1 பிரதமர் மோடிக்கு சசிதரூர் பாராட்டு # இவரு மனைவியை விட்டுத்தள்ளியவர் , அவரு மனைவியைபோட்டுத்தள்ளியவர்,நல்ல ஜோடி
===========
2 கமலின் புதிய படத்தில் த்ரிஷா #,இதுக்கு வருண் மணியன் ஒத்துக்கிட்டாரா?பெரிய தியாகியா இருப்பார் போல
===========
3 தமிழகத்தில் பலம்
பொருந்திய கட்சியாக பா.ஜ.க உருவெடுக்கும்-தமிழிசை
# எல்லாரும் கை குத்தல் அரிசி சாப்பாடு சாப்பிடுவாங்க்ளோ?
==============
4 அமெரிக்காவில் யாரும் தாலி கட்டுவதில்லை-திருமாவளவன் # அமெரிக்கால அவுட் சைடு போனா கால் கழுவக்கூட மாட்டாங்க, பேப்பர்தான்.அதுக்காக?
===================
5 காங்கிரஸ் பலம் தேர்தல் நேரத்தில் மேடையில் தெரியும்-குஷ்பூ#மக்களின் பலம் தேர்தல் முடிந்க்த பின் வாக்கு எண்ணுகையில் தெரியும் மேடம்
=========================
6 ஊழலில் சீரழிந்து வருகிறது தமிழக சுகாதாரத்துறை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் # லாங் லீவ்ல போய் இருந்தாரே ராகுல்? வந்துட்டாரா?
===================
7 இந்த அரசு ஏழைகளுக்கானது’ பிரதமர் மோடி பேச்சு..#ஏழைகள் முன்னெறனும்னு டெய்லி ஃபாரீன் டூர் போயி சிரமப்படுவதைப்பாத்தா கண் வேர்க்குது
====================
8 பாரில் ஃபாரீன் நடன அழகிகளுடன் ஆபாசம் போலீஸ்காரர்கள் 2 பேர் பணி இடைநீக்கம்#நம்மநாட்டுப்பொண்ணுங்களோட ஆடி இருந்தா தப்பில்லைபோல
===============
9மேக் இன் இந்தியா" இல்லை, விவசாயிகள் நிலத்தை பிடுங்க பிரதமர் மோடி விருப்பம் - ராகுல்காந்தி # வாங்க சார் வாங்க.விஸ்வரூபம் 2 போல
===================
10 டெல்லியில் ஓட்டுநரில்லா மெட்ரோ ரெயில்கள் விரைவில் அறிமுகம் # அப்டியே டிடிஆர் , செக்கர் இல்லைன்னா டிக்கெட்டும் எடுக்கத்தேவை இல்லை
======================
11 நீதித்துறையில் முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்: பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல் # குறிப்பா ஜெ , கலைஞர் , சோனியா, ஆ ராசா வழக்குகள்
======================
12 இளையதளபதியுடன் நடிக்க காத்திருக்கிறேன்-எமி ஜாக்சன் # நீங்க நடிக்க ரெடி,அவரு நடிக்க ரெடியா? ஐ மீன் உங்க கூட நடிக்க ரெடியா?
========================
13 நிதி கொடுக்க மனம் வேண்டும் - கருணாநிதி #தலைவரே! என்ன? கண்ணாடியைப்பார்த்துப்பேசிட்டு இருக்கீங்க போல ?
======================
14 ரோமியோ ஜூலியட் படக்குழுவிடம் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு டி.ராஜேந்தர் நோட்டீஸ்! # கடைசில 1000 ரூபா கொடுத்து பைசல் பண்ணிடுவாங்க
=====================
15 பிரபுதேவாவுடன் காதலா?: புதுமுகம் தேஜஸ்வினி மறுப்பு # பொண்ணுங்க இல்லைன்னா இருக்குன்னு அர்த்தம்னு கொல்லிமலை சித்தர் கனவில் சொன்னார்
========
16 பாமக இருக்கும் அணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெறாது: திருமாவளவன் # ஆமா 2 பேரும் ரொம்ப ரோஷக்காரங்க.ஒரு கூட்டணில எப்படி 2 ஜாதி?
===================
17 கோவையில் 3 ஆயிரம் பாம்புகளை பிடித்த என்ஜினீயரிங் மாணவிகள் # பாம்புன்னா படையே நடுங்கும், பொண்ணுங்கன்னா பாம்பே நடுங்கும்
=====================
18 புதிதாக வாங்கப்பட்ட 430 அரசு பஸ்கள் இயக்காமல் முடக்கம்: ராமதாஸ் குற்றச்சாட்டு.# தீர்ப்பு வரும் வரை காத்திரு(ங்க)
=========================
19 பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மேம்படுத்தக்கோரி அதிகாரிகள்–ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம். # அப்பாடா, நாளை நெட் கட் ஆகாது
=====================
20 சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 1½ கிலோ தங்கம் கடத்திய பெண் பயணி அமீனா சிக்கந்தர் கைது.# நேமாலஜி மேட்சிங்.சிக்கிட்டார்
=====================