Friday, January 01, 2016

மாலை நேரத்து மயக்கம் - சினிமா விமர்சனம்

பெரிய பெரிய அரசியல் தலைவர்கள்  எல்லாம்  தான் சம்பாதிக்கும் எல்லா சொத்தையும் அவங்க பேர்ல எழுதி வெச்சுக்க மாட்டாங்க . பினாமி பேர்ல , தன் முத சம்சாரம், 2, 3  , அப்புறம் மகன் க , மகள் , மச்சினி  இப்டி  எல்லார் பேர்லயும் சொத்து வாங்கி வெச்சுக்குவாங்க , எல்லாம் ஒரு சேஃப்டிக்கு.



அது போலத்தான் ஆல்ரெடி 2ம் உலகம்னு மொக்கை படம்  கொடுத்த செல்வராகவன் தன் மார்க்கெட்  வேல்யூ டவுன் ஆனதால  தன் மனைவியை பினாமியா போட்டு இயக்கிய படம் தான் இது . ஆனா டைட்டில்ல கதை திரைக்கதை வசனம்  எல்லாம் இவர் தான்னு வருது . இயக்கம் மட்டும் மிசஸ் செல்வராகவன் -னு வருது . நம்பறவங்க நம்பலாம்.


சரி , கதை  என்னான்னு பார்ப்போம். அழகியல் திரைக்கதையால்  மிக கண்ணியமாக  செதுக்கப்பட்ட மணி ரத்னத்தின்  மவுன ராகம் படத்தையே ஷங்கரின் உதவியாளர் அட்லி  ராஜா ராணி-ன்னு உல்டா பண்ணி  ஹிட் அடிச்சார் இல்லையா? அதையே இன்னும் தர லோக்கலா இறங்கி  இண்டீசண்ட்டா எடுத்தா அதுதான்  மா  நே ம


ஹீரோ ஒரு அப்பாவிப்பையன் .இதுவரை யாரையுமே  லவ் பண்ணதவன். ஹீரோயின் ஒரு மாடர்ன் அடங்காப்பிடாரிப்பொண்ணு. ஒரு மொள்ளமாரியை லவ்வுது.அவன் மேட்டர்க்கு கூப்பிடறான். முடியாதுன்னதும் டக்னு கழட்டி விட்றான்.


 ஹீரோயின்  வீட்ல  மாப்ளை  பார்க்கறாங்க. ஹீரோ கூட மேரேஜ்  ஃபிக்ஸ் ஆகுது. ஹீரோயினுக்குப்பிடிக்காம அம்மாவுக்காக சம்மதிக்குது. ஒரு வருசம் ஆகியும்  தம்பதிக்குள் எதுவுமே நடக்கலை . ஐ மீன் பெட்ரூம் ல 2 பேரும் ஒண்ணா படுக்கலை.ஏன்னா  ஹீரோயினுக்கு காதலனை மறக்க முடியாம எல்லாம் இல்லை. மாடர்ன்  பொண்ணுங்க தான் டக் டக்னு காதலனை மறந்துடுவாங்களே? ஹீரோ படு சுமாரு மூஞ்சி குமாரா இருக்காரு. டைஜஸ்ட் பண்ணிக்க  முடியல .

 பொறுத்துப்பொறுத்துப்பார்த்த  ஹீரோ பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரான்னு சரக்கு அடிச்சு  சொந்த சம்சாரத்தையே கதறக்கதற ( நன்றி - தினத்தந்தி , மாலை மலர் , விருந்து ,சரோஜாதேவி , திரைச்சித்ரா)  ரேப்பிடறார்.

இடைவேளை. எப்டி  டைரக்சன் டச்?





உலகத்துல யாருமே  பண்ணாத ஒரு காரியத்தை  தன் புருசன் பண்ணிட்டானேங்கற  கோபத்துல  ஹீரோயின்  ஹீரோவை டைவர்ஸ் பண்ணிடுது.

