Tuesday, December 30, 2014

கங்காரு - உயிர் சாமியின் அடுத்த கில்மாப்படமா?

வெற்றி என்றால் அனைவரும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். ஆனால், தோல்வி என்றால் இயக்குநர் தலையில் போட்டுவிடுவார்கள் என்று இயக்குநர் சாமி கூறினார். 



இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்காரு' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்படத்தின் ட்ரெய்லரை கலைப்புலி தாணு வெளியிட்டார். 


அவ்விழாவில் பேசிய இயக்குநர் சாமி, "நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்திருக்கிறேன். என் முந்தைய படங்கள் வேறு மாதிரி இருந்ததற்கு நான் மட்டும் காரணமல்ல. சினிமாவில் பலர் அறியாத விஷயம் ஒரு படம் எந்த மாதிரி வரும் என்பதை தனிநபர் முடிவு செய்ய முடியாது. இயக்குநர், தயாரிக்கும் தயாரிப்பாளர், நடிக்கும் நடிகர் எல்லாரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. 


இத்தனைக்கும் பிறகு வெற்றி என்றால் எல்லாரும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். தோல்வி என்றால் மட்டும் இயக்குநர் தலையில் போட்டுவிட்டு ஓடி விடுவார்கள். கங்காரு என் உதவி இயக்குநர் சாய்பிரசாத் சொன்ன கதை. சினிமாவில் ஞாபகம் வைக்கிற படமாக இருக்கும். 5 பாடல்கள் கவிஞர் வைரமுத்துவுக்கு தேசியவிருது கிடைக்கும். படத்தை தாணு வெளியிடுகிறார். அவரிடம் 2004ல் முன்பணம் வாங்கினேன். படம் இயக்க முடியவில்லை. 2015ல். 'கங்காரு'வை வெளியிடுகிறார். "என்றார். 


இப்படத்தை வெளியிடும் தாணு பேசும் போது, "பாசத்துக்காக ஓடிய படங்கள் வரிசையில் 'பாசமலர்' ,'முள்ளும்மலரும்' வரிசையில் நான் தயாரித்த 'கிழக்குச் சீமையிலே' படமும் அமைந்ததில் பெருமைப்படுகிறேன். அது 275 நாள் ஓடியது. 'கங்காரு' படத்தை முழுவதும் பார்த்துதான் வாங்கி வெளியிடுகிறேன். யாரும் எதிர்பார்க்க முடியாத 'கங்காரு' க்ளைமாக்ஸ் நிச்சயம் பேசப்படும.் படமும் வெற்றி பெறும் "என்றார். 

நன்றி - த இந்து