ஒரு மனிதனைப்பற்றிய மதிப்பீடு அவன் வாழும் தருவாயில் , அவனது மரணத்தருவாயில் , மரணத்துக்குப்பின் என 3 வகைகளாகப்பிரிக்கலாம்.சாகும் தருவாயில் உள்ள ஒரு சினிமாக்கலைஞனின் பர்சனல் தவறுகள் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது, அதை எப்படி அவனைச்சுற்றி உள்ளவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் கதை.
வழக்கமாக கமல் படங்கள் ரிலிஸ் ஆனால் அது எந்த ஹாலிவுட் படத்தின் தாக்கம் என்பது பற்றிய சர்ச்ச்சை வரும். அது இந்தப்படத்தில் வராது .அவர் தன் வாழ்வில்சந்தித்த வாணி , சரிகா, கவுதமி இவர்களை வைத்து திரைக்கதை அமைத்திருப்ப்தால் கதை பற்றி உரிமை கொண்டாட யாருக்கும் வழி இல்லை
படத்தோட ஹீரோ ஒரு சினிமா ஹீரோ ( கமல் படத்துக்கு விமர்சனம் எழுதும்போது கூட கமல் பாணிலயே எழுத வேண்டி இருக்கு ).அவருக்கு மூளையில் கட்டி. சாகப்போறார். இது தெரிஞ்சதும் அவர் தன்னை அறிமுகப்படுத்துன இயக்குநர் படத்தில் நடிக்க ஆசைப்படறார். ஹீரோக்கு ஒரு சம்சாரம் , ஒரு முன்னாள் சம்சாரம் ( கில்மா முடிச்சு கழட்டி விடப்பட்ட காதலி) ஒரு இந்நாள் கள்ளக்காதலி ( குற்ற உணர்ச்சியோடயே இப்பவும் கில்மா பண்ணிட்டிருக்கும் காதலி) .இவங்க 3 பேரையும் எப்படி பேலன்ஸ் பண்றார்?அவரோட வாரிசுகளை எப்படி ஹேண்டில் பண்றார்? என்பதே திரைக்கதை
ஹீரோவா கமல் த ஒன் அண்ட் ஒன்லி சாய்ஸ்.இவரது நடிப்பைப்பிரமாதம் என்று நாம் சொல்லித்தான் யாருக்கும் தெரியப்போவதில்லை புதிதாய். ஆனால் நுணுக்கமான சோக நடிப்பில் இதுவரை காட்டிராத கோணங்களில் பின்னிப்பெடல் எடுத்திருக்கார்.படத்தில் படம் எனும் மாறுபட்ட திரைக்தையில் உத்தமன் கேரக்டரில் அவரது நடிப்பு , பாடிலேங்குவேஜ் , டைமிங் டயலாக் , டயலாக் டெலிவரி எல்லாம் அதி அற்புதம்.ஓப்பனிங் சாங்கில் அவர் ஆடும் டான்ஸ் இந்தியன் காலத்துக்கமலை கண் முன் நிறுத்துது. கமல் நடிப்பில் முத்திரை பதித்த காட்சிகளை சொல்லிக்கொண்டே போனால் நீளம் ஆகி விடும்
ஹீரோயினா 3 பேர் . மனைவியா ஊர்வசி ( வாணி கமல் ) இவருக்கு அதிக காட்சிகள் இல்லை என்றாலும் அந்த ஹாஸ்பிடல் காட்சியில் கலக்கி எடுத்து விடுகிறார்
கள்ளக்காதலி கம் டாக்டராக வரும் ஆண்ட்ரியா அசால்ட்டான நடிப்பு.தன்னை விட சீனியரான ஆட்களுடன் நடந்து வரும்போது கூட அவர் முந்தானையை தேமேன்னு உடுத்தி இருப்பது ஏதோ குறியீடு.க்ளைமாக்ஸ் காட்சியில் நுணுக்கமான நடிப்பில் கமலுடன் போட்டி போடுகிறார். அனிரூத் திற்கு கொடுத்த முத்தத்தை விட ஒரு மாற்றுக்கம்மி தான் என்றாலும் கமலுடனான லிப் கிஸ் காட்சியில் கிறங்க வைக்கிறார்
வீர இளவரசியாக வ்ரும் பூஜா குமார் நடிப்பு ஓக்கே ரகம் . திரைக்கதையில் பூஜாவை கமல் விட்டு வைத்திருப்பது பெரிய அதிர்ச்சி .ஒரு வேளை எடிட்டிங்கில் கட் ஆகி இருக்கலாம்.
