Sunday, May 31, 2015

எனக்கு தலைக்கனம் இல்லைனு ஒரு பொண்ணு தில்லாச்சொல்லுச்சுன்னா

நடிப்பு சரியா வராத உதயநிதி, ஆர் கே ,வகையறாக்கள் எல்லாம் ஓபிஎஸ் பார்த்து கத்துக்கங்கப்பா, என்னா பர்ஃபார்மென்ஸ்



============



2 உன்னிடம் டி எம்மில் யார் யார் எல்லாமோ பேசறாங்க என்னிடம் ஏன் பேசுவதில்லை? அன்பே?




=============



3 நான் மட்டும் உன்னை தேடுவதே இல்லை, ஏன்னா எப்படியும் நீ கிச்சன் ரூமில் உக்காந்து நொறுக்ஸ் தான் சாப்ட்டுட்டு இருப்பேன்னு தெரியும்




===============



4 2016 தேர்தலில் அதிமுக தனியா நிக்குதா? பிஜேபியோட கூட்டணி வைக்குதா? என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் தீர்ப்பின் நேர்மையை # டீலிங்



==========



5 உன் படைப்புத்திறனை உன் மனைவி கண்டுகொள்ளவில்லையா?கவலைப்படேல்.ஆனானப்பட்ட வள்ளுவருக்கே வாசுகி வாசகி இல்லையாம்



===========



6 எந்தப்பொண்ணு கிட்டே எப்போ வெயிட் என்ன?னு கேட்டாலும் 50 கேஜி னு தான் சொல்றாங்க.இதை எப்படி நம்புறது?




===========



7 மாஸ் ரிலீஸ் தேதி = 29 / 5/2015 = 2+9+5+2+0+1+5 = 24 = 2+4= 6 சூப்பர்ஹிட் =6



=============



8 மக்கள் முதல்வர் இன்று மாநில முதல்வர் ஆனார்.ஆனால் மாநில முதல்வர் மக்கள் முதல்வர் ஆகலை.இதுதான் அரசியல்



============



9 உன்னைக்கடுப்பேத்துவதற்காகவே  உன்  ஆள்  பலரிடம்  பேசுவது போல்   பாவனை செய்தால் நீ அதைக்காணாதது போல் பாவனை செய்





=================




10 மாசிலாமணி யை சுருக்கி மாஸ்னு வெச்ட்டாங்களாம்.அப்போ உசிலைமணியை சுருக்கி உஷ் னு வைப்பாங்களா?



================



11 நல்ல வேளை.ஹீரோ பேரு கேசவன் னு வைக்கலை.வெச்சிருந்தா டைட்டில் கேஸ் ஆகி இருக்கும் # மாசிலாமணி எனும் மாஸ்




=============



12 நைட் 11 மணிக்கு 19 நெட் தமிழர்கள் 91 பொண்ணுங்களோட பேசிக்கிட்டிருந்தா இந்தியா எப்படி வல்லரசு ஆகும்?ஜொள்ளரசு தான் ஆகும்




===============



13 நயன் தாரா டூ  சூர்யா= மாஸ் இலா உண்மைக்காதலே  மாறுமோ சிம்பு வந்த போதிலே? # மாஸ் என்கிற மாசிலாமணி 




====================



14  கேக்கறவன் கேனையா இருந்தா மாசிலாமணியின் சுருக் தான் மாஸ்னு சொல்லி வரிவிலக்கு  வாங்கிடுவாங்களாம்




================



15  பசங்க ஏதோ பேசனும்கறதுக்காக பொண்ணுங்க கிட்டே எதுனா பேசும்போது அவங்க ஒரு ஸ்மைலி மட்டும் போட்டு எஸ் ஆவாங்க.தமிழன் விடாம ஏன்?னு கேட்பான்



================
16 அரசின் வருமானம் போய்விடுமே என பயந்தால் குடிமக்களின் எதிர்காலமே வீணாய்ப்போய்விடும்

=============
17 பெரும்பாலான பெண்களின் குங்குமத்துக்கு பங்கம் விளைவிக்கும் என்பதால்,போதை முன்னேற்றப்பாதைக்கு எதிரான அங்கம் என்பதால்

===============


18 மாசிலாமணிகள் எதிர்காலத்தில் கையில் காசிலாமணிகள் ஆகும் அவலத்தைத்தவிர்க்க


=================

19 எனக்கு தலைக்கனம் இல்லைனு ஒரு பொண்ணு தில்லாச்சொல்லுச்சுன்னா அது சவுரியைக்கழட்டி ஆணில மாட்டிடுச்சுன்னு அர்த்தம்


============

20 குடிக்கிறவன் லாம் கெட்டவன் இல்லைதான்,ஆனா குடிச்ச பின் கடவுளா இருந்தாலும் சாத்தானா மாறுவான் என்பதால்


=================