Thursday, October 01, 2015

மணப்பாறை முறுக்கின் ருசிக்கு காரணம் என்ன தெரியுமா?

மணப்பாறை முறுக்கின் ருசிக்கு காரணம் என்ன தெரியுமா? (Sponsored)
யிறு முட்ட சாப்பிட்டாலும், நொறுக்குத்தீனி இல்லாவிட்டால் நம் நாட்டில் பெரும்பாலானோர் தவித்துப் போய்விடுவார்கள். இந்தநொறுக்குத்தீனிகளில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது  முறுக்குதான். முறுக்கு என்ற உடனே மொறுமொறுப்பும் அதன் மணமும் அனைவரின் நினைவுவுக்கு வந்துவிடும். காரணம், முறுக்கு என்பது இந்திய மக்களின் ஒரு பாரம்பரிய நொறுக்குத்தீனி என்பதை யாராலும் மறுக்க இயலாது.
இத்தகைய சிறப்பு பெற்ற முறுக்குபல ஊர்களில் பலவிதமாகத் தயாரிக்கப்பட்டாலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மணப்பாறை முறுக்குஉலக அளவில் இன்றும் பிரபலமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
இவ்வளவு ருசி இந்த மணப்பாறை முறுக்குக்குஎப்படி வந்தது என்று தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்.
மணப்பாறை முறுக்கு ருசியின் ரகசியம் இதுதான்...
மணப்பாறையில் 1930ஆம் ஆண்டுகளில் இந்த முறுக்கு தயாரிக்கும் தொழிலானது அறிமுகம் ஆனது. இன்றும் பல குடும்ப மக்கள் இதை பிரதான குடிசைத் தொழிலாக இங்கு செய்து வருகிறார்கள். இப்படி வந்த முறுக்குஅதிக ருசியாக இருப்பதன் காரணம், மணப்பாறை நீரின் உப்புத் தன்மைதான் என்றும் பலர் இந்த ஊரில் தெரிவிக்கிறார்கள். மணப்பாறை ஊரின் நீர், இயற்கையாக உப்புத் தன்மையைக் கொண்டது. இந்த உப்புத் தன்மை கொண்ட நீர் கொண்டு இங்கு முறுக்குதயாரிக்கப்படுவதால், இது மிகவும் ருசியாக இருப்பதாகவே பலர் நம்புகிறார்கள். இந்த ஊரில் மட்டும் முறுக்கை இரண்டு முறை எண்ணெய்யில் பொரித்து எடுக்கிறார்கள் இதுவும் இதன் ருசிக்கு ஒரு காரணம்.
இந்த முறுக்குதயாரிக்க இங்கு இதற்காக தனியாக அரிசி விளைவித்து, அதைப் பயன்படுத்துகிறார்கள் . அதன் காரணமாகவும் மணப்பாறை முறுக்குருசியாகவும் அதிக மணமாகவும் இருக்கிறது. மணப்பாறையில் தயாராகும் முறுக்கு, உலக அளவில் பலவிதமான நாடுகளுக்கு தினமும் ஏற்றுமதி செய்வது இன்றளவும் நடக்கிறது.
மணப்பாறை முறுக்குதயாரிக்கும் முறை :
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 1 கிலோ
உளுத்தம்பருப்பு மாவு – சிறிதளவ
இரண்டையும் நன்கு கலந்து அத்துடன் சீரகம், எள், பெருங்காயம் ஓமம், 10 கிராம் உப்பு இவற்றையும் சேர்க்க வேண்டும். அத்துடன் தண்ணீரை கொஞ்சமாக விட்டுக் கலந்து, கொஞ்சம் எண்ணெய்யும்  சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்படி பிசைந்த மாவை சிறிது சிறிதாக எடுத்து முறுக்கு சுற்றும் அச்சில் வைத்து முறுக்குபோல் பிழிந்து, அவற்றை சிறிது உலர வைக்க வேண்டும். இது உலர்ந்த பின், எண்ணெய்யில் பொரித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அடுத்த செட்டு முறுக்குகளைப் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். பின் மீண்டும் முதலில் பொரித்த முறுக்குகளை போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்படியாக இரண்டிரண்டு தடவைகளாக பொரிக்க வேண்டும். பின்னர், காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்து டைட்டாக மூடிவிட வேண்டும். உங்களுக்கு வேண்டும் என்றால், வெண்ணெய் அல்லது நெய் சேர்க்கலாம்.
எவ்வளவுதான் நாம் பக்குவமாக செய்தாலும் மணப்பாறையில் ஊறும் தண்ணீரும் மணப்பாறையில் விளையும் அரிசிக்கும் மட்டும்தான் அந்த சுவையும் மணமும் வரும்!
இப்படி சுவையான மணப்பாறை முறுக்கைத் தயாரித்து உங்கள் வீட்டுக்கே கொண்டுவந்து சேர்க்கிறது நேடிவ்கிருஷ்.காம் (www.nativcrush.com)இணையதளம். நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தாலே போதும்... உங்கள் இல்லம் தேடி வரும் மணப்பாறை முறுக்கு.
தமிழகத்தில் பலதரப்பட்ட ஊர்களில் சிறப்பு வாய்ந்த நொறுக்குத்தீனிகளை ஒரே நேரத்தில் வாங்க முடியாமலும் அதன் பயனை அடைய முடியாமலும் நம் மக்கள் அவசர கதியில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓட்டத்தில் துரித உணவை உண்டு உடல்நலத்தைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் உடல்நலத்தைக் காக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் உங்கள் தேவையை எங்கள் சேவையாகக் கொண்டு வெவ்வேறு ஊர்களின் சிறப்பு பெற்ற நொறுக்குத் தீனிகள் இல்லம் தேடி வருகிறது... நாவில் சுவை தருகிறது... உங்கள் நேடிவ்க்ருஷ்.காம் (www.nativcrush.com)
ஒவ்வொரு ஊரில் ஒரு தின்பண்டம் சிறப்பு. அவற்றை ஒரே இணையதளத்தில் மிகக் குறைவான விலையில் விற்கிறது நமத நேடிவ்க்ருஷ்.காம்.உங்களுக்குப் பிடித்த மற்றும் ஆசைப்பட்டு உண்ண நினைத்த பல பிரபலமான தின்பண்டங்களை மிக எளிதாக ஆன்லைனில் ஆர்டர் செய்து, உங்கள் வீட்டுக்கே வந்து சேரும் தின்பண்டங்களை ருசித்து மகிழுங்கள் .
நாம் நமது சொந்த ஊர்களை விட்டு இந்தியாவின் பல இடங்களில் வேலைக்காக மற்றும் படிக்கச் சென்றுள்ளோம். அங்கு என்னதான் பல விதமானஸ்நாக்ஸ் சாப்பிட்டு இருந்தாலும், நமது சொந்த ஊர் ஸ்நாக்ஸ்களுக்கு ஈடாகாது என்பதை உணர்ந்து, ஒவ்வொரு ஊரின் தனித்துவமான மற்றும் அனைத்து வகையான ஸ்நாக்ஸ்களையும்எல்லோரிடமும் கொண்டு சேர்க்க உருவாக்கப்பட்டது தான் Nativcrush.com


நன்றி-ஆனந்தவிkஅடன்