இப்போ பர பரப்பான கிளுகிளுப்பான  க்ளைமாக்ஸ் . அதாவது  ஹீரோயின்  தன் முன்னாள்   காதலனை  லாட்ஜுக்குப்போலாம் வான்னு  கூப்பிடுது ./ என்னமோ  ராமேஸ்வரம் , திருச்செந்தூர் மாதிர் புண்ணியஸ்தலம் போற மாதிரி 2 பேரும் லாட்ஜ் போறாங்க .

 ஹீரோ அவர்  ஃபேஸ் புக்  ஃபிரண்டை கூட்டிட்டு அதே  லாட்ஜுக்கு  புனித நோக்கத்தோட  வர்றாரு.


 வில்லன்  ஹீரோயினை முடிச்சாரா? ஹீரோ அதை தடுத்தாட்கொண்டாரா? என்பது  தான் க்ளைமாக்ஸ் .


ஹீரோவா புதுமுகம் பாலகிருஷ்ணா . அப்டியே  செல்வராகவன் பிராண்ட் மார்க்  ஹீரோ . தாடி , கழுவாத  மூஞ்சி  இந்த 2 ம்  கேவலமான  குரலும்  இருந்தா போதும்  செல்வராகவன் படத்துக்கு நாயகன்  ரெடி . இதுல யும் வழக்கம் போல . ஹீரோ நண்பர்களுடன்  சேர்ந்து  தண்ணி அடிக்கறார் .  மனைவியை அடிக்கறார், சோகப்பாட்டு பாடறார். ஆனா மனதில் ஒட்டவில்லை .


 ஹீரோயின்  புதுமுகம் வாமிகா. என்ன பேரு இது ? வாமிட்னு சி செண்ட்டர் ஆடியன்ஸ் நக்கல் அடிக்கப்போறாங்க . ஆனா  ஹீரோயின் பொட்டு வைக்காத வட்ட நிலாவா அழகாத்தான்  இருக்கு . ஆனா கதைப்படி  ஹீரோயின் கேரக்டர் அடங்காப்பிடாரி, சிம்ம ராசி  என்பது போல் காட்சிகள் வருவதால் அவர் மேல் எந்த  சீனிலும்  பரிதாபம் வரவில்லை . லொள்ளு பண்ணே இல்ல , அனுபவி என்று தான் தோணுது. இது திரைக்கதையின் மைனஸ்


 வில்லன் சரியான மஞ்ச மாக்கான். சரக்கடிக்கற பொண்ணுக்கு சரக்கில் எதுனா கலந்து  கொடுத்து  ரேப்பாம  ப்ரப்போசல் ரேப் பண்ண டேட்டிங் கேட்டுட்டு இருக்கான் . தேறாது . படமும், வில்லனும்



படத்துக்கு பின்னணி  இசை , ஒளிப்பதிவு  எல்லாம்  சராசரி  ரகம் . குறை சொல்ல  முடியாத  தரம் .. ஆனால்  காட்சி அமைப்புகளில் தான்  ஒரு கண்ணியம் இல்லாமல்  சும்மா சி செண்ட்டர் ஆடியன்சிடம்  கை தட்டல்  வாங்குவதற்காக தர \லோக்கலா இருக்கு





மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1. ஏன் என் பின்னால சுத்தறான்?அப்டி என் கிட்டே என்னதான் இருக்கு?

சிில ஆம்பளைங்க அப்டித்தான் .முழுசாப்பார்க்கும் வரை பின்னாலயே சுத்துவாங்க

2. என் கிட்டே இல்லாதது அவ கிட்டே என்ன இருக்கு?
கிஸ் கூட இல்ல?
நீ தான் எதுக்கும் ஒத்துக்கமாட்டேங்கற

3. இந்தக்காலத்துப்பசங்களுக்கு காதல்னா என்னன்னே தெரியாது

4. கல்யாணமான புது சம்சாரம்.எப்டிடா அப்ரோச் பண்றது?