மாறுபட்ட குணச்சித்திர நடிப்பில் லைஃப் கேரக்டரில் எம் எஸ் பாஸ்கர் . தன்னிடம் கமல் அவரது நோய் பற்றி சொல்லவே இல்லை என மருகும் இடத்தில் , ஊர்வசியிடம் அவரையும் அறி யாமல் போட்டு விட்டோமே என குற்ற மனப்பான்மையில் தவிப்பது அனைத்தும் அருமை
கமலின் மகளாக வரும் பார்வதிமேனனின் அண்டர்ப்ளே ஆக்டிங் கன கச்சிதம்
படத்தின் வசனத்தை அதிகாரப்பூர்வமாக கமலும் , அஅதிகாரப்பூர்வமாக கிரேசி மோகனும் எழுதி இருக்கிறார்கள் . இதில் 18 இடங்களில் கமல் டச் , 19 இடங்களில் கிரேசியின் வார்த்தை ஜால டச் மேலோங்கி நிற்கிறது .
திரைக்க்தை அமைப்பதில் கமல் எப்போதும் பாமர ஜன்ங்களைக்கருத்தில் கொள்வதில்லை என்ற குறை எப்போதும் எனக்கு உண்டு. இதிலும் டிட்டோ
ஜெயராம் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய இன்னொரு தியாகி கேரக்டர்
கமலின் ஆஸ்தான நடிகர் நாசர் இதில் மன்னர் கேரக்டர் .அசால்ட்டா பண்ணிட்டு போய்டறார். கே பாலச்சந்தர் இயக்குநராகவே வருகிறார். குறை சொல்ல முடியாத நடிப்பு . ஆனால் ஒவ்வொரு சீனிலும் அவர் கமல் நடிப்பைப்பாராட்டிக்கொண்டே இருப்பது கமல் ரசிகர்கள் கை தட்ட மட்டுமே பயன்படுது
இசை ஜிப்ரான் . நாடக காட்சியில் பாடல் இசை கன கச்சிதம் பின்னணி இசையில் அற்புதமாக பண்ணி இருக்கார் பிஜி எம்மில் எந்த இடங்களீல் எல்லாம் மவுனம் தேவை என்பதை உணர்பவரே நல்ல இசை அமைப்பாளர் . ஜிப்ரான் நல்ல இ அ
இயக்கம் ரமேஷ் அர்விந்த் என டைட்டிலில் போட்டாலும் எப்படி அன்பே சிவம் சுந்தர் சி இயக்கவில்லையோ அதே போல் தான் இப்படத்தைகமல் தான் இயக்கி இருக்கார் என்பது சிம்பு மனசில் நயன் தாரா போல் தெள்ளத்தெளிவாகத்தெரிகிறது
மனதைக் கவர்ந்த வசனங்கள்
1 உங்க தொழில் தண்ணி போடாம நடக்கும், ஆனா லைட் போடாம நடக்குமா? # உவி
2 ஹாஸ்பிடலில் லேடி டாக்டர் ஆண்ட்ரியா = சரி , சர்ட்டை கழட்டுங்க
கமல் = ஆ! அதுக்கெல்லாம் டைம் இருக்குமா?
3 ஒரு கலைஞனுக்கு அடுத்த கரகோஷம் வருமா?வராதா?ன்னும் எப்போ அது வரும்னும் தெரியாது # உவி
4 நீங்க காதலியை விட சினிமாவைத்தான் அதிகம் நேசிச்சிருக்கீங்க # உ வி ( அப்புறம் எப்படி 3 காதலி?)
5 கே வி= நீ ரொம்ப வருத்தப்படுவே
கமல் = மாட்டேன்
பார்ப்போம்
ம், பார்ப்போம்
6 என் பாம்பா? கொக்கா?
அட, இத்தனைநாளா அது பாம்பா? கொக்கா?ன்னு தெரியாமயா வள்ர்த்திட்டு இருந்தே ? # கிரேசி ராக்ஸ்
9 அடுத்தடுத்த மரணம் அரசியலுக்கு நல்லதல்ல # கமல் வசனம்
10 அவன் பேரென்ன?
ஏதோ உத்தமனாம்
ஏப்பா ஏதோ உத்தமா
அய்யோ உத்தமன்
2 பேரா?
நோ 1 தான் # கிரேசி ராக்கிங்
11 கடவுளே! நான் சாப்பிட ஏதாவது கேட்டா என்னை சாப்பிட முதலையை அனுப்பறியே? # கமல் ராக்ஸ்
12 மல்யுத்தம் செய்பவன் மல்லன் , வில் வித்தை செய்பவன் வில்லன் அர்ஜுன் வித்தை தெரிந்த வில்லன், சிவன் ஒரு வில்லாதி வில்லன் # கமல் ராக்ஸ்
13 நீ சாகப்போறியா?
