Monday, December 07, 2015

நான் கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று- கமல்ஹாசன் /ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் அறிக்கைக்கு பதில் அறிக்கை

நான் கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று என்று நான் சொன்னதாக சொல்லப்பட்ட வார்த்தைகள் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், இந்த நேரம் கட்சிகளுக்கு அப்பாற்பட வேண்டிய நேரம், மதங்கள் தனிமனிதக் கோபங்களையும் தவிர்த்துச் செயல்பட வேண்டிய பேரிடர் காலம் என்று உருக்கமாக கூறியுள்ளார். 
 

இது  தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று என்று நான் கேள்வி எழுப்பியது போல் சில ஊடகங்களில் சற்று நாட்களுக்கு முன் வந்த செய்தி நான் அந்த ஊடகங்களுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி அல்ல. மின் அஞ்சல் வழி என் வடநாட்டு பத்திரிகையாள நண்பருக்கு எழுதிய ஆங்கிலக்கடிதம். அந்தக் கடிதத்தின் தோராயமான தமிழாக்கமே சில ஊடகங்களில் வெளியானது. என் கடிதம் தமிழகத்திற்கு நேர்ந்த பேரிடர் பற்றியும் மக்களின் அவதியை பற்றிய புலம்பலே. கடிதத்தில் எங்கும் தமிழக அரசு என்ற குறிப்போ, என் வரிப்பணம் என்ன வாயிற்று என்ற கேள்வியோ இல்லை. அவ்வளவு சந்தேகம் இருந்திருந்தால் இவ்வளவு வருடம் தொடர்ந்து முழு வருமானத்தையும் சொல்லி அத்தனை வரி கட்டியிருக்கவே மாட்டேன். எந்த நிலைமையிலும் என் கடமையைச் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான்.

என் வீட்டிற்கு சில நாட்களாக செய்தித்தாள் வினியோகம் இல்லை. விட்டு விட்டு வரும் தொலைப்பேசித் தொடர்பும், எப்போதோ வரும் வலையதள தொடர்பினாலும் என்னைப் பற்றி ஊடகங்களில் வரும் வாதப்பிரதிவாதங்கள் நண்பர்கள் சொல்லியே தெரிந்துகொண்டேன். எனது சில நண்பர்களைப் போல் எப்போதுமே ஒரு கண்ணை முகநூலில் வைத்திருக்கும் முகநூல் வாசியல்ல நான். பதில் ஏதும் பேசாமல் இருந்தால் உண்மை தன்னால் வெளிப்படும் என் உண்மை நிலை புரியும் என்று நான் எண்ணியது தவறு என உணர்கிறேன். என் நற்பணி இயக்கத்தாருடன் தொலைப்பேசி தொடர்பு கிடைக்கும்போதெல்லாம் பேசிவருவதினாலும், அவர்களை எந்த ஆர்பாட்டமுமின்றி மக்களுக்கு உதவும் அன்பு கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்ததாலும் அவையே முக்கியம் இந்த வாதங்களை பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். அது தவறு, அத்தவறு இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

இது ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் அறிக்கைக்கு பதில் அறிக்கை அல்ல. களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கும், பல வேறு கட்சிகளுக்கும் ஓட்டு போடும் தன்னுரிமை உள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் குழப்பத்தில் நற்பணி செயல்களில் தடுமாற்றம் கண்டுவிடக் கூடாது என்பதற்கே இவ்விளக்கம்.

பக்தரும் பகுத்தறிவாளரும் பல மதத்தாரும் உண்டு எங்கள் இயக்கத்தில். இந்த நேரம் கட்சிகளுக்கு அப்பாற்பட வேண்டிய நேரம். மதங்கள் தனிமனிதக் கோபங்களையும் தவிர்த்துச் செயல்பட வேண்டிய பேரிடர் காலம். களமிறங்கி வேலை செய்யும் யார் மனதையும் நான் சொன்னதாக சொல்லப்பட்ட வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் கூட மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன். வாதபிரதிவாதங்களை புறந்தள்ளி ஆக்கவேலையில் முன் போல் முனையுங்கள். எனக்காக வாதாடும் எனது பல நெருங்கிய நண்பர்களும் என்னை கடுமையாக விமர்சிப்பவர்களும் அதையெல்லாம் விடுத்து செய்யும் உங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய மன்றாடுகிறேன். கோபதாபங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

தண்ணீரும் கண்ணீரும் வடிந்த பிறகும் கூட, சூழக்கூடும் என அஞ்சும் அபாயங்கள் அண்டாதிருக்க ஆவனம் செய்வோம். ஆளும் அரசு எதுவாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து நற்பணிகளை 36 ஆண்டுகளாக எங்கள் இயக்கம் செய்து வருகிறது. நான் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் எல்லோருடனும் சேர்ந்து ஒத்துழைப்பதே நற்பணிச் சேவைகளை தொடரும் அந்த சந்தோஷத்திற்காகவும் செளகரியத்துக்காகவும் தான்" என்று கூறியுள்ளார்.



