1 அன்பே! நீ என்னை ஃபாலோ பண்ணிட்டே இருக்கியே? நீ நான் செய்த பாவமா? புண்ணியமா?
=============
2 தீவிரமான கமல் ரசிகன் யார் தெரியுமா? பாபநாசம் படத்துல வரும் போலீஸ் ஆஃபீசர் ஆண்ட்டிக்கு கமல் கிஸ் சீன் உண் டா? என எதிர்பார்பவனே!
==============
3 நேற்று வரை மக்கள் முதல்வர்
இன்று மாநில முதல்வர்
நாளை மக்கள் முதல்வர் # வாழ்க்கை ஒரு வட்டம்
=============
4 வெள்ளி அன்று பதவி ஏற்பு , அடுத்த நாளே சிம்ம ராசியை சனிஸ்வரர் உக்கிரமா பார்க்கறார்
==============
5 ஒரு ஏ சென்ட்டர் பிகரு டி சர்ட் ல FIXED னு வாசகம் எழுதி வெச்சிருக்கு.நிச்சயதார்த்தம் ஆகி இருக்குமோ?
===========
6 கரண்ட் ரீடிங் எடுக்கற மாதிரி டெய்லி நைட் படுக்கும்போது எத்தனை பாலோயர்ஸ் ?காலைல எத்தனை அன் பாலோ னு குறிச்சு வெச்சுக்கிட்டிருக்கேன்
=============
7 வாழ்க்கைல கோல் ரொம்ப முக்கியம் தான்.ஆனா டபுள் சைட் கோல் /சேம் சைடு கோல் போடக்கூடாது
==============
8 தீர்க்க சுமங்கலியாக வாழ நினைக்கும் பெண்கள் குடிகாரனை மாப்பிள்ளையாக ஏற்காதீர்கள்
============
9 மரத்தை வெட்டுபவனைக்கூட மன்னிக்கலாம்.ஆனால் உலகில் தூய காற்றை தன் சிகரெட் புகையால் சீரழிப்பவனை மன்னிக்கவே கூடாது
=============
10 குடிகாரன் தன் உடம்பையும் தன் குடும்பத்தின் எதிர்காலத்தையும் தான் சீரழிக்கிறான்.ஆனால் ஒரு சிகரெட் பிடிப்பவன் உலகில் உள்ள காற்றை சீரழிக்கிறான்
===========
11 மோடியின் வெளிநாட்டு பயணங்களால் நாட்டுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்பட்டுள்ளது : அருண் ஜெட்லி"# எந்த நாட்டுக்கு? அவர் விசிட் அடிச்ச நாட்டுக்கா?
==============
12 உன் அன்புக்கு உரியவர் உன்னை விட்டுவிலக நினைக்கையில் இது வரை நீ பார்க்காத அவரது இன்னொரு முகத்தைக்காண்பாய்!
=============
13 புரட்சித்தலைவி நன்றிக்கடன் செலுத்தவேண்டியவர்கள்
1 எம் ஜி ஆர்
2 குமாரசாமி
===============
14 அப்பாக்கள் 2 வகை
1 தான் இருக்கும்போதே தன் சிம்மாசனத்தில் மகனை அமர வைத்து அழகு பார்ப்பவர்
2 அப்படிச்செய்ய மனம் வராதவர்
=============
15 லட்சுமியை எப்பாடுபட்டேனும் நீ வளைத்துப்போட்டுவிட்டால் சரஸ்வதி ,நீதி தேவதை ,அதிர்ஷ்டதேவதை மூவரையும் சுலபமாக கரெக்ட் பண்ணிடலாம்
==============
16 ஒரு தனி நபரின் அபிலாஷை ஒரு மாநிலத்தின் தலை எழுத்தையே நிர்ணயிக்கும் சக்தி படைத்தவையாக மாறக்கூடும் #,எம் ஜி ஆர் ,ஜெ
===============
17 அரசாட்சி புரிவோர்க்கு மனசாட்சி சொல்வதைக்கேட்க நேரம் இருக்காது
=============
18 நீ எவ்வளவு பெரிய திருடனாக இருந்தாலும் வெள்ளை வேட்டி , வெள்ளை சட்டை அணிந்து கொண்டால் மக்கள் உன்னை நம்பி ஏமாந்து விடுவார்கள்
==============
19 டி எம்மில் 3 பேருகிட்டே பேசிக்கிட்டே டி எல்லில் 4 பொண்ணுங்க கிட்டே பேசுவது எப்படி? என் ற செப்பிடு வித்தையை மாப்பி நீ செப்பிடு
===================
20 நீதிதேவதையை விலைக்கு வாங்கியவர்களைப்பார்த்து காலதேவன் அர்த்த புஷ்டியுடன் சிரிப்பான்
=============