1 டீக்கடை மாஸ்டருக்கு உடம்பு சரி இல்லையாம்
அதுக்கென்ன இப்போ?
லைட் டீ மட்டும் தான் போட்டுத்தருவாராம், ஸ்ட்ராங்க் டீ முடியாதாம்
=================
2 மேடம், என்ன இது? குனிஞ்சு உக்காருன்னு படத்துக்கு டைட்டில் வெச்சிருக்கீங்க?
நிமிர்ந்து நில்-னு ஆல்ரெடி வெச்ட்டாங்களே?
=============
3 டியர்! உங்க சொந்த ஊர் எது?
HOSURE
அங்கே என்னைக்கூட்டிட்டுப்போவீங்களா?
OH,SURE
==============
4 ஜட்ஜ் = எதுக்காக தலைவரை மேடைல இருந்து தள்ளி விட்டீங்க?
கைதி= என்னை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாதுன்னாரு
===============
5 கல்யாணியை என்னால மறக்கவே முடியலை
விடு கழுதையை,வேற ஃபிகரா இல்ல?
கல்யாணி பீர் பற்றி சொல்றேன், கிடைக்கவே மாட்டேங்குது
===============
6 ஊட்டிலயா இருக்கே? பயங்கரமா குளிர் அடிக்குமே எப்டி சமாளிப்பே?
என்ன பண்ண? பொண்டாட்டி அடிச்சாலும், குளிர்அடிச்சாலும் திருப்பி அடிக்கவாமுடியும்?
============
7 இந்த 4 மாத்திரையையும் சுடு தண்ணில சாப்பிடுங்க,
டாக்டர், எனக்கு வந்திருப்பது ஒற்றைத்தலைவலிதானே? ஒரு மாத்திரை சாப்பிட்டா போதாதா?
==============
8 தலைவர் எதுக்காக வீட்டுக்கு வீடு ஒரு ட்யூப்லைட் தர்றாரு?
சுத்த ட்யூப் லைட்டுடா நீ. அவர் எல்லாருக்கும் பல்பு தர்றாரு
===============
9 போன தை யிலேயே எனக்கு மேரேஜ் ஆகிஇருக்கவேண்டியது, மிஸ் ஆகிடுச்சு,
போனதையே நினைச்சு கவலைப்பட்டுட்டு இருக்காத,ஒரு பொண்ணு மிசஸ் ஆகி”டும் டும்”
==============
10 மேடம், ரயில்ல உங்க பக்கம் குழந்தையை படுக்க வைக்காம எதிர் சீட்ல ஏன் படுக்க வெச்ட்டீங்க?
DRதான் குழந்தையை இப்போதைக்கு தள்ளிப்போடுங்கன்னாரு
================
11 நாங்க ஜெயிச்சா சினிமா தியேட்டர் ஷோ டைம் எல்லாம் மாத்துவோம்
எதுக்கு தலைவரே?
ஆட்சி மாறியது, ஆனா காட்சி மாறலைன்னு சொல்லிடக்கூடாதில்ல?
=================
12 உங்களுக்கு தண்ணில கண்டம் இ!ருக்கு தலைவரே!
அய்யய்யோ, அப்போ சரக்கு அடிக்க முடியாதா?
=================
13 ஜட்ஜ் = இந்த வழக்கை சிங்கப்பூர்க்கு மாத்தனுமா? ஏன்?
கைதி= நான் எப்போதான் சிங்கப்பூர் பார்க்கறது?
================
14 என் சம்சாரம் பயங்கரக்கோபக்காரி
எப்டி சொல்றே?
குக்கர் விசில் அடிச்சாக்கூட செருப்பைக்கழட்டிடுவா
=================
15 டிராஃபிக் போலீஸ் = ஆர் சி புக் எங்கே?
சாரி சார், புக் வாங்கற பழக்கம் எல்லாம் இல்லை, லைப்ரரி போய்டுவேன்
================
16 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்களைக்கவர மலிவு விடை மதுக்கடை , பெண்களைக்கவர மலிவு விலை நகைக்கடை திறப்போம்
=================
17 டியர், என் தங்கச்சியை டெடி பியர் பொம்மைன்னு வர்ணிச்சீங்களாமே?
அது வந்து.. ம்ம். நாம பேசிட்டு இருக்கும்போது சிவபூஜைல கரடி போல் வந்துடறாளே?
===============
18 தலைவரே! நீங்க தான் எங்க தெய்வம்
எப்டி?
கஞ்சிக்கே வழி இல்லாம இருந்தாலும் கட்டிங்க்கு வழி பண்ணித்தர்றீங்களே?
=================
19 குருவே! வாழ்க்கை பற்றி உங்க கருத்து என்ன?
அம்பிகா -சிவாஜி நடிச்ச சோகப்படம்னாலும் அதுல சில்க் கிக் பாட்டு 1 இருக்கு
=================
20 தலைமுறை இடைவெளி என்பது 72 நாட்கள்தானா? எப்டி?
அக்டோபர் 31 ஆரம்பம் ரிலீஸ், அடுத்த ஜனவரி 10 வீரம் ரிலீஸ்.இடைப்பட்ட கேப் 72 நாள் தானே?
=================