்  வில்லன் ஆடும் ஆட்டம்  சகிக்கல செம செயற்கை

பன்னி மூஞ்சி வாயன்  ஹீரோ ஃபிரண்டா வர்றார்  செம காமெடி  அவர் பாடி லேங்குவேஜ்  கலக்கல்.டயலாக் டெலிவரியும்  செம 


நல்ல காமெடியன் ஆக வாய்ப்பு இருக்கு


 இமான்  இசையில் 3 பாட்டு ஹிட்  பின்னணி இசையும்  ஓக்கே ரகம்


 ஒளிப்பதிவு  எடிட்டிங் எல்லாம்  நார்மல்  ஓக்கே ரகம்



மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1  பீஸ் எப்டி?

தண்ணி ஊத்தாத பால் மாதிரி பள பள னு # ஹன் சிகா இன்ட்ரோ

2 அதிகமா தம் அடிக்கறவங்க நாக்கு ருசி போய்டும்

எப்டி சொல்றே?
இவ்ளவ் கேவலமான டீயை இப்டி சப்பி சப்பி குடிக்கறானே?,# போ ரா


3 SHE WILL SING WELL
அப்டின்னா?
கிணத்துக்குள்ளே இருந்தே நல்லா பாடுவா.# போ ரா


4 நீ தப்பானவன்.அதனாலதான் தப்பான ஆளுங்களோட இருக்க # போ ரா

5 என்னடி?தண்ணி அடிச்சிருக்கியா?
ம்ம்
சிக்ஸ்ட்டி சிக்ஸ் னு சரியா சொல்லு பார்ப்போம்.அப்போதான் ஓவர் மப்பில்லைனு ஒத்துக்குவேன்.# போ ரா


6 உன்னை உன்னை என்ன பண்ணலாம்?
என்ன வேணா பண்ணிக்கோடா # போ ரா


7 நீ ஒரு செகண்ட் ஹேன்ட்னு உண்மையை ஒத்துக்கிட்டேயேடா.ஐ லைக் இட் # போ ரா


8 உன் கை என் இடுப்பை பிடிச்சிருக்கு.ஏன் ?
ஏன்னா உன்னை ப்பிடிச்சிருக்க்க்க்க்கு #,போ ரா



9  மிஸ் நர்ஸ், உங்க மிடி காத்துல  தூக்குனப்போ எல்லாரும் தான் பார்த்தாங்க. எதுக்கு என்னை மட்டும் பளார்? # போ ரா


10  என் ஹேர் ஸ்டைல் எப்டிடா இருக்கு?

 சுருளி’’

 டேய் இது கர்லிங் # போ ரா


11 டேய் இங்கே  வா

 ம்

 ஜாக்கெட் பேக் ஹூக் போட்டு விடு



 நீ என்ன எதிர்பார்க்கறேன்னு எனக்கு தெரியும், கண்ணை மூடிட்டு போடு # போ ரா


12  அன்பால தான் தமிழனை அடிமை ஆக்க முடியும்னு நல்லா தெரிஞ்சு வெச்சிருக்கீங்க மகாராணி ! # போ ரா


13  ஊர்ல இருக்கறவன் பேச்சை எல்லாம் கேட்பாளுக, ஆனா லவ்வர் சொல்றதை மட்டும் கேட்க மாட்டாளுக # போ ரா  கலக்கல் வசனம்


14  இங்கே யார்டா வாய்  கொப்புளிச்சது?

 அண்ணே அது பேய் கொப்பிளிக்குதுண்ணே # போ ரா



15  யாருடி இவரு?  சால்ட் & பெப்பர்  லுக்ல? லூஸ் மாதிரி  சிரிக்கறாரு?

 என் அப்பா தான்

 ஓ சாரி # போ ரா  ரெஃப்ரன்ஸ்



 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  போக்கிரி ராஜா 141 நிமிடம் @ திருவனந்தபுரம் தேவிப்ரியா 11 15 am show

2 டைட்டில்ல ஜீவா ன்னு போடாம ஜூவா ன்னு போடறாங்க.தமிழா! இது சரியான தமிழா?