டின்னருக்கு போலாமா?ன்னு நாசூக்கா கேளு

5. புருசன்.=,அவன் யாரு?


புது சம்சாரம் =,என்னோட முத பாய் பிரண்ட்
ஆ!


6. எல்லாரும் சாப்ட்டுட்டு மிச்சம் வெச்சதை சாப்பிட நான் ஒண்ணும் முட்டாள் இல்ல

7. எப்போ ஒருத்தன் கூட COMFORTABLE ஆக FEEL பண்றாளோ அப்போ தான் அவன் கூட எல்லாம் னு ஒரு கொள்கை வெச்சிருக்கா

8. வெட்டிங் அனிவர்சரி என்பது பர்சனல்.பிரன்ட்சை எல்லாம் இன்வைட் பண்ணக்கூடாது.சம்சாரம் கூட தனியா இருக்கனும்

9. டைவர்ஸ் பண்ற அளவு உன் புருசன் என்னடி.செஞ்சான்?
ரேப் பண்ணிட்டான் யாரை?
என்னைத்தான்#MNM

10. ஒரு பையனை மேய்க்கறதுக்கு கரெக்டா ஒரு பொண்ணு அமையும்.அமையனும்.அதான் கல்யாண.வாழ்க்கை




 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

1. தியேட்டரில் இன்று 3 படம் பார்த்து களப்பணி ஆற்றஇருப்பதால் வாழ்த்துச்சொன்ன,சொல்லப்போகும் ஆண்களுக்கு நாளை நன்றி நவிலப்படும்,லேடிசுக்கு அப்பப்ப

2. தமிழ் சினிமாவிற்குக்கிடைத்த இளமை ததும்பும் இன்னும் ஒரு மணிரத்னம் இயக்குநர் செல்வராகவன் ன் மாலைநேரத்து மயக்கம் @ ஈரோடு அபிராமி 70MM AC DTS

3. பல வெற்றிகள் கொடுத்திருந்தாலும் சமீபத்திய தோல்வி தான் மக்கள் கண்ணுக்குத்தெரியும் # உதா = செல்வராகவன் படத்துக்கு கூட்டம் இல்ல.20% தான்

4. மாலை.நேரத்து மயக்கம்.=123 நிமிடம். 2 மணி நேரம் தானா? அடடா

5. ஹீரோயின் பேரு வாமிகா வாம். வாய்ல யே நுழைய மாட்டேங்குது #,மாநேம

6. ஒரு பேச்சுக்கு மணிரத்னம் மாதிரி னு சொன்னேன்.படக்கதை யும் மவுனராகம் உல்டா போல

7. சம்சாரம் புருசன் கூட சேர்ந்து சரக்கடிக்குது.புதுமைப்பெண் போல

8. ஹீரோயின் அழகா இருக்கு ,பெண் இயக்குநர் என்பதால் மட்டும் ஒரு படத்துக்குப்போக முடிவெடுக்காதீர்

9. கவுதம் மேனன் க்கு டப் காம்ப்பட்டிசன்.நடுநிசி நாய்கள்.படத்தில் வருவது போல் ஒரு ரேப் சீன்.புருசனே சொந்த சம்சாரத்தை .முடியல

10. மவுனராகம் படத்தின் மாடர்ன் இன்டீசன்ட் வெர்சன் தான் மாலை நேரத்து மயக்கம்.பெண்கள் குடும்பத்துடன் போவதை தவிர்க்கவும் .18+


11 டியர்.நீங்க எடுத்த படத்துக்கு டைட்டில்ல எதுக்கு என் பேரு?


எத்தனை டைம் தான் நான் திட்டு வாங்கறது?

12 சோகக்காட்சி என்றால் சரக்கடிக்கும் காட்சியைத்தான் காட்டனும் என்பது சைக்கோக்களின் பழக்கம் போல







இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  போஸ்டர்ல யும் , பிரஸ் மீட்லயும் இது  என் மனைவி இயக்கிய படம் தான்னு நம்ப வெச்சது


2   ஹீரோயின்  செலக்சன்  குட் .


