Friday, February 27, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 27/2// 2015 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை




1 காக்கிசட்டை(ராயல்,அன்னபூரனி)
2 வஜ்ரம்(அபிராமி)
4 மணல்நகரம்(கிருஷ்ணா)
3 எட்டுதிக்கும்மதயானை(சண்டிகா) 5 சினிமா உலகம்
6இரவும்பகலும்#27



1 காக்கிசட்டை



மான் கராத்தே படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து, அடுத்து வரவிருக்கும் படம் ‘காக்கி சட்டை’.

இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே எதிர்நீச்சல் படத்தை இயக்கிவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். முதன் முறையாக இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் வேடம் ஏற்று நடித்துள்ளார்.

இது ஒரு ஆக்‌ஷன் என்டர்டெயின்மென்ட் படமாக உருவாகியுள்ளது. ஏற்கெனவே படத்தின் பாடல்கள் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. படம் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே காக்கி சட்டை படம் தணிக்கைக் குழுவின் சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் அனைவரும் பார்த்து மகிழும்படியான யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காக்கிசட்டை படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட விஜய், அஜித் படங்களை நெருங்கும் என கூறப்படுகிறது.  



2  வஜ்ரம்
கேப்டன் நடிச்ச

உளவுத்துறை’, அருண்விஜய் நடித்த ‘ஜனனம்’ போன்ற படங்களை இயக்கியவர் S.D.ரமேஷ்செல்வன்.
இவர் அடுத்து இயக்கும் படத்திற்கு ‘வஜ்ரம்’ என்று பெயரிட்டுள்ளார். இதில் ‘பசங்க’, ‘கோலிசோடா’ ஆகிய வெற்றிப் படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். நாயகியாக பவானிரெட்டி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா, மயில்சாமி, மூணார் ரமேஷ், நந்தா சரவணன், சனா, நாகு ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஏ.ஆர்.குமரேசன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு பைசல் இசையமைக்கிறார். படத்தை ஸ்ரீசாய்ராம் பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பாக P.ராமு தயாரிக்கிறார். படம் பற்றி இயக்குனர் ரமேஷ்செல்வனிடம் கேட்டபோது, “இன்று உலகம் முழுக்க பிரச்சனையாகி வருவது வருங்காலத்தினரின் அடிப்படைத் தேவையான கல்வி பற்றிதான். இன்று அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட கொள்ளையே கல்விதான். இதைத்தான் இந்தப் படத்தில் சொல்கிறோம்.
கேட்டு வாங்கவேண்டிய உரிமை கொண்ட கல்வியை, பணம் கட்டி பெற்றுக் கொண்டிருக்கிற அவலம்தான் இன்றைய தலைமுறையினரின் தலையாய பிரச்னை. இதைத்தான் இந்தப் படத்தில் கமர்ஷியல் கலந்து கொடுத்திருக்கிறோம்.. படத்தின் படப்பிடிப்பு சென்னை, மூணார், சாலக்குடி மற்றும் அசாம் மாநிலத்திலும்  நடக்கவுள்ளது…” என்றார்.


3  எட்டுதிக்கும்மதயானை- வருகிற 27 -ஆம் தேதி சிவ கார்த்திகேயன் நடித்துள்ள காக்கி சட்டை வெளியாகிறது. வஜ்ரம், மணல் நகரம், இரவும் பகலும், சொன்னாப் போச்சு போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் உடன் வெளியானாலும் காக்கி சட்டைக்கு இவை இணையானவையோ, போட்டியோ கிடையாது. 
 
இந்நிலையில் எட்டுத் திக்கும் மதயானை படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
 
ராட்டினம் படத்தை இயக்கிய தங்கசாமி இந்தப் படத்தை ஸ்டுடியோ 9 நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். இயக்கமும் அவரே. ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோ.
 