கூத்தாடி தினம்செத்துசெத்துப்பிழைப்பவ்ன்னு வேனும்னா அப்டி சொல்லிக்கலாம் # கமல்
14 பூதங்கள் 5
4 இல்லை?
அது வேதங்கள்
ஓ குறைக்கச்சொல்லுங்க
வேதத்தையா?
வசனத்தை # கிரேசி
15 என் அழகை எல்லாம் நாக்கை அடக்காம தின்னே தீர்த்துட்டேன் # கமல்
16 பி பி எப்படி இருக்கு இப்போ?
என் மகளோட பிபியை விட என் பிபி பெட்டராவே இருக்கு # கமல்
17 ஆத்மா சாட்சியா சொல்லுங்க. அவ மேல காதல் இன்னும் இருக்கா?
ஆத்மாவுக்கு காது கேட்காது # கமல்
18 மன்னர் எவ்வளவு அவசரமாக போய்க்கொண்டிருக்கிறார்?இப்போதான் ப்பீப்பீபீ பீ ஊதனுமா? # கிரெசி
19 மன்னா! அந்தக்காய் சாப்பிட்டா ஆண்மை போயிடுமாம்
ஆ! # கமல்
20 சரி சரி அழாத, உன் ஃபேஸ்க்கு அழுகை சூட் ஆகலை # கமல்
21 என்னய்யா ஊர் இது? புலியை அவிழ்த்து விட்டு பொண்ணை கட்டிப்போட்டிருக்கு ? # கமல்
22 கே பி = ஒரு ஷாட் பண்ணி இருப்பான் பாரு ,அவனைத்தவிர யாராலும் பண்ணிட முடியாது # கமல் . அப்ளாஸ் சீன்
23 இந்த உலகத்தில் ரொம்ப சிரமம் கலைஞன் ஆவது தான் , குறிப்பா மக்கள் போற்றும் கலைஞன் # கமல் ( நல்ல வேளை கலைஞர்னு சொல்லலை)
படம் பார்க்கும்போது அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 உத்தம வில்லன் #172 நிமிடம்
2 ஓப்பனிங் சீன் ல கமல் படிக்கட்டுல உயரே உச்சிக்குப்போறாரு.குறியீடு
3 டூயட் சீனில் நாயகியிடம் ரசிக்கத்தக்க குறும்புகள் செய்ய இனி ஒருவர் பிறந்து வரவேண்டும் கமலை மிஞ்ச
4 கமல் - வாணி கமல் - சரிகா கமல் -,கவுதமி கதை தான் போல.
5 வசனகர்த்தா கமல் ,திரைக்கதை ஆசிரியர் கமல் ,நடிகர் கமல் மூவருக்கும் பலத்த போட்டி .வெல்லுவது வழக்கம் போல் நடிகர் கமல்
6 கமல் கே பாலச்சந்தர் காம்போ சீனில் குருவிடம் பதட்டம் பட்டவர்த்தமாய்.குருவை மிஞ்சத்துடிக்கும் சிஷ்யன்
7 பரபரப்பான சுஜாதா டைப் திரைக்கதையை எதிர்பார்க்காமல் அசோகமித்திரன் ,சுந்தரராமசாமி டைப் மென்மையான திரைக்கதையை எதிர்கொள்ளும் பக்குவத்துடன் படம் பார்க்கனும்
8 எம் எஸ் பாஸ்கரின் அபாரமான குணச்சித்திர நடிப்பில் மெருகேறும் திரைக்கதை
9
ஏ சென்ட்டர் ரசிகர்கள் ,கமல் ரசிக்ர்கள் (2ம் 1 !? ) இரு தரப்பால் மட்டுமே சிலாகிக்க முடிந்த திரைக்கதைப்பயணத்தில் இடை வேளை
10 படத்தில் வரும் கிளைக்கதை சாதாஜனம் ரசிக்கும் தரத்தில் இல்லாதது கமர்ஷியல் சக்சசை கேள்விக்குறி ஆக்கும் பின்னடைவு.கமல் தெரிந்தே செய்தகர்வப்பிழை
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1. கமல் ஆற்றுத்தண்ணீரில் அடித்துச்செல்லப்படும்போது கடவுளிடம் குடிக்க தண்ணீர் கேட்டு முறை இடுவதும் , பின் குப்புற விழுந்து குடிப்பதும் அப்ளாஸ் சீன்
2 அருவியில் ,உச்சியில் விழும் சீன் ஒளிப்பதிவு , லொக்கேசன் செலக்சன் பிரமாதம்
