1 உத்தம வில்லன்
கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ திரைப்படம் நாளை (மே 1) ரிலீஸாகிறது. இப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு தடை கேட்டு விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், விஎச்பி அமைப்பினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விஎச்பி அமைப்பின் கொள்கை பரப்பு செயலாளர் வை.தா.ராமமூர்த்தி கூறியதாவது:
‘உத்தம வில்லன்’ படத்தை தடை செய்ய வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை அல்ல. அந்த படத்தில் ‘வெக்கங்கெட்டு பன்றியும் நாம் என்றவன் கடவுள்’ என்ற பாடல் வரி உள்ளது. இந்து மத நம்பிக்கைக்கு எதிரான இந்த பாடல் வரியை நீக்கவேண்டும் என்றுதான் கூறுகிறோம். வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் மேல் முறையீடு செய்ய உள்ளோம்.
‘காதலா காதலா’, ‘தசாவ தாரம்’, ‘உத்தம வில்லன்’ என்று தொடர்ந்து தனது படங்களில் இந்து மத நம்பிக்கைகளை கிண்டல் செய்யும் வகையில் கமல்ஹாசன் காட்சிகளை அமைக்கிறார். ‘விஸ்வரூபம்’ படத்துக்கு எதிர்ப்பு எழுந்தபோது காட்சிகளை நீக்கியவர் இப்போது மறுப்பது ஏன்?
இந்து மத நம்பிக்கைக்கு எதிரான பாடல் வரிகளை நீக்காவிட்டால், ‘உத்தம வில்லன்’ படம் ரிலீஸாகும் திரை யரங்குகள் முன்பும் போராட்டம் நடத்துவோம் என்றார்.
- K. Shanmugaமிஸ்டர் மனோராஜ் ,ஏங்க நீங்க என்னத்தை சொன்னாலும் அவங்க கேட்க மாட்டாங்க .ஒரு ஐந்து வருசத்துக்கு இந்த கோமாளித்தனத்தை /நாசிசத்தை/பாசிசத்தை பொறுத்து கொள்ளணும்.வேற வழி கிடையாது.Points1415about 16 hours ago · (1) · (0) · reply (0) ·SENTHIL Up Voted
- இவர் ஜாதிக்காகத்தான் இவரை எதிர்க்கிறார்கள். முடிந்தால் பெரியார் எழுத்துக்களை தடை செய்யச் சொல்லுங்கள். அவரைப்போல், அவர் தொண்டர்கள் போல் இந்துமதத்தை இஸ்லாமியன் கூட அவமதித்ததில்லை. தமிழனில், வைதீக பிராமணன் பூணலை அறுக்க ஒரு கூட்டம், நாத்தீகம் பேசினால் அதை எதிர்க்க ஒரு கூட்டம். சரியான பச்சோந்திகள்.Points9385paamaran Up VotedSENTHIL Down Voted