இந்தப் படத்துக்கு திரையுலகிலும் அதற்கு வெளியேயும் எதிர்பார்ப்பு உள்ளது. வரும் 27 எட்டுத் திக்கும் மதயானையை வெளியிடுவதாக அறிவித்திருப்பதால் காக்கி சட்டைக்கு ஒரு திடீர் எதிரி முளைத்திருக்கிறார். 


4  ஒருதலை ராகம் சங்கரை தமிழ்ரசிகர்கள் அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது. அவர் தற்போது மணல் நகரம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.  பிரஜின், தனிஷ்கா, கவுதம் உட்பட பலரும் இதில் நடித்துள்ளனர். டி.ஜே.எம் அசோசியேட்ஸ் சார்பில் எம்.ஐ.வசந்த் குமார் தயாரிக்கிறார். இந்தப் படம் பற்றி சங்கர் கூறியதாவது:
உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து படம் தயாரிப்பது சாதாரண காரியம் இல்லை. அதில் ஒரு காட்சியில் கூட கற்பனையாக காட்சி வைக்க முடியாது.
Manal Nagaram Movie Audio Launch Stills
இந்தப் படத்தின் கதைக்கு துபை பெரிய பின்புலமாக இருக்கும். அங்கு 60 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். கடுமையான வெயிலில் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்தனர். வறுமை காரணமாக இந்தியாவில் இருந்து துபாய் சென்று பணியாற்றும் மூன்று நண்பர்கள், அங்கு எதிர்பாராத சிக்கலில் மாட்டுகிறார்கள். அதில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது கதை. படத்தில் நட்புக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.


5   சினிமா உலகம்  - இந்தப்படம்  பற்றி  தகவல்  ஏதும் இல்லை



6  இரவும்பகலும்-
iravum-pagalum-varum
ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் ஏ.தணிகை வேல் வழங்க ஸ்கை டாட் பிக்சர்ஸ் சார்பாக பாலசுப்ரமணியம் பெரியசாமி தயாரிக்கும் படம் ‘இரவும் பகலும் வரும்’. பால ஸ்ரீராம் இயக்கும் இப்படத்திற்கு தினா இசையமைக்கிறார். ‘அங்காடித் தெரு’ மகேஷ், அனன்யா, ஏ.வெங்கடேஷ், ஜெகன், சாமிநாதன், யுவராணி, சஞ்சனா சிங், ஷகிலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் இயக்குனர் பால ஸ்ரீராம், பிரபல இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குனராகப் பல படங்களில் பணியாற்றியவர்.
படத்தைப் பற்றி இயக்குனர் பால ஸ்ரீராம் கூறுகையில்,
“பொறியியல் படிக்கும் ஒரு கல்லூரி மாணவன், எல்லோரும் மதிக்கும் வகையில் நல்ல முறையில் நடந்து கொள்ளும் நல்ல பண்புகளை கொண்டவன். காலையில் கல்லூரிக்கு செல்லும் கதாநாயகன், இரவில் மட்டும் திருடனாய் உலாவுகிறான். அவன் ஏன் திருடன் ஆனான்? எதற்காகத் திருடுகிறான் என்பதே ‘இரவும் பகலும் வரும்’ படத்தின் கதை.

எனது குரு ஏ.வெங்கடேஷ் எனது முதல் படத்திலேயே நடிக்கப் பெரிதும் ஒத்துழைப்பு கொடுத்தார். படத்தின் கதாநாயகி அனன்யாவிடம் கதையை சொல்லி முடித்த கனத்திலேயே 1 ரூபாயை முன் தொகையாகப் பெற்றுக் கொண்டு படத்தில் நடிக்க சம்மதித்து விட்டார்,” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் இயக்குனர் பால ஸ்ரீராம்.
இப்படத்தின் படப்பிடிப்பு  நாமக்கல், தொட்டியத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி, சென்னையின் முக்கிய இடங்கள் என சுமார் 50 நாட்கள் நடைபெற்றுள்ளது. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தற்கு தினா இசையமைக்கிறார்.

நன்றி  -  மாலைமலர்   தினமணி அனைத்து சினிமா  வெப்சைட்