3 ஓப்பனிங் சீன் ல ஹீரோ கொட்டாவி விடறாரு.சுத்தம்

4 அத்து விட்டா அத்து விட்டா அப்படியே அத்து விட்டா.செம டப்பாங்குத்து சாங்.ஆனால் பாடல் படம் ஆக்கப்பட்ட.விதம் சுமார்தான்


5 பாடகர் பாடலைப்பாடும் முன் ஹீரோ யார் அவர் குரல் எப்டீ இருக்குனு பார்த்துட்டு பாடனும்


6 ஹன்சிகா ஜீவா வுக்கு ஒரே பாட்டு சீன்ல 18 கிஸ் குடுத்திருக்கு. ஏன்னா இது வயது வந்தவருக்கான படம்னு சிம்பாலிக்காம் அடங்கோ $ பூவை நீ குத்தாதே போ


7 ஹன்சிகா பேக் யு நெக் ஜாக் போட்டிருக்கு, நானும்  அரை மணி நேரமா  ஜாக் கலர் தேடறேன் துணியையே காணோம் முதுகுதான் 70 mm போல் ஃபுல்லா தெரியுது

8  துப்பாக்கி  வாங்குனீங்க சரி குறி யாரு பார்ப்பா? குருவிக்காரனா? ரெஃப்ரன்ஸ்  போ ரா



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

 1 மனோபாலா காமெடி காட்சிகள்  சிரிக்க வைக்குது. ப மூ வாயன் காட்சிகளும்


2  ஹன்சிகா கிளாமரில் 3  சாங்க்  ஓக்கே ரகம்

3  வில்லனின்  அடியாட்கள்  வில்லன் உத்தரவுப்படி வசீகரா பாட்டுக்கு ஆடும் டான்ஸ் கலக்கல்




இயக்குநரிடம்  சில கேள்விகள்

1   ஹை கிளாஸ் ஆளான வில்லன் காரில் போறவர் வருபவர் நடு ரோட்டில்  லோ கிளாஸ் ஆள் போல்  சந்துப்பக்கம் ஒதுங்குவாரா? அவர் ரேஞ்சுக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல தானே போவார்?


2  ஹீரோவின்  கொட்டாவி மேட்டர் டேஞ்சர்னு தெரிஞ்சும் டாக்டர் ஏன் அசால்ட்டா  அவரை அனுப்பிடறார்?


3   ஹீரோவுக்கும்  வில்லனுக்கும் பகைமை ஏற்படக்காரணம் பலமானதா எதுவும்  கிடைக்கலையா? செம மொக்கை பாஸ்



4  வில்லனை கோமாளித்தனமா   பேக்கு போல் காட்டிட்டா  எப்டி ஆடியன்சுக்கு ஒரு பர பரப்பு எதிர்பார்ப்பு ஏற்படும்?


5  ஃபிளாஸ்பேக் சீன்ல அந்தக்கால ஆங்கிலேயர் கதை ஏழாம் அறிவு போதி தர்மன் கதை போல் சாயலில். அதுவும் கிராஃபிக்சில் பொம்மைப்படம் போல் ஏன் காட்டனும்? மனசில் பதியலை

6  ஒரு ஐ டி கம்பெனி ல எல்லாரும் நீட்டா யூனிஃபார்ம்ல ஃபார்மல் ட்ரெஸ்ல வரும்போது  ஹீரோ  ஹீரோயின்மட்டும் சர்ட் பட்ட்ட்னை கழட்டி விட்ட்டு வருவது ஏன்?  யாரு ம்  ஜெர்க் ஆகாதீங்க ,மேல் சர்ட்டைல மேல் பட்டன் மட்டும்

7  இது காமெடிப்படமா? மொக்கைப்படமா? லவ் சப்ஜெக்டா?ன்னு ஒரு முடிவுக்கு வர்றதுக்குள் படம் முடியுது





சி  பி  கமெண்ட் - போக்கிரிராஜா - ஹன்சிகா கிளாமர் /மொக்கை காமெடி வசனங்கள் பி, சி செண்ட்டரில் ஓடும் மீடியமான காமெடி மசாலாப்படம், விகடன் =40 , ரேட்டிங் -2.5 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 40



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) - ஓக்கே







 ரேட்டிங்  2.5 / 5


 திருவனந்த புரம் தேவிப்ரியா தியேட்டர்ல் படம் பார்த்தேன் ஜனங்க படத்தை நல்லா சிரிச்சு தான் ரசிக்கறாங்க, ஃபேமிலி ஆடியன்ஸ்  அதிகம்\\