3  தமிழ் சினிமா வரலாற்றிலேயே  முதல்  முறையாக  ரேப்  சீனை  டீட்டெய்லாக  காட்டியது 




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1 . புருசன்  பொண்டாட்டியை  ரேப் பண்றது தான் இடைவேளை ட்விஸ்ட். சரி . எனக்கு ஒரு டவுட் . யாரோ ஒரு அறிமுகம் இல்லாதவன்  ரேப்பினா  ஓக்கே. புருசன்  எதுக்கு ரேப்பனும் ? தினமும் மனைவி குடிக்கும் காபி, டீ ல எதுனா கலந்து  கொடுத்து மயக்கம் அடைய  வெச்சு   மென்மையா  ரேப்பி இருக்கலாமே?


2  எந்தப்பொண்ணாவது  தன் அம்மாவுக்கு  ஃபோன் பண்ணி  நான்  என் முன்னாள்  காதலன் கூட லாட்ஜுக்கு  யோகாசனம் செய்யப்போறேன்னு சொல்லுமா? என்னதான்  மாடர்ன்  ஃபிகரா இருக்கட்டும்


3  பொண்ணுக்கு  மேரேஜ் ஆகி அடுத்த நாளே  பொண்ணோட  தோற்றத்தை வெச்சு நடவடிக்கையை வெச்சு மேற்படி சாந்தி முகூர்த்த  மேட்டர் நடந்துச்சா? இல்லையா?ன்னு பொண்ணோட அம்மா கண்டு பிடிச்சுடும் . ஆனா ஒரு வருசம் வரை  மேட்டரே நடக்கலைங்கற மேட்டர்  யாருக்குமே  தெரியல . இது  இடிக்குதே ?

4 க்ளைமாக்ஸ் ல  வில்லன் ஹீரோயினை  கார்ல  லாட்ஜுக்குக்கூட்டிட்டுப்போறான், வழில பெட்ரோல் பேங்க் ல பெட்ரோல் போடும்போது லூஸ்  மாதிரி ஹீரோயின் கிட்டே  மேட்டர்க்கு  ஓக்கே  தானே?ன்னு  நடு  ரோட்ல  ஏன் கேட்கறான் ? கூப்ட்டதே  ஹீரோயின் தானே? அப்டியே  டவுட்னாலும்  காருக்குள்ளேயே வெச்சுக்கேட்டிருக்கலாமே /


5 ஃபேஸ் புக்  காதலி  தில்வாலே  துல்ஹனியா லே ஜாயேங்கே  போல் ஒருன் லவ்  வேணும், அதான் இவர்  கூட டேட்டிங்  வந்தேன் -குது. இதுக்கு முன்னால ஷாருக்கானை பார்த்திருக்கா? இல்லை  ஹீரோ  முகத்தை  ஃபேஸ்புக்ல  டி பி ல  நேர்ல பார்க்கலையா?


6  ஹீரோயின்  தற்கொலை  முயற்சி  சீன்  ஓவர் அலப்பறை.

7  புலி - புள்ளி மான்  ஃபோட்டோவை நாசூக்கா காட்னா  தமிழன் அது ரேப் சீன் தான்னு புரிஞ்சுக்க மாட்டானா? அவ்ளோவ்  டீட்டெய்லாக்காட்டனுமா?





சி  பி  கமெண்ட் =11. மாலை நேரத்து மயக்கம் - திமிர் பிடித்த அடங்காப்பிடாரிப்பெண்ணின் மொக்கை காதல் கதை -,விகடன்=39 ,ரேட்டிங் = 2 / 5 . குடும்பப்பெண்கள் தவிர்க்க்



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 39



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = சுமார்



 ரேட்டிங் = 2 / 5


ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன் 78 பேர் ஆடியன்ஸ். விளங்கிடும்