Saturday, December 12, 2015

நான் எனது வீட்டின் படுக்கையறையிலும், பாத்ரூமிலும் என்ன வேண்டுமானாலும் செய்வேன். சிம்பு ஆவேசம்

'பீப்' பாடல் சர்ச்சை விவகாரம் தொடர்பாக யாருடைய கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது என்று சிம்பு காட்டமாக தெரிவித்து, அதற்கான விளக்கத்தையும் கூறியிருக்கிறார்.


சில நாட்களுக்கு முன்பு 'பீப் சாங்' என்ற பெயரில் அனிருத் இசையில் சிம்பு பாடிய பாடல் ஒன்று இணையத்தில் வெளியானது. ஆனால், அப்பாடல் அதிகாரப்பூர்வமானது இல்லை என்று கருத்துக்கள் நிலவின.


அப்பாடலில் உள்ள வரிகள் பல கொச்சையாக இருந்ததால், சில இளைஞர்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் பெண்ணியவாதிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள்.


ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிம்பு, அனிருத் மீதான கழுவியூற்றல் படலம் நீடித்து வருகிறது.


இதனால் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் சிம்பு. பலரும் அப்பாடல் சிம்பு எழுதியது தானா, அவருடைய குரல் தானா என்று கேள்வி எழுப்பினார்கள்.


இது குறித்து சிம்புவிடம் கேட்டபோது, "'பீப் பாடல்' வெளியானது பற்றி பலரும் என்னிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அப்பாடலை முதலில் நான் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. நானும் அனிருத்தும் இணைந்து பல்வேறு தளங்களில் சுமார் 150 பாடல்களை தயார் செய்து வைத்திருக்கிறோம். அதில் இருந்து ஒரு பாடலை திருடி வெளியிட்டு இருக்கிறார்கள்.


முதலில் அப்பாடல் ஏதாவது ஒரு படத்திலோ, ஆல்பத்திலோ இடம்பெறவில்லை. அது இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அப்பாடல் குறித்து ஒரு சிலர் நன்றாக இருக்கிறது என்றும், பலரும் அதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


நான் ஒரு கேள்வி கேட்கிறேன்... அதே இணையத்தில் தானே போர்ன் (ஆபாச வீடியோ) வீடியோக்களும் இருக்கிறது. தேவை என்றால் தானே போய் பார்க்கிறீர்கள். அதேபோல் தான் பாடல் பிடிக்கவில்லை என்றால் கேட்காதீர்கள்.


நான் எனது வீட்டின் படுக்கையறையிலும், பாத்ரூமிலும் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதை எட்டிப் பார்க்கும் அதிகாரம் நான் யாருக்கும் அளிக்கவில்லை. என்னைக் கேள்வி கேட்பவர்கள் வீடுகளில் நான் கேமராவை வைத்து அவர்கள் பண்ணும் விஷயங்களைப் பார்த்து "நீங்கள் ஏன் இப்படி எல்லாம் பண்ணுகிறீர்கள்" என்று கேட்டால் என்னவாகும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


சில வருடங்களுக்கு முன்பு அன்பை பரிமாறுங்கள் என்று ஒரு பாடல் வெளியிட்டேன். அப்போது எனக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் எல்லாம் எங்கே இருந்தார்கள். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்களா? யாருடைய கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது. அதேபோல், என்னுடைய பணியைப் பற்றி குறை சொல்பவர்கள் யாருக்கும் நான் பதில் வேண்டிய அவசியமில்லை" என்று காட்டமாக தெரிவித்தார்.


-tதஹிந்து

  • Gnanaguru  India
    இது போல் திமிராகப் பேசிய எத்தனையோ பேர் அட்ரஸ் இல்லாமல் போய் இருக்கிறார் கள். ரசிகர்கள் தாங்கிப் பிடிக்கும் வரை தான் நீங்கள் நடிகராக நீடிக்க முடியும். அவர்களை உரசிப் பார்க்க முயற்சிக் காதீர்கள்.
    250
    29 minutes ago
     (0) ·  (0)
     
    • VK
      Vinoth Kumar  United Arab Emirates
      துளியும் சமுக அக்கறை இல்லாமல் பாடி விட்டு.வீட்டில் கேமரா வைக்கவா என்று கேட்கிறார். இந்த மனிதரிடம் இருந்து என்ன சமுக அக்கறையை எதிர் பார்க்க முடியும்..
      29 minutes ago
       (0) ·  (0)
       
      • T
        Tharani  India
        பெண்களை வெறும் சதைப்பிண்டமாய் மட்டுமே பார்க்கும் மனப்பான்மை கொண்ட சாக்கடை மனிதர்களின் மனசாட்சிதான் சிம்பு மற்றும் அனிருத், இந்த பாடலை கேட்கவே காது கூசுகிறது. சமூக பொறுப்பில்லாத இந்த மாதிரியான நடிகர்களை கண்டிக்க வேண்டியது மிகவும் அவசியம் இல்லையென்றால் நாடே நாறிப்போய்விடும்.
        37 minutes ago
         (0) ·  (0)
         
        • வம
          சமூக பொறுப்பில்லாமல் பதிலளிக்கிறார்... இவரது படங்களை புறக்கணிப்பது தான் ஒரே தீர்வு...
          about an hour ago
           (0) ·  (1)
           
          kovai Down Voted
          • G
            GUNAA  India
            சபாஷ் சிம்பு
            about 2 hours ago
             (1) ·  (1)
             
            kovai Up Voted
            Saravanan Down Voted
            • W
              W  India
              good
              about 3 hours ago
               (0) ·  (0)
               
              • A
                Arunachalam.S  India
                சிம்பு நீங்கள் உங்கள் வீட்டு படுக்கை அறையிலும்,பாத் ரூமுலிம் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் அவைகளை அரங்கத்தில் அம்பலமேற்றினால்,கேட்டவர்கள் கருத்து கூறத்தான் செய்வார்கள்.போரன் படக் காட்சிகள் ஆபாசமானவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று,எனவே வேண்டாதவர்கள் அதை ஒதிக்கி விடுவார்கள்,உங்கள் பாடல்கள் அந்த வகையை சார்ந்தது என்று எப்படி முன் கூட்டியே தெரியும்.ஆகையால் கேட்டவர்கள் கோபித்து கொள்கிறார்கள் .நீங்கள் கோபப்பட வேண்டாம் சிம்பு.