  • ஆடு கோவாலு  United Arab Emirates
    ஐயா ஆடு தொலையல ஆடு தொலைஞ்சத மாதிரி கனவு கண்டேன்..
    about 5 hours ago
     (9) ·  (6)
     
    K · arun · ramkumar · gunaseelan · BK · Askok · Ganesan · dawood · Anandan Up Voted
    Bala · AK · N · Mohan · Indian · sasi Down Voted
    • Govindarajur Rajarethinam  India
      விளக்கம் அருமை்
      about 5 hours ago
       (6) ·  (5)
       
      Bala · AK · Mohan · Indian · BK · Anandan Up Voted
      ramkumar · gunaseelan · Askok · sasi · RAM Down Voted
      • AAjay  United Kingdom
        வாழ்த்துக்கள் கமல். ஓபிஎஸ் அறிக்கைக்கு எல்லாம் பதில் சொல்லனுமா என்ன? அரசின் செயல் திறன் தான் சந்திசிரிக்குதே?
        7285
        about 5 hours ago
         (13) ·  (8)
         
        SP · Bala · AK · mo · kovai · N · vadivel · Arun · EZ · திரு · Mohan · Indian · Ravichandran Up Voted
        ramkumar · sasikumar · Raja · Chanduru · BK · Anandan · sasi · RAM Down Voted
        • MMani  United Arab Emirates
          இப்போவாவது இந்த விஷயத்தை சொன்னிர்களே. இப்போது புரிய வேண்டியவர்களுக்கு புரிந்திருக்கும் உங்ககளை பற்றி.
          760
          about 5 hours ago
           (12) ·  (3)
           
          Bala · AK · UGR · arun · gunaseelan · pratap · alagiri · திரு · Mohan · Indian · sasi · Ravichandran Up Voted
          Chanduru · BK · Anandan Down Voted
          • KKKala Kauuwa  India
            இதே பொழப்பா போச்சு. எதையாவது சொல்ல வேண்டியது, அடுத்த இரண்டு நாளில் பல்டி அடிக்க வேண்டியது. கருணாநிதியுடன் சேர்ந்து சுத்தியதன் விளைவு. எதாவது ஒரு ஸ்டேட்மென்டில் உறுதியாக நிற்க முடிகிறதா? பின் எதற்கு வெட்டி வீறாப்புடன் சொல்லணும். (நண்பருக்கு அனுப்பிய மின் அஞ்சல் என்ன மயிருக்கு பத்திரிக்கைகளுக்கு போனது மேன்? அப்படி போன நிமிஷத்தில இருந்து நீயும், உன் நபரும்தான் பொறுப்பு ஏற்கணும் சொன்ன வார்த்தைகளுக்கு). இந்த ஆளு ஒரு பக்கம், இன்னொரு பக்கம் மக்களை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்துவிட்டு, இப்பவும் முயற்சிகளுக்கு தடையாக இருந்து கொண்டு இருக்கும் ஒரு அரசியல் வியாதி உடனே வரிந்து கட்டிக்கொண்டு 3876 பக்கத்திற்கு கொடுத்த விளக்கம். சீ, சீ - பாவ மூட்டைகளைச் சுமாக்கும் இந்த ஜென்மங்கள் அடுத்த பிறவியில் எத்தனை துன்பங்களை அநுபவிக்கப் போகின்றனவோ?
            340
            about 5 hours ago
             (14) ·  (19)
             
            PKARUPPASAMY · arun · sasikumar · gunaseelan · pratap · alagiri · Raja · hari · Chanduru · BK · Askok · Venkat · Anandan · RAM Up Voted
            SP · Bala · AK · mo · kovai · UGR · miracle · Chand · Sakthi · vadivel · ashok · கார்த்திக் · EZ · முருகன் · திரு · ksr · Indian · Ravichandran · முருகன் Down Voted
            • HHK  India
              அட போங்கப்பா! இதெல்லாம் ஒரு பொருட்டாவே மக்கள் பார்க்கவில்லை!
              460
              about 5 hours ago
               (11) ·  (1)
               
              Chand · arun · sasikumar · gunaseelan · pratap · EZ · alagiri · Chanduru · BK · Anandan · sasi Up Voted
              Indian Down Voted
              • மூக்கையா  India
                நான் வரி கட்டியிருக்கிறேன் என்று இவர் மட்டும் அல்ல எல்லோரும் பேசுவது வாடிக்கையாகிவிட்டது குறிப்பாக இவரை எடுத்துக்கொள்வோம் இவர் எங்கெல்லாம் காரில் செல்கிறாரோ அந்த ரோடுபோடமட்டும் இவர் வரிப்பனம் போதுமா
              விகடன்