3 கமல் தன் மகனுடன் பந்து விளையாடிக்கொண்டே தன் நோய் பற்றி சொல்லும் காட்சி
4 ஹாஸ்பிடலில் ஊர்வசியின் அழகு பற்றிய உரையாடல் காட்சி
5 க்ளைமாக்சில் ஆண்ட்ரியா கமலைக்கடைசியாகப்பார்ப்பது , கமல் கண்ணடிப்பது , அஞ்சலி படம் போல் இரக்கத்தை வலுக்கட்டாயமாக வர வைக்கும் செயற்கையான மணிரத்னத்தனம் இல்லாமல் கிளாசிக்காக முடிப்பது
6 சாகப்போகும் கமல் அதுக்கு நேர் இணையாக சாகாவரம் பெற்ற கமல் பற்றிய க்தை அந்த இரு கதையையும் இணைத்த விதம்
7 கே விஸ்வநாத் நடிப்பு கமல் உடன் நடிக்கையில் எப்போதும் ஒளிர் விடும். இதுக்கு முன் பாச வலை யில்
8 ஹீரோ கமல் மேக்கப்பை கொஞ்சம் கொஞ்சமாக கலைக்கும்போது அவரது மகள் கமலின் மனைவிககு ( பார்வதி யின் அம்மா) எழுதிய கடிதத்தைப்படிப்பது இருவரின் ரீ ஆக்சன் கலக்கல் ரகம், இது மலையாளப்படங்களில் மட்டுமே வரும் அற்புதமான் காட்சி
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 தழுவாத கைகள் , வாழ்வே மாயம் காலத்தில் எல்லாம் வருசத்துக்கு 50 படம் நாயகன் மூளையில் கட்டி , பிளட் கேன்சர் என நோய் பாதிப்பில் படம் வரும். எல்லோருக்கும் சலிப்பை ஊட்டிய கோடம்பாக்கம் கிட்டத்தட்ட மறந்து விட்ட அந்த நோயை மீண்டும் கை பற்றி அழைத்து வருவது ஏனோ? யூ டூ கமல் ?
2 பெரிய பட்ஜெட் படத்தில் கிராஃபிக்சில் பாம்பு வருவ்து , முதலையை ,புலி யை கிராஃபிக்சில் , காட்டுவ்து ஏனோ?
3 கே பாலச்சந்தர் கமல் இணைந்து பட அறிவிப்பு வெளியிடும் காட்சியில் ரசிகர் கூட்டம் மிகக்கம்மி . மொத்தமே 50 பேர் கூட இல்லை . இருவர் பட பால்கனி சீன் போல் எடுத்திருக்க வேண்டாமா?
4 காஞ்சனா ஃபார்முலாவில் கமல் பயத்தில் லேடியின் இடுப்பில் போய் ஏறி அமர்வது ஹூம்
5 ஹீரோ தன் வாழ்வில் 3 பெண்களை ஏமாற்றிக்கொண்டிருப்பவர் . அவருக்கு நோய் வ்ந்து விட்டால் அவரது மனைவிகளுக்கு வேண்டுமானால் கதைப்படி அனுதாபம் வரலாம்.ஆனால் ஆடியன்சுக்கு வரவேண்டிய அவசியம் இல்லை . பெரிதாக பாதிக்க வில்லை
6 ஹீரோ 3 பெண்களுக்கு துரோகம் இழைத்தது பற்றி குற்ற உணர்வே இல்லாமல் இருக்கார் . மரணம் அருகில் வந்த பின் தான் உணருகிறார். மற்ற மனைவிகள் அவ்ரை ஈசியா மன்னிக்கறாங்க
7 படத்தில் பிராமணர்களை குறி வைத்து தாக்கபட்டிருக்கும் வசனங்கள் தேவை இல்லாத ஒன்று ‘
8 தசாவதாரம் கல்லை மட்டும் கண்டால் பாட்டு எபிசோடு கமல் கெட்டப்பை நினைவுபடுத்தும் நாடக கெட்டப் கமல் பல இடங்களில் சலிப்பு ஊட்டுகிறார்
சி பி கமெண்ட் = உ வில்லன் = ஏ சென்ட்டர் ரசிகர்களுக்கான கிளாசிக்கல் மூவி.கமல் நடிப்பு அற்புதம்.விகடன் மார்க் =46.ரேட்டிங் = 3.5 / 5 கமர்சியல் வெற்றி அரிது
ஆனந்த விகடன் மார்க் ( கணிப்பு) - 46
குமுதம் ரேங்க் ( கணிப்பு) = நன்று
ரேட்டிங் = 3.5 / 5
ஈரோடு ஆனூரில் பார்த்தேன்
அ